டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு அதிக இழப்பு.. லாபத்தில் பார்தி ஏர்டெல், ஐடிசி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பங்கு சந்தைகளில் சந்தை மதிப்பு என்பது பொதுவாக வர்த்தக நிறுவனத்தின் சந்தை மூலதனத்தினை குறிக்கும் ஒரு சொல் ஆகும்.

 

அதாவது தற்போதைய பங்கு விலையால், அதன் நிலுவையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையை பெருக்கினால் கிடைக்கும் மதிப்பே சந்தை மதிப்பு எனப்படுகிறது.

சந்தை மதிப்பு என்பது சந்தையில் ஒரு சொத்து பெறும் விலை. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதலீட்டாளர்களின் வணிக வாய்ப்புகளைப் பற்றிய நல்ல அறிகுறி என்றும் கூறுவார்கள்.

கொரோனாவால் அடி வாங்கும் நிறுவனம்

கொரோனாவால் அடி வாங்கும் நிறுவனம்

ஆனால் நாட்டில் நிலவி வரும் கொரோனா ரணகளத்தின் மத்தியில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட அடி வாங்கி வருகின்றன என்பதற்கு இதுவே சாட்சியாகும். இன்னும் சொல்லப் போனால் சிலர் சந்தையினை பற்றி நன்கு அறிந்தவர்கள் இதனை வைத்தே, பங்குகள் மற்றும் எதிர்காலம் போன்ற பரிமாற்ற வர்த்தக கருவிகளை தீர்மானிப்பார்கள்.

ரிலையன்ஸிக்கு அதிக இழப்பு

ரிலையன்ஸிக்கு அதிக இழப்பு

இந்த நிலையில் கடந்த வாரத்தில் வர்த்தகமான விலையினை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டாப் 10 நிறுவனங்களில் அதிக இழப்பினை சந்தித்துள்ளது தி கிரேட் ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் தான். இந்த டாப் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பீட்டில் 1,37,311.31 கோடி ரூபாயினை இழந்துள்ளன.

லாத்தில் பார்தி ஏர்டெல், ஐடிசி
 

லாத்தில் பார்தி ஏர்டெல், ஐடிசி

அதிலும் இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் தான் டாப் நிலையில் உள்ளது. ஆனால் இதே பார்தி ஏர்டெல் மற்றும் ஐடிசி நிறுவனங்கள் மட்டுமே சற்று லாபத்தில் உள்ளன. குறிப்பாக ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 65,232.46 கோடி ரூபாய் குறைந்து, 9,24,855.56 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கியும் அடங்கும்

ஹெச்டிஎஃப்சி வங்கியும் அடங்கும்

இதே தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு 22,347.07 கோடி ரூபாய் குறைந்து, 4,87,083.88 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 13,192.26 கோடி ரூபாய் குறைந்து, 4,77,458.89 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இவங்களுக்கெல்லாம் இழப்பு தான்

இவங்களுக்கெல்லாம் இழப்பு தான்

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 9,770.06 கோடி ரூபாயாக குறைந்து, 2,08,900.79 கோடி ரூபாயாக சந்தை மதிப்பானது குறைந்துள்ளது. இதோடு இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 9,518.54 கோடி ரூபாய் சரிந்து, 2,77,814.09 கோடி ரூபாயினை எட்டியது. இதே ஹெச்டிஎஃப்சி 9,370.38 கோடி ரூபாயினை குறைந்து, 2,83,293.70 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.

யாருக்கு எவ்வளவு இழப்பு?

யாருக்கு எவ்வளவு இழப்பு?

கோடாக் மகேந்திரா வங்கியானது 7,805.2 கோடி ரூபாய் குறைந்து., 2,25,327.22 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 75.04 கோடி ரூபாய் குறைந்து 7,10,439 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே பார்தி ஏர்டெல் நிறுவனம் 13,147.89 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்து, 3,02,292.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சென்செக்ஸ் வீழ்ச்சி

சென்செக்ஸ் வீழ்ச்சி

ஐடிசியின் சந்தை மதிப்பானது 7,744.11 கோடி ரூபாய் அதிகரித்து 2,02,330.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 1.72% குறைந்து 544.97 புள்ளிகள் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance industries hit worst in top 10 Indian firms

Reliance industries market valuation slashed Rs.65,232.46 crore to Rs.9,24,855.56 crore in last week, at this same time Bharti airtel and ITC surged market values.
Story first published: Sunday, May 17, 2020, 18:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X