ஆஹா.. அம்பானியின் அடுத்த இலக்கு மருத்துவமா..! எத்தனை பேரை காலி பண்ணப் போறாரோ தெரியலயே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யேமனில் ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த திருபாய் அம்பானி தன் சேமிப்பில் ஒரு டெக்ஸ்டைல் வியாபாரத்தைத் தொடங்கினார். பாலிஸ்டரை இறக்குமதி செய்வது, இந்திய மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்வது.

 

பின் தானே துணிகளைத் தயாரித்து விற்க்கத் தொடங்கினார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவானது. அதிவேகமாக, இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவானது.

மெல்ல துணிக் கடை வியாபாரத்தில் இருந்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, ரியல் எஸ்டேட், நிதி, கட்டுமானம் என ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் கிளை விட்டு பரவிக் கொண்டு இருக்கிறது.

ரிலையன்ஸ் சாம்ராஜ்யம்

ரிலையன்ஸ் சாம்ராஜ்யம்

இன்று கச்சா எண்ணெய் தொடங்கி டெலிகாம், ரீடெயில், நிதி சேவை, பொழுது போக்கு, கேபிள் டிவி, சினிமா என இந்தியாவின் பல முக்கிய வியாபாரங்களில் ரிலையன்ஸ் சோலோவாக நின்று அடித்து விளையாடிக் கொண்டு இருக்கிறது. கடைசியாக இப்போது மருத்துவ துறையிலும் கால் பதிக்க துடித்துக் கொண்டு இருக்கிறது.

மருத்துவம்

மருத்துவம்

இந்திய மருத்துவ துறையில், ரிலையன்ஸ் நிறுவனம், மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான வியாபாரத்தை மட்டும், நேக்காக குறி வைத்து, களம் இறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. கடந்த ஜனவரி 2018-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் மருத்துவ பரிசோதனை வியாபாரம் ரூ. 40,000 கோடி மதிப்புடையதாம்.

வளர்ச்சி
 

வளர்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மருத்துவ பரிசோதனை வியாபாரம் சுமாராக 15 - 20 சதவிகிதம் வளர்ச்சி கண்டு வருவதாக சில அறிக்கைகள் மற்றும் செய்திகளை இணையத்தில் பார்க்க முடிகிறது. வெறும் 40,000 கோடி ரூபாய் வியாபாரத்தில் பங்கு போடத் தான் ரிலையன்ஸ் வருகிறதா..?

பங்கு விலை

பங்கு விலை

ரிலையன்ஸ் நிறுவனம், மருத்துவ பரிசோதனை வியாபாரத்தில் களம் இறங்க இருக்கும் செய்தி வெளியான பின், கடந்த ஒரு வார காலத்தில் மட்டும்

Thyrocare Technologies Ltd -6.2 %

Dr Lal PathLabs Ltd -11.6 %

Metropolis Healthcare Ltd -4.7 % என பல மருத்துவ பரிசோதனை நிறுவனங்களின் பங்கு விலை மண்ணைக் கவ்வியது.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்திய டெலிகாம் துறையில், மூன்றே ஆண்டுகளில் சுமார் 32 கோடி வாடிக்கையாளர்களை வளைத்துப் போட, மலிவு விலை என்கிற அஸ்திரத்தை ஏவினார் அம்பானி. அதே போல, இப்போதும் மருத்துவ சந்தையை வளைத்து போட, ரிலையன்ஸ் நிறுவனம், மிகக் குறைந்த விலையில் மருத்துவ பரிசோதனைகளை மக்களுக்கு கொடுக்கும் என பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நம்புவதையே இது காட்டுகிறது.

நஷ்டம்

நஷ்டம்

ரிலையன்ஸ் நிறுவனம், மருத்துவ பரிசோதனை வியாபாரத்தில் களம் இறங்கி மலிவு விலையில் மருத்துவ சோதனைகளை வழங்கும் என்கிற நம்பிக்கை மட்டுமே, மற்ற நிறுவனங்களின் பங்கு விலை சரிவுக்கு காரணம் அல்ல. நல்ல லாபம் பார்க்காத நிறுவனத்தின் பங்கு விலை சரியத் தானே செய்யும்..? அதுவும் ஒரு காரணம். அதாவது, ஒருவேளை, ரிலையன்ஸ் மலிவு விலையில் மருத்துவ பரிசோதனைகளைச் செய்யத் தொடங்கினால், மற்ற நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

உதாரனம் எபிட்டா. தைரோகேர் நிறுவனத்தின் எபிட்டா (Ebitda - earnings before interest, tax, depreciation and amortization) வரம்பு 38 சதவிகிதமாக இருக்கிறது. அதே போல டாக்டர் லால் பேத் லேப்ஸ் மற்றும் மெட்ரோபொலிஸ் போன்ற நிறுவனங்களின் எபிட்டா வரம்பும் 24 - 26 சதவிகிதமாக இருக்கிறது. இவை எல்லாம் பயங்கரமாக அடிவாங்கும். இறுதியில் நஷ்டம் தான்.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் ஏர்டெல், வொடாபோன் ஐடியா போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களின் நிதி நிலை மோசமடைந்தது தான். செப்டம்பர் 2019 காலாண்டில் ஏர்டெல் சுமாராக 23,000 கோடி ரூபாயும், வொடாபோன் ஐடியா அதே காலாண்டில் சுமார் 50,000 கோடி ரூபாயும் நஷ்டம் கண்டது.

அனலிஸ்டுகள்

அனலிஸ்டுகள்

இந்திய மருத்துவ பரிசோதனை வியாபாரத்தைப் பொறுத்த வரை, ஒரு நிறுவனம் தடாலடியாக உள்ளே புகுந்து, நாடு முழுக்க தன் மருத்துவ பரிசோதனைச் சாலைகளைப் பரப்பி, வியாபாரம் செய்து விட முடியாது. அதே போல இந்த துறையில் நுழைவதற்கு இருக்கும் எதார்த்த வியாபாரத் தடைகளும் அதிகம்.

விலை சரிவு

விலை சரிவு

ஏற்கனவே மருத்துவ பரிசோதனை வியாபாரத்தில், பல்வேறு விலை குறைப்பு நடவடிக்கைகள் எல்லாம் நடந்து விட்டது. எனவே ரிலையன்ஸ் நிறுவனம் மருத்துவ பரிசோதனை துறையில் வந்த பின்பு, விலை குறைப்பு என்கிற யுக்தி, அதிகம் பயனளிக்காமல் போகலாம் என்று சொல்கிறார் ஒரு அனலிஸ்ட்.

உயிர்

உயிர்

அதே நேரத்தில் இது ஏதோ ஒரு பொருளையோ அல்லது ஏனோ தானோ சேவையையோ செய்வதில்லை. இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே இதில் யார் குறைந்த விலையில் சேவைகளை வழங்குகிறார்கள் என்பதைக் குறித்து இல்லை எனச் சொல்லி இருக்கிறார் அந்த பெயர் சொல்ல விரும்பாத அனலிஸ்ட்.

துறை

துறை

இப்போது வரை, இந்தியாவின் மருத்துவ பரிசோதனை வியாபாரம் குட்டி குட்டி தீவுகளாக சிதறிக் கிடக்கிறது. இந்தியாவில் பல இடங்களில், இந்த மருத்துவ பரிசோதனை வியாபாரம் முழுமையாக சென்று சேரவில்லை. ஆனால் இந்த மருத்துவ பரிசோதனை வியாபாரம் அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக வளர்ச்சி காண இருக்கிறது.

விடை கிடைக்கும்

விடை கிடைக்கும்

எனவே ரிலையன்ஸ் வந்தால், ஒட்டு மொத்த இந்திய மருத்துவ பரிசோதனைத் துறையை ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அது ஜியோ அளவுக்கு பயங்கரமாக இருக்குமா..? என்பது தான் கேள்வி. பொறுத்திருந்து பார்ப்போம். விரைவில் சர்க்கரை நோய் தொடங்கி சிடி ஸ்கேன் வரை எல்லாவற்றையும் ரிலையன்ஸ் கொடுக்கத் தொடங்கும் அப்போது, இந்த கேள்விக் காண விடையும் கிடைத்துவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reliance may disrupt the indian diagnostics business

The mukesh ambani leading reliance industries subsidiary reliance life care may disrupt the indian diagnostics space with its disruptive price deals like jio.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X