கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பினால் மிகவும் மோசமான கடினமான காலகட்டமாக அமைந்தது. குறிப்பாக பொருளாதாரத்தில் மிக பின்னடைவை சந்தித்தது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், பாதிப்பினைக் குறைக்க உதவியது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
அதோடு நிதி ஸ்திரத்தன்மையில் எந்தவொரு சமரசமும் செய்யாமல் வளர்ச்சியை ஆதரிக்க, தேவையான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி உறுதியுடன் உள்ளது எனவும் தாஸ் கூறியுள்ளார்.
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!

நிதி ஸ்திரத்தன்மை
நிதி ஸ்திரத்தன்மை என்பது பொதுவாக அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு விஷயமாகும். அதன் வலுவான தன்மை, அதனுடன் தொடர்புடைய அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சியை நாம் ஆதரிக்க வேண்டும். நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

ரிசர்வ் வங்கி தயார்
அதோடு நிதி ஸ்திரத்தன்மையில் சமரசம் செய்யாமல், வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான, எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. அனைத்து வங்கிகளையும், வங்கி சாரா நிதி நிறுவனங்களையும், கொரோனா பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யுமாறு அறிவுரை வழங்கினோம்.

மூலதனம் திரட்ட அனுமதி
குறிப்பாக அவற்றின் பண இருப்பு நிலை, பணப்புழக்கம். சொத்துக்களின் தரம், மூலதனம் போன்றவற்றில் கொரோனாவின் பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யச் கூறியுள்ளோம். ஒரு சில பெரிய பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் ஏற்கனவே தேவையான மூலதனத்தை திரட்டி உள்ளன. மேலும் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளன.

வங்கிகளுக்கு அழுத்தம்
கொரோனா காரணமாக செயல்படாத சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இது வங்கிகளுக்கு மேலும் அழுத்தத்தினை உருவாக்கியுள்ளது. ஆக நிதி நிலையை சீராக வைத்திருக்க, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி
நிறுவனங்கள் போதிய நிதியை திரட்டிக் கொள்ள வேண்டும். இது வங்கிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.

திறம்பட செயல்பட வேண்டும்
கொரோனாவின் காரணமாக வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அழுத்தத்தில் உள்ளன. ஆனால் இவை நெருக்கமாக பிணைந்திருக்க வேண்டும். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அவற்றை நெருக்கமாக கண்டறிந்து, அவற்றை உன்னிப்பாக கண்கானித்து திறம்பட நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறினார்.