முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா பிளான்.. சோலார் நிறுவனத்தில் ரூ.5,000 கோடிக்கு மேல் புதிய முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி வணிக குழுமமான ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், பல்வேறு அண்டை நாடுகளில் முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளது.

 

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தி வருகின்றது. பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணியும் வைத்து வருகின்றது.

குறிப்பாக எண்ணெய், டிஜிட்டல் மற்றும் தொலைத் தொடர்பு துறையில் மாபெரும் திட்டத்தினை தீட்டி வந்த முகேஷ் அம்பானியின் நிறுவனம், தற்போது சமீப காலமாக பசுமை ஆற்றலிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

சீன பிடியிலிருக்கும் ஐரோப்பிய நிறுவனத்தை வாங்கும் முகேஷ் அம்பானி.. 8,800 கோடி ரூபாய் டீல்..!

கிளீன் பவருக்காக முதலீடு

கிளீன் பவருக்காக முதலீடு

சமீபத்தில் தான் முகேஷ் அம்பானி கிளீன் பவர் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்திக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 75,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார். மேலும் உலக நாடுகளே ஆச்சரியப்படும் விதமாக, அப்போது ஒரு கிலோ ஹைட்ரஜனை, 1 டாலருக்கு உற்பத்தி செய்ய அம்பானி திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

நார்வேயில் ரூ.5,000 கோடிக்கு மேல் முதலீடு

நார்வேயில் ரூ.5,000 கோடிக்கு மேல் முதலீடு

இந்த நிலையில் தற்போது தனது எனர்ஜி வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக, அடுத்த திட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது நார்வேயை தலைமையிடமாக கொண்ட மிகப்பெரிய சோலார் குழுமமான, REC குழுமத்தினை சேர்ந்த நிறுவனத்தினை 771 மில்லியன் டாலருக்கு (ரூ,5000 கோடிக்கு மேல்) ரிலையன்ஸ் குழுமம் கையகப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனர்ஜி நிறுவனம் கையகப்படுத்தல்
 

எனர்ஜி நிறுவனம் கையகப்படுத்தல்

கையகப்படுத்தப்பட்ட இந்த நிறுவனம் சீனாவினை சேர்ந்த China National Bluestar (Group) Co Ltd குழுமத்தினை சேர்ந்த, REC Solar Holdings AS (REC Group) என்ற நிறுவனத்தினை தான் ரிலையன்ஸ் குழுமம் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் (Reliance New Energy Solar Ltd (RNESL)) கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் முழுக்க முழுக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

மிகப்பெரிய சோலார் எனர்ஜி

மிகப்பெரிய சோலார் எனர்ஜி

REC Group குழும நிறுவனம் சோலார் எனர்ஜிக்கு ஒரு சர்வதேச அளவில் பேர் போன, மிகப்பெரிய சோலார் எனர்ஜி நிறுவனமாகும். இந்த நிறுவனம் சோலார் சம்பந்தமான புதிய கண்டிபிடிப்புகளை தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றது. குறிப்பாக நீண்ட காலம் செயல்பாட்டில் இருக்கும் சோலார் பேனல்கள், மற்ற புதிய சோலார் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து வருகின்றது.

ஆர்இசி-யின் பணியாளர்கள்

ஆர்இசி-யின் பணியாளர்கள்

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, REC கையகப்படுத்தல் குறித்து, நாங்கள் மிக மகிழ்ச்சியடைகிறோம். உலகளாவிய ரீதியில் ஆர்இசி-யில் 1,300க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். இந்த பரிவர்த்தனை முடிந்த பின்னர் அவர்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் பெருமை வாய்ந்த உறுப்பினர்களாக இணைவார்கள். பசுமை ஆற்றலை மேம்படுத்தும் பணியின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுவார்கள் என கூறியுள்ளார்.

மெகா முதலீடு

மெகா முதலீடு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அம்பானி, ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில், குஜராத்தில் 4 மெகா ஆலைகளை கிளீன் பவர் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்திக்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 75,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார். ஏற்கனவே ஜாம் நகரில் 5000 ஏக்கரில் திரும்பாய் அம்பானி கிரீன் எனர்ஜி வளாகத்தினை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

பசுமை ஹைட்ரஜன்

பசுமை ஹைட்ரஜன்

இது உலகின் மிகப்பெரிய புதுபிக்கதக்க எரிசக்தி ஆற்றலை வழங்கும் மையாக மாறும் என்றும் அம்பானி அப்போதே கூறியிருந்தார். மேலும் ஹைட்ரஜனில் கார்பன் உமிழ்வு என்பது இல்லை. ஆக கார்பன் உமிழ்வை குறைக்க தொழில் மற்றும் வாகனங்களில் பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தலாம் என அம்பானி அப்போது கூறியிருந்தார்.

அம்பானியின் மாபெரும் திட்டங்கள்

அம்பானியின் மாபெரும் திட்டங்கள்

சர்வதேச அளவில் கால நிலை மாற்றத்தினை சரிசெய்யும் விதமாக உலக நாடுகள் கார்பன் உமிழ்வை குறைக்க திட்டமிட்டு வரும், இந்த நிலையில் இந்தியாவிலும் இதுபோன்ற விஷயங்கள் எதிர்காலத்தில் வரவேற்பை பெறலாம் என்ற நிலையில், அதற்கேற்ப அம்பானியின் அடுத்தடுத்த திட்டங்கள் மாபெரும் திட்டங்களாக இருந்து வருகின்றன. இது நல்ல விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance industries plans to acquires Norway headquartered REC group for $771 million in mega solar energy

Reliance industries plans to acquires Norway headquartered REC group for $771 million in mega solar energy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X