இனி ஒத்த வீடியோ போதுமாம்..! ஆர்பிஐ அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்றைய நாளில் வங்கி கணக்கு முதல், டீமேட், பான் கார்டு முதல் அனைத்து செயல்முறைக்கும் கேஒய்சி என்ற வாடிக்கையாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் வரையறைகள் உள்ளது.

 

நாட்டில் ஒரு புறம் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், நாட்டை எப்படியேனும் நாட்டை டிஜிட்டல் மையமாக்கியே தீருவோம், கறுப்பு பணத்தை முடக்கியே தீருவோம் என கங்கனம் கட்டி கொண்டு அலைகிறது மத்திய அரசு.

இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் பற்றி அறியும் கேஒய்சி முறையில் பல திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது.

வீடியோ அடிப்படையிலான அடையாள செயல்முறை

வீடியோ அடிப்படையிலான அடையாள செயல்முறை

வங்கிகளையும், மேலும் ஒழுபடுத்தப்பட்ட பிற கடன் வழங்கும் நிறுவனங்களையும் வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளார்கள் அடையாள செயல்முறையில் (V-CIP) செயல்பட அனுமதிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

வசதியாக இருக்கும்

வசதியாக இருக்கும்

இந்த வீடியோ அடிப்படையிலான செயல்முறைகள் வங்கிகளுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் செயல்முறைக்கு மிகவும் எளிதாக இருக்கும். அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். இதுகுறித்து ஆர்பிஐ கூறுகையில், ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நிறுவனங்கள் வீடியோ பதிவினை பாதுகாப்பான முறையில் சேமிக்கப்பட்டு, தேதி மற்றும் நேர முத்திரையை தாங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தகவல்கள் உறுதி செய்யப்படும்
 

தகவல்கள் உறுதி செய்யப்படும்

மேலும் இவ்வாறு வீடியோக்கள் மூலம் எடுக்கப்படும் விவரங்களும் வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட தகவல்களையும் ஒப்பிட்டு, இறுதியில் தகவல்கள் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தவறான தகவல்களை அளித்து மோசடி செய்யும் நிலை தவிர்க்கப்படலாம் என்றும், மோசடிகள் தவிர்க்கப்படலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பணமோசடி தடுப்பு விதிகள்

பணமோசடி தடுப்பு விதிகள்

கடந்த ஆண்டு பண மோசடி தடுப்பு விதிகள், 2005ல் அறிவிக்கப்பட்ட விதிகளில் திருத்தம் கண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிசர்வ் வங்கியானது வாடிக்கையாளர் அடையாளத்தை நிறுவுவதற்கான ஒப்புதல் அடைப்படையிலான மாற்று முறையாக, வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளர் அடையாள செயலாக்கத்தை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடுமையான விதிமுறைகள்

கடுமையான விதிமுறைகள்

மேலும் பான் கார்டுக்காக வாடிக்கையாளரால், ஈ பான் வழங்கப்பட்ட சந்தர்பங்கள் தவிர, செயல்பாட்டின் போது காண்பிக்கப்பட வேண்டிய பான் கார்டின் படத்தை தெளிவாக அறிக்கையில் அல்லது நிறுவனங்கள் கைப்பற்ற வேண்டும். இதெல்லாவற்றயும் விட பான் விவரங்களை வழங்கும் தரவுத் தளத்திலிருந்து சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது ஆர்பிஐ.

விவரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்

விவரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்

மேலும் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் உடல் ரீதியாக இருப்பதை உறுதி செய்ய வாடிக்கையாளரின் நேரடி இருப்பிடம் (Geotagging) அறியப்படும். இது தவிர அதிகாரப்பூர்வ நிறுவன அறிக்கையிடம் ஆதான்/ பான் விவரங்களில் வாடிக்கையளரின் புகைப்படங்கள். விசிஐபி முறையில் மேற்கொள்ளும் வாடிக்கையாளருடன் பொருந்துகிறதா என்பதையும், ஆதார்/பான் விவரங்களுடன் பொருந்துகிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மோசடிகள் குறையலாம்

மோசடிகள் குறையலாம்

இதனால் பண மோசடி மற்றும் பல மோசடிகள் தவிர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ந்து வர வர, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பண மோசடிகள் சொல்லவே வேண்டாம். இப்படி ஒரு நிலையில் ஆர்பிஐ இப்படி ஒரு விதிமுறைகளைக் கொண்டு வந்திருப்பது நிச்சயம் நல்ல வரவேற்பை பெறலாம். இது வரவேற்க தக்க ஒரு விஷயமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI officially said introduces video based identification process for KYC

RBI officially said introduces video based identification process for KYC. And pan details should be must verify from database of the issuing authority. And some other regulations are given by RBI.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X