ரிசர்வ் வங்கி நிதி குறித்த FI இன்டெக்ஸ் அறிமுகம்.. முக்கிய விவரங்கள் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் வங்கி நிதி சேர்க்கை குறியீடு(FI இன்டெக்ஸ் ) தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

 
ரிசர்வ் வங்கி நிதி குறித்த FI இன்டெக்ஸ் அறிமுகம்.. முக்கிய விவரங்கள் இதோ..!

முந்தைய நிதியாண்டினை பற்றிய அறிவிப்பினை ஜூலை மாதத்தில் ஆண்டுதோறும், ஒரு நிதி சேர்க்கை அட்டவணை (FI Index) வெளியிடுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிதி சேர்க்கை அட்டவணை பல அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டது.

இது நாட்டின் நிதி சேர்க்கையின் விரிவாக்கம் மற்றும் நிதி நிலையை பிரதிபலிக்கும், இது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் குறித்த அறிக்கை எனவும் தெரிவித்துள்ளது.

ரூ.75 லட்சம் வீட்டுக் கடன்.. எந்த அரசு வங்கியில் வட்டி குறைவு.. எங்கு வாங்கலாம்..!

நாட்டில் நிதி சேர்க்கையின் அளவை அளவிட, ரிசர்வ் வங்கி பல அளவுருக்களின் அடிப்படையில் நிதி சேர்க்கை குறியீட்டை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் இருமாத பணவியல் கொள்கையில் செய்யப்பட்ட அறிவிப்புகளின் ஒரு பகுதியாகும்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, வங்கி மற்றும் முதலீடுகள், ஓய்வூதியத் துறை உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான குறியீடாக இந்த எஃப்.ஐ இன்டெக்ஸ் இருக்கும். இது குறித்து அந்தந்த துறை சார்ந்த ஆலோசகர்களுடன் ஆலோசிக்கப்பட்டதாக இருக்கும்.

இந்த குறியீடு 0 - 100 வரையிலான மதிப்புடையதாக இருக்கும். 0 என்பது முழுமையான நிதி விலக்கினையும், 100 என்பது முழு நிதி சேர்க்கையினையும் குறிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த எஃப்.ஐ இன்டெக்ஸ் அணுகல் (access), பயன்பாடு (usage), தரம் (quality) உள்ளிட்ட அளவுருக்களைக் பல பரிமாணங்களில் கொண்டிருக்கும்.

இந்த எஃப்.ஐ இன்டெக்ஸ் எந்த அடிப்படை ஆண்டும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது பல பங்குதாரர்களின் நிதி சேர்க்கைக்கான ஒட்டுமொத்த முயற்சிகளை பிரதிபலிக்கிறது.

இது கடந்த மார்ச் 2021வுடன் முடிவடைந்த ஆண்டில் 53.9 ஆக உள்ளது. இது கடந்த மார்ச் 2017வுடன் முடிவடைந்த ஆண்டில் 43.4 ஆக இருந்தது. இது கடந்த 4 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றத்தினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இந்த குறியீடு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ
English summary

RBI introduces FI Index; check important things

RBI latest updates.. RBI introduces financial Inclusion Index; check important things
Story first published: Tuesday, August 17, 2021, 19:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X