போகாதீங்க அனில் அம்பானி.. ஆர்காமை விட்டு போகாதீங்க.. கெஞ்சும் கடன் வழங்குநர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அண்ணன் முகேஷ் அம்பானியோ சொத்து மேல் சொத்து வாங்கிக் கொண்டிருக்க, தம்பி அனில் அம்பானியோ கடன் பிரச்சனையால் மறுபுறம் சொத்தை தொடர்ந்து விற்று வருகிறார்.

 

இந்த நிலையில் தொடர்ந்து சரிந்து வரும் அனில் அம்பானியில் சொத்துக்கு சொத்தான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத இரண்டாவது காலாண்டில் 30,000 கோடி ரூபாய் நஷ்டம் கண்டது.

நான் ராஜினாமா செய்கிறேன்

நான் ராஜினாமா செய்கிறேன்

இத்தனை பிரச்சனைக்கும் மத்தியில் தான் இனியும் எந்தவொரு பிரச்சனையும் வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தார். இந்த நிலையில் ஆர்காம் பிரச்சனையில் இருந்து விலக நினைத்தார். இதனால் அனில் அம்பானி உள்பட 5 பேர் தங்களது பணியினை ராஜினாமா செய்வதாக கூறினர். இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு கடன் வழங்கிய கடன் வழங்குநர்கள் திவால் நிலை முடிவடையும் வரை, அவர்கள் ஐந்து பேரையும் ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டது.

யார் யார் ராஜினாமா?

யார் யார் ராஜினாமா?

அனில் அம்பானி, சாயா விரானி, ரெய்னா கரானி, மஞ்சரி கக்கர், சுரேஷ் ரங்காசார் என ஐந்து பேரும் ராஜினாமா செய்தார்கள். இவர்களோடு சேர்ந்து ஆர்காம் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிலும் இருந்த மணிகண்டனும் ராஜினாமா செய்தும் இருந்தார்கள். பிஎஸ்இ-ஸிக்கு தாக்கல் செய்த அறிக்கையில், நவம்பர் 20 அன்று கடன் வழங்குநர்கள் குழு தெரிவித்திருந்தது.

தொடர்ந்து செயலாற்ற வேண்டும்
 

தொடர்ந்து செயலாற்ற வேண்டும்

இந்த நிலையில் இவர்களின் ஒருமித்த கருத்தை வெளிபடுத்தினார்கள் கடன் வழங்குனர்கள். மேலும் இயக்குனர்கள் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் தொடர் செய்ய வேண்டும். இந்த கார்ப்பரேட் நிறுவனத்தினை நொடித்து தீர்க்கும் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்றும் கடன் வழங்குநர்கள் தெரிவித்துள்ளனராம்.

கொஞ்சம் பொறுங்களேன்

கொஞ்சம் பொறுங்களேன்

சட்ட ரீதியான நிலுவைத் தொகை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், கடன்களுக்கான் ஏற்பாடு காரணமாக செப்டம்பர் 2019 காலாண்டில் 30142 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த இழப்பை ஆர்காம் பதிவு செய்திருந்தது. இந்த நிலையிலேயே இந்த 5 பேரும் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தனர். இந்த நிலையில் திவால் நிலை முடியும் வரை இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளதும் கவனிக்கதக்க விஷயமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RCom lenders rejected Ambani and other four member’s resignation

Anil Ambani’s Rcom reported Rs.30,000 cr loff for last sep 2019, so anil ambani and other four board members resigned but Rcom lenders not accepted this resignation, They asked for them to cooperate in the ongoing corporate insolvency resolution process.
Story first published: Sunday, November 24, 2019, 18:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X