17.5 ஏக்கரில் பிரம்மாண்ட மால்.. மும்பையில் மாஸ்டர் பிளான் போடும் முகேஷ் அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி எப்போதும் இல்லாத வகையில் தனது வர்த்தகத்தை அனைத்து பிரிவிலும் விரிவாக்கம் செய்து வருகிறார், குறிப்பாக டெலிகாம் மற்றும் எண்ணெய் வர்த்தகப் பங்குகளை விற்பனை செய்து ரீடைல் பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறார்.

 

மளிகை பொருட்கள் முதல் ஆடை வரையில் மலிவு விலை பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரையில் அனைத்தையும் அன்லைன், ஆப்லைன் சந்தையில் விற்பனை செய்து வருகிறது ரிலையன்ஸ் ரீடைல்.

இந்த நிலையில் முக்கியமான இரு அறிவிப்பை ரிலையன்ஸ் ரீடைல் அறிவித்துள்ளது.

மனிஷ் மல்ஹோத்ரா ஜி.. 40% கொடுங்க ஜி.. முகேஷ் அம்பானி செம டீலிங்..!

ப்ரீமியம் மால்

ப்ரீமியம் மால்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக மும்பையில் பந்தரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் சுமார் 17.5 ஏக்கர் நிலத்தில் ப்ரீமியம் மால்-ஐ திறக்க உள்ளது. மால் தெரியும் அது என்ன ப்ரீமியம் மால்..?

ஆடம்பர பொருட்கள்

ஆடம்பர பொருட்கள்

ப்ரீமியம் மால் என்பது ஆடம்பர பொருட்கள், ப்ரீமியம் பொருட்களுக்கான தனிப்பட்ட மால். உதாரணமாக ZARA, டிஃப்பனி & கோ, போன்ற ஆடம்பர பொருட்களுக்கான கடைகள் அமைந்திருக்கும் ஒரு தனிப்பட்ட மால். இதேபோன்று பெங்களூரில் யுபி சிட்டி என்ற மால் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Jio World Drive
 

Jio World Drive

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டும் இந்த ப்ரீமியம் மால்-க்கு "Jio World Drive" எனப் பெயரிடப்பட்டு உள்ளது. பெயரிலேயே உலகின் முன்னணி பிராண்டுகள் இந்த மாலில் இருக்கும் என அறியப்படுகிறது. ஆனால் இதைவிட ஸ்பெஷலான ஒரு அறிவிப்பும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

ப்ரீமியம் உணவு பொருட்கள்

ப்ரீமியம் உணவு பொருட்கள்

இந்தியாவில் ஆடம்பர மற்றும் ப்ரீமியம் பொருட்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ரிலையன்ஸ் மளிகை பொருட்கள் முதல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழம், காய்கறிகள் முதல் இந்தியாவில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் காய்கறிகள் வரையில் வீட்டுக்கு தேவையான அனைத்தும் ப்ரீமியம் தரத்தில் விற்பனை முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ்.

Freshpik கடை

Freshpik கடை

இந்த ப்ரீமியம் பொருட்களை விற்பனை செய்வதற்காகவே தனியாக ஒரு பிராண்டை உருவாக்கியுள்ளது ரிலையன்ஸ் ரீடைல். Freshpik என்கிற பிராண்டின் கீழ் உணவு பொருட்கள் பிரிவின் கீழ் அனைத்து ப்ரீமியம் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.

முன்னணி பிராண்டுகள்

முன்னணி பிராண்டுகள்

இந்த ப்ரீமியம் பொருட்களுக்கான பிராண்ட்-ன் முதல் கடை கு "Jio World Drive" ப்ரீமியம் மாலில் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. Freshpik கடையில் இந்தியா மற்றும் உலக நாடுகளின் முன்னணி பிராண்டுகளின் உணவு பொருட்கள், காய்கறி, பழம் மட்டும் இல்லாமல் பிரெட், சீஸ், ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் கிடைக்கும்.

குட் பார் யூ

குட் பார் யூ

இதேபோல் கீடோ, வீகன் போன்ற டையட் பொருட்களைக் குட் பார் யூ பிரிவின் கீழ் ப்ரீமியம் மற்றும் ஹெல்தி உணவு பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. Freshpik கடை மூலம் ஆடம்பர பிரிவு வாடிக்கையாளர்களைப் பெற முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Retail new Premium food brand FreshPik opens in Jio World Drive Premium mall

Reliance Retail new Premium food brand FreshPik opens in Jio World Drive Premium mall
Story first published: Saturday, October 16, 2021, 14:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X