ஆர்பிஐ அறிவித்த 30,307 கோடி ரூபாய் ஈவுத்தொகை.. மத்திய அரசு கணிப்பு என்ன தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்ச் 31, 2022 உடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 30,307 கோடி ரூபாய் அளவிலான ஈவுத்தொகை மத்திய அரசுக்கு வழங்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆர்பிஐ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியைப் பல வகையில் திரட்டி வரும் நிலையில் ஆர்பிஐ வெள்ளிக்கிழமை சுமார 30307 கோடி ரூபாயை ஈவுத்தொகையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. களத்தில் இறங்கிய புடின் அரசு!

ஆர்பிஐ

ஆர்பிஐ

ஆர்பிஐ அதன் Contingency Risk Buffer விகிதமான 5.50 சதவீதத்தை நிலைநாட்டும் விதமாக 2021-22 கணக்கியல் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் உபரியாக இருக்கும் 30,307 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசுக்கு மாற்ற வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஈவுத்தொகை

ஈவுத்தொகை

2022ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகை, 2023ஆம் நிதியாண்டில் அளிக்கப்படுகிறது. மத்திய அரசு எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக உள்ளது. 2022 பட்ஜெட்டில், மத்திய வங்கி மற்றும் அரசு நடத்தும் கடன் வழங்குபவர்களிடமிருந்து டிவிடெண்டாக ரூ.73,948 கோடி கிடைக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

சக்திகாந்த தாஸ்
 

சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கி கவர்னர் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் 596வது கூட்டத்தில் ஈவுத்தொகை வழங்குவது குறித்த முடிவு எடுக்கப்பட்டு, ஆர்பிஐ அறிவித்துள்ளது.

நிதியாண்டு சீரமைத்தல்

நிதியாண்டு சீரமைத்தல்

கடந்த ஆண்டு மே மாதம், ஒன்பது மாத காலத்திற்கு (ஜூலை 2020 முதல் மார்ச் 2021 வரை) ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு சுமார் 99,122 கோடி ரூபாய் ஈவுத்தொகையைக் கொடுப்பதாக அறிவித்தது. ரிசர்வ் வங்கி தனது நிதியாண்டை அரசாங்கத்தின் நிதியாண்டுக்கு இணையாகச் சீரமைத்த காரணத்தால் 9 மாதங்களுக்கான தொகையை அளித்து. இதற்கு முன்பு ஆர்பிஐ ஜூலை - ஜூன் வரையிலான நிதியாண்டு காலத்தைப் பின்பற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஈவுத்தொகை

ஈவுத்தொகை

ஆர்பிஐ அரசின் நிதிகளை நிர்வாகம் செய்யும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்பிஐ பெறும் லாபம் அல்லது உபரி நிதியை மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக அளிக்கும். 1934ஆம் ஆண்டு ஆர்பிஐ துவங்கியது முதல் இந்த முறை தான் பின்பற்றி வருகிறது. 2019ஆம் நிதியாண்டுக்கு ஆர்பிஐ சுமார் 1,23,414 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஈவுத்தொகையாக மத்திய அரசுக்குக் கொடுத்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI approves transfer of Rs 30,307 crore as dividend to government for FY22

RBI approves transfer of Rs 30,307 crore as dividend to government for FY22 ஆர்பிஐ அறிவித்த 30,307 கோடி ரூபாய் ஈவுத்தொகை.. மத்திய அரசு கணிப்பு என்ன தெரியுமா..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X