ஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வரவிருக்கும் புதிய சவால்களை சமாளிக்க வங்கிகள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ரிசர்வ் வங்கியில் ஆளுனர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், ஊடகங்கள் கூறுவது போல், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை. வரவிருக்கும் புதிய பிரச்சனைகளை எதிர்கொள்ள எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க கடன் வழங்குனர்களை கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்
 

சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்

ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்த தாஸ், மத்திய வாரியக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்கு ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக்கையும் சந்தித்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தாஸ், வங்கிகளை எச்சரிக்கையாக வைத்திருக்க எதுவும் இல்லை. இது போன்றதொரு செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

வங்கிகள் வளர்ந்து வரும் இதே நிலையில், வளர்ந்து வரும் புதிய சவால்களையும் மேற்கொள்ள தயாராக வேண்டும் என்றும் கூறினார்.

ஆலோசனை

ஆலோசனை

இது தவிர அவர் கலந்து கொண்ட மத்திய வாரிய கூட்டத்திலும், பட்நாயாக்குடன் சேர்ந்து, வங்கி தொடர்பான பிரச்சனைகளையும் குறித்தும் விவதித்தாகவும் தெரிவித்துள்ளார். இங்கு நிதி சேர்க்கை, வங்கி கிளைகள், விவசாயத் துறைக்கு கடன் வ்ழங்குதல் மற்றும் ஒடிசாவில் ஒ-குபர் தளம் உள்ளிட்ட பலவற்றை பற்றி விவரித்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் பிரச்சனைகள்

அதிகரித்து வரும் பிரச்சனைகள்

மேலும் ஒடிசா எனது சொந்த நகரம் என்பதால் இது ஒரு மரியாதைக்குரிய அழைப்பு தான் என்றும் தாஸ் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் பொருளாதார நிலை குறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பட்டபோது, பொருளாதாரம் மற்றும் வங்கித் துறை எப்போதும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. ஆக இதுபோன்ற அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்ள வங்கிகள் தயாராக இருக்க வேண்டும். இது விழிப்பூட்டலைப் பற்றியது அல்ல. வளர்ந்து வரும் சவால்கள், ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ள கூடிய சவால்களை பற்றிய பிரச்சனைகளை பற்றி விவரித்தோம். மேலும் இது சமீபத்திய பிரச்சனை அல்ல, கடந்த 20 - 30 ஆண்டுகளாகவே இது இருந்து வருகிறது. ஆக வங்கிகள் அதை சமாளிக்க வேண்டும்.

எதையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள்
 

எதையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள்

மேலும் பொதுத்துறை வங்கிகளுடன் முன்னதாக நடத்திய பேச்சு வார்த்தையில் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகக் கூடும். இது சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். ஆக இதையும் வங்கிகள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்ததாகவும் நினைவு கூர்ந்துள்ளார் தாஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reserve bank asked banks to be ready for emerging new challenges

Reserve bank asked banks to be ready for emerging new challenges. and he said Economic and Banking field always faces new challenges and problems. so the banks are should be ready to deal with all kinds of Issues and problems.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X