முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் அனைத்து துறையிலும், அனைத்து பிரிவுகளிலும் வர்த்தகத்தைத் தன்னுடைய பெயர் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது கைவினை பொருட்களைப் பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய பிராண்டை உருவாக்கி, இந்தியா முழுவதும் கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் சரிவு ஆரம்பமா..? வோடபோன் ஐடியா விடவும் மோசம்..!

ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கைத்தறி ஆடைகள், கைவினை பொருட்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் பிரபலமான கலைஞர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக ஸ்வதேஷ் என்னும் புதிய பிராண்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

ஸ்வதேஷ் பிராண்ட்
இந்த ஸ்வதேஷ் பிராண்டின் கீழ் முதல் கடையை நடப்பு நிதியாண்டின் முதல் பாதிக்குள் திறக்கப்படும் என்று ரிலையன்ஸ் ரீடைல் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் வர்த்தகத்தை ரிலையன்ஸ் ரீடைல் விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ரீடைல் திட்டம்
ஸ்வதேஷ் என்பது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 'Handmade in India' திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்திய கைவினை பொருட்களையும், இந்திய கலாச்சாரத்தையும் உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை இத்திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளது.

ஒப்பந்தம்
ஸ்வதேஷ் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் மத்திய மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்பட உள்ளது. மேலும் கைவினை கலைஞர் சமூகங்களிடமிருந்து நேரடியாகக் கைவினைப் பொருட்களைப் பெறுவதற்காக டெக்ஸ்டைல் அமைச்சகத்துடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளதாகவும் நிறுவனம் மேலும் கூறியது.

போட்டி
இந்தியாவில் FABIndia வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்நிறுவனத்திற்குப் போட்டியாக ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தை ஸ்வதேஷ் பிராண்ட் கடைகள் வாயிலாகக் கைத்தறி ஆடைகள், கைவினை பொருட்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் பிரபலமான கலைஞர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.