நீதா அம்பானி மாஸ்டர் பிளான்..! ஐபிஎல்-ஐ தொடர்ந்து UAE T20 லீக்-ல் புதிய அணி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட விளையாட்டுப் போட்டியாக விளக்கும் ஐபிஎல் லீக், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. எந்த அளவிற்குக் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கிரிக்கெட் வீரர்களின் திறன் ஐபிஎல் மூலம் மேம்பட்டு உள்ளதோ அதேபோல் ஐபிஎல்-ன் வர்த்தகமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

இந்நிலையில் ஐபிஎல் லீக்-ல் முக்கிய அணியாக விளக்கும் மும்பை இந்தியன்ஸ் போலவே விரைவில் துவங்க இருக்கும் UAE T20 லீக் போட்டியில் புதிய பிரான்சைஸ் அணியை ஏலத்தில் எடுக்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

அடுத்த 5 வருட ஐபிஎல் யாருக்கு.. களத்தில் இறங்கும் ரிலையன்ஸ், அமேசான்.. எகிரும் விலை..!

 மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐபிஎல் மூலம் முதல் முறையாக விளையாட்டுத் துறைக்குள் இறங்கியது. ஒருபக்கம் பிஸ்னஸ், பிராண்டிங், விளம்பரம் என மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் பிராண்டுகளின் மதிப்பு உயர்ந்து வரும் வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி கப்-களைக் கைப்பற்றி வருகிறது.

 ஐபிஎல் அணி

ஐபிஎல் அணி

இந்த வெற்றியைத் தாண்டி ஐபிஎல் மூலம் அதிகப்படியான வருமானமும் கிடைக்கும் காரணத்தால் வர்த்தகக் குழுமங்கள் ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் காட்டினர், இதனாலேயே சமீபத்தில் இரு புதிய ஐபிஎல் அணிகள் சேர்க்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது.

 UAE T20 லீக்
 

UAE T20 லீக்

இந்த நிலையில் ஐபிஎல் போலவே எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு UAE T20 லீக் என்ற பெயரில் புதிய கிரிக்கெட் போட்டியை துவங்க திட்டமிட்டு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் போலவே UAE T20 லீக் ஒரு அணியை ஏலத்தில் எடுக்க உள்ளதாக Reliance Strategic Business Ventures Ltd (RSBVL) அறிவித்துள்ளது.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் முறையாக வெளிநாட்டு விளையாட்டுப் போட்டியில் பிரான்சைஸ் பெற உள்ளது. UAE T20 லீக் ஒவ்வொரு வருடமும் நடக்க உள்ளது, ஆரம்ப கட்டமாக 6 அணிகள் உடன் 34 போட்டிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 காலித் அல் ஜரூனி

காலித் அல் ஜரூனி

UAE T20 லீக்-ன் சேர்மன் மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு-ன் துணை தலைவரான காலித் அல் ஜரூனி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் விருப்பம் ஐக்கிய அரபு நாடுகள் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை காட்டுகிறது. மேலும் ரிலையன்ஸ் வெற்றிகரமான அணியை உருவாக்கி உள்ள நிலையில் UAE T20 லீக்-ல் வரவேற்பதாகக் காலித் அல் ஜரூனி கூறினார்.

 நீதா அம்பானி

நீதா அம்பானி

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை உரிமையாளர் நீதா அம்பானி கூறுகையில், பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் மும்பை இந்தியன்ஸ் பிராண்டை உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல உள்ளோம். இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் எங்கள் அணியில் ரசிகர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

 ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி UAE T20 லீக் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் ஐக்கிய அரபு நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Industries to acquire franchise in UAE T20 League like IPL

Reliance Industries to acquire franchise in UAE T20 League like IPL
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X