ரூ.4800 கோடி யார் கொடுப்பா, அதனால்தான் கடையைத் தூக்கிட்டோம்.. ரிலையன்ஸ் பலே விளக்கம்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 900 பில்லியன் டாலர் மதிப்பிலான ரீடைல் வர்த்தகச் சந்தையில் கடந்த 2 வருடமாக அதிகம் எதிர்பார்த்து இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான வர்த்தகக் கைப்பற்றல் ஒப்பந்தத்திற்கு அமேசான் தொடுத்த வழக்கின் காரணமாகத் தற்போது முடங்கியுள்ளது.

 

இந்த வழக்கு இந்திய நீதிமன்றம் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பிலும் நடந்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் யாருக்கும் எவ்விதமான அறிவிப்பும் செய்யாமல் சுமார் 900 கடைகளைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கான விளக்கத்தைத் தற்போது ரிலையன்ஸ் கொடுத்துள்ளது.

தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. வார இறுதி வர்த்தக நாளில் என்னவாகும.. கவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப்..!

பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப்

ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் - அமேசான் ஆகியோர் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டு இருக்கும் போது, பியூச்சர் குரூப் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்காத ரீடைல் கடைகளை ஒரே ஒரு நேட்டீஸ் உடன் ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றியுள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்ற ரிலையன்ஸ் ரீடைல் 2020ல் 3.4 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அமேசான் வழக்குத் தொடுத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பியூச்சர் குரூப் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள காரணத்தால் இந்நிறுவன ரீடைல்களை ரிலையன்ஸ் ரீடைல் எடுத்து நடத்தியது.

4800 கோடி ரூபாய்
 

4800 கோடி ரூபாய்

பியூச்சர் குரூப் கடைகளைத் தொடர்ந்து நடத்த குத்தகை ஒப்பந்தத்தின் தற்காலிக புதுப்பிப்பு, விற்பனை பொருட்கள் கொள்முதல், ஊழியர்களுக்குச் சம்பளம் எனச் சுமார் 4800 கோடி ரூபாய் ரிலையன்ஸ் ரீடைல் இந்த 19 மாதத்தில் செலவு செய்துள்ளது.

வங்கி தரப்பு

வங்கி தரப்பு

இதில் 1100 கோடி ரூபாய் செலுத்தப்படாத வாடகைக்கும், 3700 கோடி ரூபாய் வொர்க்கிங் கேப்பிடலுக்காக முதலீடு செய்துள்ளது ரிலையன்ஸ் ரீடைல். இந்நிலையில் நீதி மன்றத்தில் வங்கி தரப்பு ரிலையன்ஸ், அமேசான் மத்தியில் ஏலத்தின் மூலம் பியூச்சர் குரூப் வர்த்தகத்தை விற்பனை செய்யலாம் என்ற யோசணையை முன்வைத்தது.

ரிலையன்ஸ் ரீடைல் அதிரடி

ரிலையன்ஸ் ரீடைல் அதிரடி

இது தனது எதிராகத் திரும்பிவிடுமோ என்ற அச்சத்தில் ரிலையன்ஸ் ரீடைல் செலவு செய்த 4800 கோடி ரூபாயை வசூலிக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் தள்ளப்பட்ட காரணத்தால் சுமார் 900 கடைகளைக் கைப்பற்றுவதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பயன்படுத்த முடிவு செய்தோம் என ரிலையன்ஸ் ரீடைல் தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.

NCLT அமைப்பு

NCLT அமைப்பு

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் இத்தகைய செயல் அமேசான் மட்டும் அல்லாமல் பியூச்சர் குரூப்-ம் எதிர்பார்க்கவில்லை. பியூச்சர் குரூப் இதுவரையில் 2 வங்கி கடனுக்கான தவணைகளைச் செலுத்தாத நிலையில் வங்கி நிர்வாகம் திவாலாக அறிவிக்கப்பட NCLT அமைப்பை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சதாசிவ் நாயக்

சதாசிவ் நாயக்

இதற்கிடையில் இன்று 7 மாதத்திற்கு முன்பு பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட சதாசிவ் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சதாசிவ் நாயக் பியூச்சர் குரூப்-ல் சுமார் 18 வருடமாகப் பணியாற்றி வரும் நிலையில் ஆகஸ்ட் 2021ல் பதவியேற்று தற்போது ராஜினாமா செய்தது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance retail takeover 900 stores on Dues of 4800 crore of Future Retail; CEO Sadashiv Nayak resigns from

Reliance retail takeover 900 stores on Dues of 4800 crore of Future Retail in 18 months ரூ.4800 கோடி யார் கொடுப்பா, அதனால்தான் கடையைத் தூக்கிட்டோம்.. ரிலையன்ஸ் பலே விளக்கம்.!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X