இந்தியாவில் தற்போது முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜியோ நிறுவனம், சத்தமேயில்லாமல் அதன் VIP திட்டத்திற்கான கட்டத்திணை அதிகரித்துள்ளது.
சரி என்ன திட்டம் அது? எவ்வளவு கட்டணம் உயர்ந்துள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் பிரபல திட்டங்களில் ஒன்றான 222 ரூபாய் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி (Disney+ Hotstar VIP pack) திட்டத்திற்கு தான் கட்டணத்தினை அதிகரித்துள்ளது.
சீனாவுக்கு இந்தியா செக்.. இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..!

222 ரூபாய் திட்டம்
பல டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டத்தினை ஜியோ நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தியது. அதில் தற்போது 222 ரூபாய் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டத்திற்கு தான் கட்டணத்தினை அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தின் கட்டணத்தினை 33 ரூபாய் அதிகரித்து தற்போது 255 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மாற்றம் என்ன?
இந்த 255 ரூபாய் திட்டத்தின் மூலம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவின் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் அனுப்பப்படும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி நன்மை ஒரு வருட காலம் செல்லுபடியாகும். இந்த திட்டத்துடன் குரல் அழைப்பு நன்மைகள் எதுவும் இல்லை.

இந்த திட்டத்தின் பயன்பாடு
இந்த திட்டம் உண்மையில் ஒரு ஆட்-ஆன் திட்டமாகும் மற்றும் இது உங்களின் அடிப்படை வாய்ஸ் கால் திட்டத்தின் அதே செல்லுபடியைப் பெறும். அதாவது ரூ 255 திட்டம் முழுமையான அம்சங்களுடன் இல்லை என்பதால், இந்த திட்டத்தைப் பயன்படுத்த, பயனர் ஏற்கனவே ஆக்டிவ் ஆக ஒரு குரல் அழைப்பு பேக்கை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.

நெட் ஸ்பீடு – எப்படி இணைவது?
அதோடு இந்தத் திட்டம் 15 ஜிபி அளவிலான டேட்டாவுடன் உள்ளது. குறிப்பிட்ட 15 ஜிபி டேட்டாவை நீங்கள் உபயோகித்த பின்னர், உங்களின் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். எப்படி இருப்பினும் ஜியோவின் மற்ற விஐபி திட்டங்களான 401 ரூபாய், 598 ரூபாய், 777 ரூபாய், 2,599 ரூபாய் திட்டங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்த திட்டத்தில் எப்படி இணைவது?
இந்த திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டுமெனில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப்பினை டவுன்லோடு செய்ய வேண்டும். இதனை லாகின் செய்ய உங்களது ஜியோ நம்பர் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை கொடுத்து உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ரூ.3000க்குள் ஸ்மார்ட்போன்
இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போனை 2,500 - 3,000 ரூபாய் என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாட்டில் 4ஜி ஸ்மார்ட்போன்களே 10 ஆயிரம் 20 ஆயிரம் என இருக்கும் நிலையில், இது எப்படி சாத்தியம்? எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
தற்போது தொலைத் தொடர்பு சேவையில் முதலிடமாக இருக்கும் ஜியோ, இப்படி ஒரு மலிவான விலைக்கு ஸ்மார்ட்போனை கொண்டு வந்து விட்டால், மொபைல் விற்பனையிலும் ஜியோ தான் முதலிடமாக இருக்கும்..!