13 மாடி கனவு வீட்டை கட்டும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்து டாடா, ரிலையன்ஸ் முதல் சிறு டெக், கேமிங் நிறுவனங்கள் வரையில் தனது போர்ட்போலியோவை பல வருடங்களாகத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறார்.

 

இந்நிலையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தனது குடும்பத்திற்காக மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி வருகிறார். சாமானிய மக்களே சொந்த வீட்டை கட்டும் போது எவ்வளவு திட்டமிட்டு வாங்குகிறார்கள், அப்போ ராகேஷ் ஜூன்ஜூன்வாலா எப்படியெல்லாம் திட்டமிட்டு வீடு கட்டுவார்.

உண்மையில் சொல்லப்போனால் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தனது கனவு வீட்டையும் மிகுந்த திட்டமிடல் உடன் படிப்படியாகவே கட்டி வருகிறார்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பேவரைட் பங்கு.. வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்..!

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மிகப்பெரிய பணக்காரர் என்பதால் எடுத்த உடனே மும்பையில் முக்கியமான இடத்தில் அடிப்பிடித்து அதிக விலைக்கு நிலத்தை வாங்கி வீட்டை கட்டவில்லை. ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வது போலவே படிப்படியாக முதலீடு செய்துள்ளார்.

மலபார் மலை

மலபார் மலை

மும்பையில் மலபார் மலை பகுதியில் Ridgeway Apartments என்ற 12 மாடி கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் இரு வெளிநாட்டு வங்கிகள் கட்டுப்பாட்டில் இருப்பது மட்டும் அல்லாமல் நீண்ட காலமாக இதை வங்கி ஊழியர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த அப்பார்ட்மென்ட்டில் இருந்து மும்பை மரைன் ட்ரைவ் தெரியும் என்பது கூடுதல் சிறப்பு.

12 மாடி அப்பார்ட்மென்ட்
 

12 மாடி அப்பார்ட்மென்ட்

இந்நிலையில் 2013ல் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் தனது பங்கான 6 அப்பார்ட்மென்ட்-ஐ விற்பனை செய்ய முடிவு செய்தது. இதைத் தனியாக விற்பனை செய்தால் நிலம் பங்கீடு மிகவும் இருக்கும் இதனால் பெரும் பணக்காரர்களைக் கவர்ந்து அதிகத் தொகைக்கு 6 அப்பார்ட்மென்டை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்தது.

371 கோடி ரூபாய்

371 கோடி ரூபாய்

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நினைத்ததை போலவே 2013ஆம் ஆண்டு ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 176 கோடி ரூபாய் கொடுத்து இந்த 6 அடுக்குகள் கொண்ட அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கினார். இதேபோல் மீதமுள்ள 6 மாடியை HSBC நிறுவனத்திடம் இருந்து 195 கோடி ரூபாய்க்கு 2017ஆம் ஆண்டு வாங்கினார். இதன் மூலம் மொத்த அப்பார்ட்மென்ட்-ஐ கைப்பற்றினார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.

13 மாடி ஆடம்பர வீட்டை

13 மாடி ஆடம்பர வீட்டை

இதன் பின் மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு பெரிய பங்களா வீட்டை கட்ட திட்டமிட்டார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா. ஆனால் கடல் பார்வை பெற வேண்டும் என்பதற்காக 13 மாடி கொண்ட ஆடம்பர வீட்டை கட்ட முடிவு செய்து, அதற்கான கட்டுமான பணிகளை Aakar Architects என்றும் நிறுவனம் செய்து வருகிறது.

70000 சதுரடி வீடு

70000 சதுரடி வீடு

இந்த 13 மாடி கொண்ட வீடு மொத்தம் 70000 சதுரடியில் அமைய உள்ளது. 4வது மாடியில் பார்ட்டி, விழாக்கள் கொண்டாடப் பெரிய banquet hall, 8வது மாடியில் ஜிம், மசாஜ், 10வது மாடியில் 4 பெரிய பெட்ரூம் கொண்ட கெஸ்ட்ரூம்கள். 11வது மாடி பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

12வது மாடி

12வது மாடி

12வது மாடியில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா தங்குவதற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டில் எல்லா அறைகளும் மிகப்பெரிய வடிவத்தில் அமைய உள்ளது.

எல்லாமே ரொம்பப் பெருசு

எல்லாமே ரொம்பப் பெருசு

மும்பையில் சராசரி 1BHK வீட்டின் அளவை விடவும் பெரிய பாத்ரூம், சராசரி 2BHK வீட்டின் அளவை விட 20 சதவீதம் பெரிய பெட்ரூம், சராசரி 2BHK வீட்டின் அளவை விடவும் பெரிய அளவில் ஹால் மற்றும் டைனிங் ரூம் அமைய உள்ளது. மொட்டை மாடியில் காய்கறி தோட்டம், அவுட்டோர் சீட்டிங் டெக் ஆகியவை அமைய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rakesh Jhunjhunwala new 13-floor dream home in Mumbai; How he buys land from two banks

Rakesh Jhunjhunwala new 13-floor dream home in Mumbai; How he buys land from two banks 13 மாடி கனவு வீட்டை கட்டும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X