பேடிஎம், கூகிள் பே-க்குப் போட்டியாகக் களத்தில் இறங்கும் ஆர்பிஐ.. சபாஷ் சரியான போட்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் பணபரிமாற்றம் மக்கள் மத்தியில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது என்றால் மிகையில்லை. இதனால் இனி வரும் காலத்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் வளரும் என்பது மறுக்க முடியாது என்பதைத் தவிர்க முடியாதா ஒன்றாக மாறிவிட்டது.

 

இப்படி இருக்கையில் டிஜிட்டல் மற்றும் பேமெண்ட் தளத்தைச் சார்த்து இந்தியாவில் சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் போட்டியின் காரணமாக நாள்தோறும் உருவாகி வரும் நிலையில் இந்தப் போட்டியை மேலும் வலிமையாக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய முடிவை எடுத்துள்ளது.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா

இந்திய பேமெண்ட் சந்தையில் இருக்கும் பேடிஎம், கூகிள் பே, போன் பே, அடுத்தச் சில வாரத்தில் வரவிருக்கும் வாட்ஸ்அப் பே என எல்லாவற்றுக்கும் ஒரே போட்டியாளராக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய திட்டத்தை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இப்புதிய திட்டத்தின் படி ஒரு வாடிக்கையாளர் 10,000 ரூபாய் வரையிலான சரக்கு மற்றும் சேவையை ப்ரீபெய்டு தளத்தைப் பேமெண்ட்-க்காகப் பயன்படுத்த ஏதுவாக அமைப்பை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது.

வங்கி முதல் வங்கி

வங்கி முதல் வங்கி

மேலும் இந்தப் பணம் வங்கியில் இருந்து வங்கிக்கு மட்டுமே செல்லும் வகையில் அமைக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் பேண்மெண்ட் தளத்தின் மூலம் பில் கட்டணம், கடையில் பொருட்களை வாங்குதல், போன்ற அனைத்து வகையில் தினசரி பணப் பரிமாற்றங்களைச் செய்துக்கொள்ள முடியும்.

இதன் மூலம் தற்போது சந்தையில் இருக்கும் பேமெண்ட் செயலிகளில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும்.

எளிய வழிமுறை
 

எளிய வழிமுறை

இப்புதிய பேமெண்ட் சேவை பயன்படுத்த வாடிக்கையாளர்களிடம் குறைந்த அளவிலான தகவல்கள் மட்டுமே கோரப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இச்சேவை பற்றிய முழு விபரத்தை டிசம்பர் அதாவது இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

தற்போது இந்தியாவில் செய்யப்படும் பெரும்பாலான டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அனைத்தும் யூபிஐ வாயிலாகவே நடைபெறுகிறது. அதாவது கூகிள் பே, பேடிஎம், மொபிவிக், ஹெடிஎப்சி வங்கியின் PayZapp, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் Yono ஆகிய அனைத்தும் UPI வாயிலாகத் தான் நடக்கிறது.

அதிரடி வளர்ச்சி

அதிரடி வளர்ச்சி

மேலும் தற்போது உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற துறையின் வளர்ச்சி இந்தியாவில் மிகவும் அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவை 30 முதல் 40 சதவீத மக்களுக்கு மட்டும் சென்றடைந்துள்ளது. மீதமுள்ள 60 சதவீத மக்களும் வளர்ச்சி அளவீடு தான்.

சீனாவில் தற்போது 90 சதவீத மக்களிடையே டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தான் உள்ளது. அப்படிப் பார்த்தால் இந்தியா மிகப்பெரிய அளவில் பின்தங்கியுள்ளோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI getting ready for big fight Paytm, GooglePay

The Reserve Bank of India (RBI) on Thursday proposed a new pre-paid instrument for payments up to ₹10,000 for buying goods and services. The central bank has said the loading /reloading of such pre-paid instrument will be only from a bank account and used for making only digital payments such as bill payments, merchant payments, etc.
Story first published: Thursday, December 5, 2019, 19:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X