ரிலையன்ஸின் அடுத்த MD போட்டியில் இந்த மூன்று பேரா..? நிச்சயம் அம்பானி இல்லையாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் பதவிக்கு ஆள் தேடிக் கொண்டு இருக்கிறார் முகேஷ் அம்பானி.

சமீபத்தில் இந்திய பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் செபி அமைப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டு இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான தலைமைப் பதவிகளை பிரிக்கச் சொல்லி இருக்கிறது.

இந்த விதி, முன்பே குறிப்பிட்டது போல ஏப்ரல் 01, 2020-ல் நடைமுறைக்கு வந்தால் ரிலையன்ஸ் குழுமத்தின் புதிய நிர்வாக இயக்குநரைப் பார்க்கலாம்.

விதி
 

விதி

செபியின் புதிய விதி என்ன சொல்கிறது..? சுருக்கமாக, அதாவது ஒரே நபர், ஒரு கம்பெனியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை வகிக்கக் கூடாது எனச் சொல்லி இருக்கிறது. எனவே தான் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை பிரித்து, தனி தனி நபர்களுக்கு கொடுக்க வேண்டி இருக்கிறது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

இத்தனை நாளாக, முகேஷ் அம்பானி தான், இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து நிறுவனத்தை வழி நடத்தினார். இப்போது செபி உத்தரவால், தன் பதவிக்கு அடுத்த நபரைத் தேடத் தொடங்கி இருக்கிறார்.

யார் எல்லாம் இருக்கிறார்கள்

யார் எல்லாம் இருக்கிறார்கள்

1. ஹிதல் மேஸ்வானி

2. நிகில் மேஸ்வானி

3. பி எம் எஸ் பிரசாத்

ஆகிய மூன்று பேர், ரிலையன்ஸ் குழுமத்தின் அடுத்த நிர்வாக இயக்குநராக வர வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இப்போது இந்த மூன்று பேரைப் பற்றித் தான் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

1. ஹிதல் மேஸ்வானி
 

1. ஹிதல் மேஸ்வானி

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். வார்டன் பிசினஸ் பள்ளியில் பொருளாதார பட்டம் பெற்றவர். 1990-ம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநர் குழுவில் இருக்கிறார். 1994-ம் ஆண்டு முதல் செயல் இயக்குநராக பதவியில் இருக்கிறார். திருபாய் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தைத் தொடங்கிய போதே, ஹிதல் மேஸ்வானியின் தந்தை ரசிக்லால் மேஸ்வானி ரிலையன்ஸின் இயக்குநர் குழுவில் இருந்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹிதல் 2

ஹிதல் 2

பெட்ரோல் சுத்திகரிப்பு,

பெட்ரோகெமிக்கல் உற்பத்தி,

வியாபாரங்களை சந்தைப்படுத்துவது,

மனித வள மேம்பாடு,

ஐடி,

ஆராய்ச்சி & தொழில்நுட்பம் என ரிலையன்ஸ் குழுமத்தின் பல முக்கிய வேலைகளை ஹிதல் மேஸ்வானி தான் செய்து வருகிறாராம். உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவியது மற்றும் செயல்பாட்டில் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. நிகில் மேஸ்வானி

2. நிகில் மேஸ்வானி

இவரும் ஒரு கெமிக்கல் இன்ஜினியர். 1986-ல் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கிறார். தற்போது ரிலையன்ஸின் செயல் இயக்குநர்களில் ஒருவர். இவரும் ஹிதல் மேஸ்வானியும் சகோதரர்கள். ரிலையன்ஸின் பெட்ரோகெமிக்கல் பிரிவு இவர் பொறுப்பு. இன்று, உலகிலேயே பெட்ரோகெமிக்கல் வியாபாரத்தில் ரிலையன்ஸ் தான் பாஷா பாய்.

நிகில் 2

நிகில் 2

கடந்த 1997 முதல் 2005 வரை ரிலையன்ஸின் சுத்திகரிப்பு வியாபாரத்தை கவனித்து இருக்கிறார். கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் ரிலையன்ஸ் குழும வரி விவகாரங்களை இவர் கவனித்து வருகிறாராம். மத்திய வணிக அமைச்சகத்தின் வர்த்தக வாரியத்திலும் (Board of Trade) உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் முகேஷ் அம்பானியின் வலது கரம் என்றும் செய்திகள் வந்திருக்கின்றன.

3. பி எம் எஸ் பிரசாத்

3. பி எம் எஸ் பிரசாத்

அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரி. நம் அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் படித்து இருக்கிறார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் செயல் இயக்குநராக பதவியில் இருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பல வியாபாரங்களுக்கு கடந்த 38 வருடங்களாக பல பதவிகளில் பணியாற்றி இருக்கிறார்.

பிரசாத் 2

பிரசாத் 2

ரிலையன்ஸ் குழுமத்தின் ஃபைபர், பெட்ரோகெமிக்கல், சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல், எண்ணெய் எடுத்தல் மற்றும் எண்ணெய் உற்பத்தி என பல பிரிவுகளில் வேலை பார்த்த தேர்ந்த அனுபவசாலியாம். நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்மெண்ட்ஸ், டிவி 18 பிராட்காஸ்ட் போன்ற கம்பெனிகளுக்கு இவர் தான் இயக்குநராம்.

அம்பானி அல்ல

அம்பானி அல்ல

இந்த 3 பேருடன், மனோஜ் மோடி என்பவர் பெயரும் அடிபட்டு வருகிறது. ஆனால் நிச்சயம் அம்பானி குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் எம்டி பதவிக்கு வரமாட்டார் எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. முறையாக செபியின் இந்த விதிமுறைகள் ஏப்ரல் 01, 2020-ல் அமல்படுத்தப்பட்டால், இன்னும் சில வாரங்களில், ரிலையன்ஸ் குழுமத்தின் அடுத்த நிர்வாக இயக்குநர் யார்..?எனத் தெரிந்து விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reliance industries company next md race

Reliance industries limited head mukesh ambani is in a process to select the next Managing director for his company. Hital meswani, Nikhil meswani, PMS Prasad, Manoj modi is in the race.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X