சீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பதற்றத்திற்கு மத்தியிலும், அமெரிக்கா சீனா பிரச்சனை தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. அது இரு நாடுகளுக்கு இடையே ஆரம்பித்து, தற்போது நிறுவனங்கள், தொழில் சாலைகளுக்கும் இடையே பிரச்சனை வளர ஆரம்பித்துள்ளது.

 

மேலும் அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் புதிய பனிப்போரில் சீனாவைத் தாக்கும், ஒரு அமெரிக்காவின் ஆயுதமாக இந்தியா மாறக்கூடாது.

அப்படி இந்தியா அமெரிக்காவின் பேச்சை கேட்டுக் கொண்டு சீனாவுக்கு எதிராக களம் இறங்கினால், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியிலும் இந்தியா மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் என்று சீனா எச்சரித்துள்ளது.

கட்டுப்படுத்தல் வேண்டாம்

கட்டுப்படுத்தல் வேண்டாம்

இது குறித்து சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்தியாவில் தேசியவாத உணர்வு அதிகரித்து வருவதால், புதிய பனிப்போரில் சேரவும், அதிக லாபங்களுக்காக அதன் நிலையை சுரண்டவும் இந்திய அரசாங்கத்திற்கு ஆதரவாக சில குரல்கள் எழுந்துள்ளன. அத்தகைய தவறான வழிநடத்தல்கள், இந்தியாவினை கட்டுப்படுத்தக்கூடாது.

சீன இந்திய உறவு மோசமாகும்

சீன இந்திய உறவு மோசமாகும்

அமெரிக்க - சீனா மோதலில் ஈடுபடுவதால் இந்தியாவுக்கு லாபம் எதுவும் இல்லை, சொல்லப்போனால் ஆதாயத்தை விட இழப்புகள் தான் அதிகம், அதனால், மோடி தலைமையிலான அரசு இப்பிரச்சனையினை பகுத்தறிவுடனும் எதிர்கொள்ள வேண்டும். தற்போது இருந்து வரும் நிலையில், சீனாவுடனான தனது உறவுகளில் எந்தவொரு பிரச்சினையையும் கையாள்வதில் அமெரிக்காவை இந்தியா சேர்க்கக்கூடாது, இல்லையெனில் அது சீனாவுக்கும்- இந்தியாவுக்கும் இடையிலான உறவை, மேலும் மோசமான சிக்கலுக்கு தள்ளும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆப்
 

இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆப்

மே மாதத்தின் பிற்பாதியில் இருந்து 5 மில்லியனுக்கும் அதிகமாக ரிமூவ் சீன ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆப், இந்திய நிறுவனமான ஒன் டச் ஆப்லாப்ஸ் உருவாக்கிய இந்த பயன்பாடு (OneTouch AppLabs) இந்தியாவில் குறுகிய காலத்தில் மிக பிரபலமடைந்து வருகிறது. இதன் மூலம் ஒரே கிளிக்கில் சீன ஆப்களை நீக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியர்கள் ஆதரவு

இந்தியர்கள் ஆதரவு

சமீபத்திய நாட்களில் பல இந்திய பிரபலங்கள் சீன ஆப்களை நீக்கும் யோசனையையும் ஆதரித்து வந்தனர். குறிப்பாக யோக குரு பாபா ராம்தேவ் வார இறுதியில் ஒரு வீடியோ ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இது சீனாவுடன் இணைந்த பல பயன்பாடுகளை நீக்குவதைக் காட்டியது. அதே இந்திய நடிகர் ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் இருந்து டிக் டாக்கினை நீக்குவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்தியா மிகப்பெரிய சந்தை

இந்தியா மிகப்பெரிய சந்தை

இதனைக் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபூர் சர்மா, சம்பந்தபட்ட குடிமக்கள் ஒரு முன்மாதிரியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறியதாக டெக்கிரன்ச் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் இந்தியாவில் அதிகரித்து வரும் இந்த உணர்வு, சீன நிறுவனங்களுக்கு இது மோசமான செய்தியாகும். ஏனெனில் பைட் டான்ஸ், டிக் டாக், யுசி பிரவ்சர் உள்ளிட்ட சீன ஆப்களின் மிகபெரிய சந்தை இந்தியா தான்.

உள்நாட்டு நிறுவனங்கள் ஊக்குவிப்பு

உள்நாட்டு நிறுவனங்கள் ஊக்குவிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் இந்திய அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை கடுமையாக்கியது. இந்த நிலையில் சிஐஐ கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியும் இறக்குமதியை குறைக்க வேண்டும். சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் மேட் இன் இந்தியா பொருட்களை உலகத்திற்காக அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆக இப்படி ஒரு நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகள் வருவது வரவேற்கதக்கது தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Remove China Apps, its top trending app in india

“Remove china apps”, an app that most popularity in india in recent weeks. It was downloaded more than 50 lakh times since late may.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X