இந்திய வங்கிகளில் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான கடன் மோசடி, விதிமுறைகளை மீறுதல், வங்கி கணக்கில் குளறுபடிகள் எனப் பிரச்சனைகளை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளது.
இதை வேளையில் இந்தியா முழுவதும் வங்கி சேவைகள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாகப் பல புதிய சேவைகளையும் கட்டமைப்புகளையும் அறிமுகம் செய்யப்பட்டது.
வங்கி சேவைகளின் விரிவாக்கத்தைப் பாதிக்காமல் ரிசர்வ் வங்கி நிர்வாக மேம்படுத்தல், கண்காணிப்பு பணிகளை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்தது. இதில் 5 NBFC வங்கிகள் விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சீனா-வின் ஆதிக்கத்தை உடைக்க அமெரிக்கா திட்டம்.. இந்திய உட்பட 12 நாடுகள் உடன் கூட்டணி..!

NBFC உரிமம் ரத்து
டிஜிட்டல் கடன் வழங்கும் திட்டத்தில் நியாயமான நடைமுறை குறியீடுகளை மீறியதாகவும், அவுட்சோர்சிங் தொடர்பான விதிமுறைகளை மீறியதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி 5 NBFCகளின் பதிவுச் சான்றிதழை (CoR) ரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

5 NBFC-க்கள்
NBFC எனப்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களான UMB செக்யூரிட்டீஸ் லிமிடெட், அனாஷ்ரி ஃபின்வெஸ்ட், சந்தா ஃபைனான்ஸ் (Chadha Finance), அலெக்ஸி டிராகான் மற்றும் ஜூரியா ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் பதிவு உரிமம் ரத்து செய்துள்ளது ஆர்பிஐ.

ஆர்பிஐ விளக்கம்
5 NBFC நிறுவனங்களின் பதிவு உரிமத்தை RBI வழிகாட்டுதல்கள் மற்றும் நியாயமான நடைமுறைகள் குறியீட்டை மீறியதன் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மூன்றாம் தரப்புப் பயன்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் கடன் நடவடிக்கைகளில் பொது நலனுக்குத் தீங்கு விளைவிப்பதை கண்டுபிடிக்கப்பட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதிக வட்டி
இந்த 5 நிறுவனங்கள் அதிக வட்டி வசூலிப்பது மூலம் ஆர்பிஐ விதிமுறைகளை மீறியது மட்டும் அல்லாமல், கடனை திரும்பப் பெறுவதில் வாடிக்கையாளர்களை (மக்களை) தேவையற்ற துன்புறுத்தலை அளித்துக் கடுப்படிக்கப்பட்டு உள்ளதும் விசாரணையில் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.

ரிசர்வ் வங்கி
இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், குறிப்பாகக் கிராமப்புறம் மற்றும் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் மக்களுக்கு வங்கி சேவைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக NBFC உருவாக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஆனால் இன்று சில NBFC-க்கள் அதிக வட்டி வசூலிப்பது மட்டும் அல்லாமல் கடன் வசூலிப்பதற்காக மக்களைத் துன்புறுத்துவது வருத்தம் அளிக்கிறது.