சென்னையில் பால் டெலிவரி சோதனையில் ரிலையன்ஸ் JioMart!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனியாகவும், எரிசக்தி கம்பெனியாகவும் தான் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

 

ஆனால் எதிர்காலத்தில் தன்னை, ஒரு டெலிகாம், ரீடெயில் மற்றும் இ காமர்ஸ் கம்பெனியாக மாற்றிக் கொள்ள பகிரதப் பிரயத்தனம் செய்து கொண்டு இருக்கிறது.

டெலிகாம் துறையில் ஏறத்தாழ வெற்றி பெற்றுவிட்டது எனலாம். தற்போது இந்தியாவிலேயே அதிக அளவில் வொயர் லெஸ் சப்ஸ்கிரைபர்களைக் வைத்திருக்கும் கம்பெனியாக ஜியோ தான் முதலிடத்தில் இருக்கிறது.

ரிலையன்ஸ் ரீடெயில்

ரிலையன்ஸ் ரீடெயில்

ரிலையன்ஸ் ரீடெயில் கூட ஓரளவுக்கு நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியா முழுக்க பல கடைகளை வாங்கிப் போட்டுக் கொண்டு வருகிறது. ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ரிலையன்ஸ் டிஜிட்டல், ரிலையன்ஸ் ஸ்மார்ட், ரிலையன்ஸ் லைஃப், ரிலையன்ஸ் ஜ்வல்ஸ், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் என பல்வேறு கடைகளைப் போட்டு கல்லா கட்டிக் கொண்டு இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ மார்ட்

ரிலையன்ஸ் ஜியோ மார்ட்

ஆனால் ரிலையன்ஸ் கம்பெனி எதிர்பார்த்தது போல, இ காமர்ஸ் பிரிவில் தான் இன்னும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அல்லது மக்களுக்கு பெரிதாக சென்று சேரவில்லை. சமீபத்தில் கூட, ஜியோ மார்ட் வழியாக, வாட்ஸப்பிலேயே மளிகை சாமான்களை ஆர்டர் செய்யலாம் எனச் சொல்லி இருந்தார்கள். ஆனால் அது இந்தியா முழுக்க, ரிலையன்ஸ் ஜியோ மக்கள் மத்தியில் பரவிய அளவுக்கு பரவவில்லை.

பால் டெலிவரி
 

பால் டெலிவரி

ஜியோ மார்டின் வியாபாரத்தை அதிகரிக்கவும், ரிலையன்ஸின் இ காமர்ஸ் வியாபாரத்தை பெருக்கவும், தற்போது பால், முட்டை, பிரெட் போன்ற அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் வியாபாரத்தில், சோதனை முயற்சியில் இறங்கி இருக்கிறதாம். சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் டெலிவரி செய்யும் இந்த சோதனையை தென் இந்தியாவில் செய்து வருகிறார்களாம்.

சென்னை & பெங்களூரு

சென்னை & பெங்களூரு

ஜியோ மார்ட், தன்னுடைய சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையிலான அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரி சோதனையை, தமிழகத்தின் தலை நகரான சென்னை & கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரில், சில பகுதிகளில் மட்டும் செய்து வருகிறார்களாம். இந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில், தீபாவளிக்குள், நாடு முழுக்க இந்த சேவையைத் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோமார்ட் தரப்பு

ரிலையன்ஸ் ஜியோமார்ட் தரப்பு

பால், முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரி சோதனை குறித்து, ரிலையன்ஸ் ஜியோ மார்ட் கம்பெனி தரப்பில் விசாரித்த போது, எந்த பதிலும் சொல்லவில்லையாம். இந்த சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையிலான டெலிவரி, தினம் தோறும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யப்படுமாம்.

போட்டி கம்பெனிகள்

போட்டி கம்பெனிகள்

ரிலையன்ஸ் ஜியோ மார்டின் இந்த சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையிலான அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரி, ஸ்விக்கி நிறுவனத்தின் Supr Daily மற்றும் பிக் பாஸ்கட் கம்பெனியின் BB Daily சேவைகளுக்கு போட்டியாக களம் இறங்குவது போலத் தெரிகிறது. இன்னும் ரிலையன்ஸ் கம்பெனி, இ காமர்ஸ் துறையில் தன்னை வளர்த்துக் கொள்ள எதை எல்லாம் செய்யப் போகிறதோ தெரியவில்லை. எல்லாம் அம்பானிக்கு தான் வெளிச்சம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance JioMart testing milk deliveries in Chennai and Bengaluru

The mukesh ambani leading reliance jiomart has started testing milk, bread, egg like essential deliveries in Tamilnadu capital Chennai and Karnataka capital Bengaluru.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X