தனக்கு பிடித்த டைட்டன், டாடா கம்யூனிகேசன்ஸ் சேர்த்து 5 பங்குகளை விற்ற ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வருபவர்களில் மிகப் பிரபலமானவர். மிகப்பெரிய முதலீட்டாளர்கள்.

 

அவ்வப்போது பங்குகளை வாங்குவதும் விற்பதும் நடப்பது தான் என்றாலும், இவரின் போர்ட்போலியோ பங்குகளை வாங்குவதற்கே ஒரு குழு உண்டு.

ஏனெனில் அந்தளவுக்கு பங்கு சந்தையில் அனுபவம் மிக்கவர். பங்கு சந்தையில் லாபம் ஈட்டி வருபவர்.

2 மாதத்தில் 10 லட்சம் டாலர் சம்பாத்தியம்.. எல்லாத்தூக்கும் எலான் மஸ்க் தான் காரணம்..!

5 பங்குகள் விற்பனை

5 பங்குகள் விற்பனை

இப்படி பங்கு சந்தையில் ஊறிப்போன இவருக்கு மிக பிடித்தமான பங்கு டைட்டன் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ள நிலையில், அவருக்கு பிடித்தமான டைட்டன் உள்ளிட்ட 5 பங்குகளை மார்ச் காலாண்டில் விற்றுள்ளதாக தெரிகிறது. இது புராபிட் புக்கிங் காரணமாக விற்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

என்னென்ன பங்குகள்

என்னென்ன பங்குகள்

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா விற்றுள்ளதாக கூறப்படும் 5 பங்குகளில், டைட்டன், டாடா கம்யூனிகேஷன்ஸ், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், அயன் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட், பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூசன்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இதில் டைட்டன், டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்குகளை விற்றது நியாயமானதாக இருந்தாலும், மற்ற மூன்று பங்குகளான இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், அயன் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட், பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூசன்ஸ் நிறுவனங்களில் 1%க்கும் சற்று அதிகமாகவே இருந்தது.

டைட்டன் குறைப்பு
 

டைட்டன் குறைப்பு

டைட்டன் நிறுவனத்தில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வைத்திருந்த 5.32% பங்கிலிருந்து 5.06% ஆக டிசம்பர் 2020ல் குறைக்கப்பட்டது. இதில் ராகேஷ் 4.23% பங்குகளையும், ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா டைட்டனில் 1.09% பங்குகளையும் வைத்திருந்தனர், இந்த நிலையில் மார்ச் 2021 காலண்டில் டைட்டன் பங்கு 3.97% ஆக குறைந்துள்ளது. அவரின் மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலாவின் பங்கு 1.09% அப்படியே உள்ளது.

டாடா கம்யூனிகேசனில் எவ்வளவு?

டாடா கம்யூனிகேசனில் எவ்வளவு?

மற்றொரு டாடா குழும பங்கான டாடா கம்யூனிகேஷனில், டிசம்பர் 2020ல் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வசம் 1.12% பங்கு இருந்தது. இது மார்ச் 2021 காலாண்டில் 1.04% ஆக குறைந்துள்ளது. இந்த பங்கில் தனது மனைவியின் பேரில் முதலீடு செய்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

மற்ற நிறுவனங்களிலும் குறைப்பு

மற்ற நிறுவனங்களிலும் குறைப்பு

இதே இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், அயன் எக்ஸ்சேஞ்ச் (இந்தியா) லிமிடெட், பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் புராபிட் புக்கிங் செய்துள்ள நிலையில், அவரது பங்குகள் 1% குறைவாகவே தற்போது உள்ளது. ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவிடம் அயன் எக்ஸ்சேஞ்ச் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விகிதம் டிசம்பர் 2020ல் 5.29% ஆகவும், ரேகா ஜூன்ஜூன்வாலாவின் வசம் 1.35% பங்குகளும் இருந்தது. இதே இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் டிசம்பர் 2020ல் 1.10% பங்குகளும், பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் டிசம்பர் 2020ல் 1.29% பங்குகளும் இருந்தன. தற்போது இந்த பங்கு இருப்புகள் எல்லாமே 1% கீழாக குறைப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rakesh jhunjunwala slashed his stake in 5 companies

Rakesh jhunjunwala updates.. Rakesh jhunjunwala slashed his stake in 5 companies
Story first published: Tuesday, April 27, 2021, 21:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X