ரிசர்வ் வங்கி அதிரடி.. சுகாதார துறைக்கு ரூ.50,000 கோடி சலுகைகள்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று காரணமாக பொருளாதார சூழல் என்பது கடுமையாக மாறியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கொரோனா நிலையை கண்கானிக்கும்.

கொரோனா தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மார்ச் 2022 வரை மேம்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி 50,000 கோடி ரூபாய் பணப்புழக்கத்தினை அறிவிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

என்னென்ன சேவைகள்

என்னென்ன சேவைகள்

இதனை வங்கிகள் தடுப்பூசி உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், தடுப்பூசி சப்ளையர்கள், மருத்துவ உபகரணங்கள், ஹாஸ்பிட்டல்ஸ், மருந்தகங்கள், மருத்துவ ஆய்வகங்கள், ஆக்சிஜன் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளார்கள், கொரோனா தொடர்பான மருந்து இறக்குமதிகள், லாகிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அம்சங்களுக்காக இந்த பணப்புழக்கத்தினை அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்

ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்

மேலும் கொரோனாவால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் பொருளாதாரத்திற்கு மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

மைக்ரோ பைனான்ஸ்களுக்கு சலுகை
 

மைக்ரோ பைனான்ஸ்களுக்கு சலுகை

புதிய சவால்களைக் கருத்தில் கொண்டு, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்

இப்போது 500 கோடி ரூபாய் வரை சொத்து அளவு கொண்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு புதிய கடனளிப்பதைக் கருத்தில் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. அரசின் இந்த முன்னுரிமைத் துறை கடன், மார்ச் 31, 2022 வரை கிடைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளுக்கும் சலுகை

ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளுக்கும் சலுகை

சிறு, குறு மற்றும் பிற அமைப்புசாரா நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்காக, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளுக்கான சிறப்பு நீண்ட கால ரெப்போ நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது 3 ஆண்டு ரெப்போ செயல்பாடுகள் மூலம் 10,000 கோடி ரூபாய் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதியதாக கடன் வாங்கும் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது 31 அக்டோபர் 21 வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவகாசம் கொடுக்கலாம்

மீண்டும் அவகாசம் கொடுக்கலாம்

ஏற்கனவே மறுசீரமைப்பு மூலம் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தினை பெற்றவர்களுக்கு, மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கலாம் கூறியுள்ளது.

G- SAP 1.0 இன் கீழ் மொத்தம் ரூ.35,000 கோடிக்கு அரசு பத்திரங்களை இரண்டாவது முறையாக மே 20ம் தேதி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI announces Rs.50,000 crore funds tap for vaccine makers, hospitals, healthcare

RBI latest updates.. RBI announces Rs.50,000 crore funds tap for vaccine makers, hospitals, healthcare
Story first published: Wednesday, May 5, 2021, 13:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X