ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 15% குறைந்து, 5,567 கோடி ரூபாயாக குறைந்துள்ளது
இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நிகரலாபம் 15 சதவீதம் குறைந்து, 9,567 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 11,262 கோடி ரூபாயாக இருந்ததாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கொரோனா காரணமாக தேவை குறைந்துள்ளதால் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் வர்த்தகம் முடங்கியதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் இந்த நிறுவனம் 31 சதவீதம் அதன் ஒருங்கிணைந்த லாபம் அதிகரித்து, 13,233 கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ அறிவிப்பின் எதிரொலி.. தடாலென வட்டியை குறைத்த பேங்க் ஆப் பரோடா..!

ஒருங்கிணைந்த வருவாய்
செயல்பாட்டின் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் இந்த செப்டம்பர் காலாண்டில் 1,16,195 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,53,384 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே EBITDA மார்ஜின் 17% ஆகவும், இதே EBITDA 18,945 கோடி ரூபாயாகவும் உள்ளது.

முகேஷ் அம்பானி என்ன கூறினார்?
இது குறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டினை விட, வலுவான முடிவுகளை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் நிதி அறிக்கைகளும் வலுவாக உள்ளது. ஏனெனில் கடந்த காலாண்டினை விட எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் சில்லறை விற்பனை சற்றே வளர்ச்சி கண்டுள்ளது. அதே போல் டிஜிட்டல் வணிகத்திலும் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருகிறது.

வலுவான நுகர்வு வளர்ச்சி
இதில் பெரும்பாலான தயாரிப்புகள் கொரோனாவிற்கு முந்தைய வணிகத்தினை போல் உள்ளது. குறிப்பாக சில்லறை விற்பனை வர்த்தகத்தில் நுகர்வு வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. ஜியோ மற்றும் சில்லறை வர்த்தகத்தில் கடந்த ஆறு மாதங்களில் பெரிய மூலதனம் திரட்டப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் குடும்பத்தில் பல மூலோபாய மற்றும் நிதி முதலீட்டாளர்களை நாங்கள் வரவேற்றுள்ளோம்.

ரிலையன்ஸ் பங்கு விலை
இந்தியாவில் உள்ள வாய்ப்பை கொண்டு நாங்கள் எங்கள் வணிகத்தில் ஒவ்வொரு முயற்சிகளையும் செய்து வருகிறோம் என்றும் அம்பானி கூறியுள்ளார். இதற்கிடையில் கடந்த வர்த்தக அமர்வில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 37.45 ரூபாய் அதிகரித்து, 2,064.35 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முரட்டு லாபம் கொடுத்த RIL
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 2020ம் ஆண்டில் இதுவரை 35% அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த மார்ச் 23 அன்று ஏற்பட்ட சரிவில் இருந்து பார்க்கும் போது, கடந்த செப்டம்பர் 16 அன்று அதன் வரலாற்று உச்ச விலையான 2,369.35 ரூபாயினை தொட்டது. இது கிட்டதட்ட 131% அதிகமாகும். கடந்த மார்ச் மாதத்தில் இந்த பங்கில் முதலீடு செய்திருந்தால் கூட, இன்று நல்ல லாபம் தான். மிஸ் பண்ணிடோமே.