ஸ்விக்கி உடன் கைகோர்த்த முகேஷ் அம்பானி.. புதிய திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி தனது டெலிவரி வாகனங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணியில் இயங்கும் ரிலையன்ஸ் BP மொபிலிட்டி லிமிடெட் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

இந்த ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் BP மொபிலிட்டி லிமிடெட் தனது வர்த்தகத்தை நாடு முழுவதும் சோதனை திட்டத்தின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. !

 ரிலையன்ஸ் BP மொபிலிட்டி

ரிலையன்ஸ் BP மொபிலிட்டி

ரிலையன்ஸ் BP மொபிலிட்டி மற்றும் ஸ்விக்கி நிறுவனத்திற்கு மத்தியில் நடந்த ஒப்பந்தம் படி, ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்-க்கு மொபிலிட்டி எகோசிஸ்டம் உருவாக்கிக் கொடுக்க உள்ளது, இந்தத் திட்டத்திற்கான சோதனை திட்டம் ஏற்கனவே துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஸ்விக்கி-க்கு லாபம்

ஸ்விக்கி-க்கு லாபம்

இந்தக் கூட்டணி மூலம் ஸ்விக்கி அடுத்த 4 வருடத்தில் சுமார் தினமும் 8 லட்சம் கிலோமீட்டர் அளவிலான டெலிவரி சேவையை எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஸ்விக்கி சுற்றுச்சூழல் மட்டுமல்ல செலவு செய்யும் அளவீட்டையும் பெரிய அளவில் குறைக்க உள்ளது.

 பெரிய வாய்ப்பு
 

பெரிய வாய்ப்பு

ஸ்விக்கி நிறுவனம் ரிலையன்ஸ் BP மொபிலிட்டி திட்டத்தின் படி எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தினால் சுமார் 40 சதவீதம் செலவுகளைக் குறைக்க முடியும். பெட்ரோல் வாகனங்களுக்குப் பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் டெலிவரி பார்ட்னர் அதாவது டெலிவரி பாய்ஸ்-க்குக் கொடுக்கப்படும் கட்டணம் பாதியாகக் குறையும். இது ஸ்விக்கி நிறுவனத்திற்குப் பெரிய வாய்ப்பு தான்.

 80 முதல் 100 கிலோமீட்டர் பயணம்

80 முதல் 100 கிலோமீட்டர் பயணம்

ஸ்விக்கி நிறுவனம் அளித்துள்ள தரவுகள் அடிப்படையில் இந்நிறுவனத்தின் டெலிவரி பார்ட்னர் சராசரியாக ஒரு நாளுக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வரையில் பயணம் செய்கிறார்கள். இப்படியிருக்கும் போது இந்த 100 கிலோமீட்டர் பயணச் செலவை எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும். இதன் மூலம் டெலிவரி பார்ட்னரின் வருமானமும் குறையும்.

 ஜியோ BP நெட்வொர்க் - ஸ்விக்கி நெட்வொர்க் ஆப் டெலிவரி

ஜியோ BP நெட்வொர்க் - ஸ்விக்கி நெட்வொர்க் ஆப் டெலிவரி

ஜியோ BP நெட்வொர்க் துவங்கியுள்ள பேட்டரி ஸ்வாப் ஸ்டேஷன் (Swap Station) மற்றும் ஸ்விக்கி நெட்வொர்க் ஆப் டெலிவரி இணைந்து செயல்படுவதன் மூலம் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்-கள் எவ்விதமான பிரச்சனையுமின்றிப் பேட்டரியை மாற்றிக்கொள்ள முடியும்.

 ரிலையன்ஸ் BP மொபிலிட்டி நிர்வாகம்

ரிலையன்ஸ் BP மொபிலிட்டி நிர்வாகம்

இந்த மொத்த பேட்டரி ஸ்வாப் ஸ்டேஷன், ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர்-க்குப் பயிற்சி, இதன் நிர்வாகம், டிராக்கிங் போன்ற அனைத்து பணிகளையும் ரிலையன்ஸ் BP மொபிலிட்டி நிர்வாகத்தின் கீழ் இயங்க உள்ளது.

 பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை

பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே பேட்டரி தயாரிப்புக்குப் புதிதாகத் தொழிற்சாலையைத் துவங்கியுள்ள நிலையில் ரிலையன்ஸ் BP மொபிலிட்டி செய்துள்ள இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பெரிய லாபமாக இருக்கப் போகிறது.

 ஸ்மார்ட்டான மூவ்

ஸ்மார்ட்டான மூவ்

உதாரணமாக ஸ்விக்கியை விடவும் அதிகமாக டெலிவரி பார்ட்னர்களை வைத்துள்ள சோமேட்டோ உடன் கூட்டணி வைக்காமல் சோமேட்டோ ஐபிஓ-க்கு பிறகு என்ன செய்வது எனத் தெரியாமல் புலம்பிக்கொண்டு இருக்கும் ஸ்விக்கி-ஐ ரிலையன்ஸ் தேர்வு செய்துள்ளது தான் ஸ்மார்ட்டான மூவ்.

 எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துதல்

எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துதல்

மேலும் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த மக்களையும் நிறுவனங்களை ஊக்குவிக்க இது மிக முக்கியமான திட்டமாக இருக்கும். ரிலையன்ஸ் சரியான காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance BP Mobility join with Swiggy to create big boom on EV adoption in india

Reliance BP Mobility join with Swiggy to create big boom on EV adoption in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X