இரட்டை குடியுரிமை பெற துடிக்கும் இந்தியர்கள்.. அதுவும் இந்த நாட்டில்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் இரட்டை குடியுரிமை பெறுவது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்த வேளையில், இன்றளவும் வெளிநாட்டில் வர்த்தகம் செய்ய விரும்பும் அனைவருக்கும், குறிப்பாகப் பணக்காரர்கள் அடுத்த தலைமுறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல இரட்டை குடியுரிமை பெற அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

இதற்கு ஏற்றார் போல உலகில் பல முக்கிய நாடுகள் குடியுரிமை வழங்குவதில் முக்கியமான மாற்றங்களையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இது இரட்டை குடியுரிமை பெற ஆர்வமாக இருக்கும் இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.

1 வாரத்தில் ரூ.1.52 லட்சம் கோடி.. இந்த வாரத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ டாப் கெயினர்ஸ்..!

முழுச் சுதந்திரம்

முழுச் சுதந்திரம்

வெளிநாட்டில் வர்த்தகம் அல்லது வியாபாரம் செய்யும் போது அந்நாட்டின் குடியுரிமை இல்லையென்றால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதோடு முழுச் சுதந்திரத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது, வரி சலுகையும் பெற முடியாது. இதனாலேயே வெளிநாட்டில் தொழில் செய்யும் அனைவரும் தற்போது குடியுரிமை பெறுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முதலீடு மூலம் குடியுரிமை

முதலீடு மூலம் குடியுரிமை

இதற்காகவே அமெரிக்கா முதல் பல நாடுகள், முதலீடு செய்வதன் மூலம் குடியுரிமை செய்யும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் மூலம் அன்னிய முதலீட்டை பெறுவதன் மூலம் இர தரப்புக்கும் அதிகளவிலான நன்மை கிடைக்கும். இதேபோல் பணக்காரர்களுக்கு இதுவும் மிகவும் எளிதான ஒரு வழியாகவும் அமைகிறது.

இந்திய பாஸ்போர்ட்
 

இந்திய பாஸ்போர்ட்

இந்திய பாஸ்போர்ட்-க்குத் தற்போது 58 நாடுகளுக்குத் தான் visa-free அல்லது visa-on-arrival மூலம் விசா பெற முடியும் பட்சத்தில் இந்தியர்களுக்கு வர்த்தக விரிவாக்கம் செய்யவும், தொழில் முறை பயணம் செய்யவும் இந்தியர்களுக்குப் பெரும் தடையாக உள்ளது.

Saint Kitts and Nevis நாடு

Saint Kitts and Nevis நாடு

இந்த நிலையில் தான் தற்போது இந்தியர்கள் Saint Kitts and Nevis பகுதியில் முதலீட்டு மூலம் குடியுரிமை பெறுவது மூலம் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்வது மட்டும் அல்லாமல் வர்த்தகம், கல்வி, பிற வரி சேவைகளையும் தெரிந்துகொண்டு அதிகமானோர் Saint Kitts and Nevis நாட்டில் குடியுரிமை பெற்று வருகின்றனர்.

கரீபியன் தீவு

கரீபியன் தீவு

கரீபியன் தீவுகளில் ஒன்றான Saint Kitts and Nevis தீவில் தற்போது அதிகப்படியான இந்தியர்களும், இந்தியப் பணக்காரர்களும் Citizenship by Investment மூலம் குடியுரிமை பெற்று வருகின்றனர்.

தீபக் - இந்திய தொழிலதிபர்

தீபக் - இந்திய தொழிலதிபர்

Saint Kitts and Nevis நாட்டில் குடியுரிமை பெறுவதன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் மட்டும் அல்லாமல் குடும்பப் பாதுகாப்பு, நலன், எதிர்காலம், விடுமுறை நாட்களைச் செழுமையாகச் செலவழிக்கப் பெரும் துணையாக உள்ளது எனச் சமீபத்தில் முதலீடு மூலம் குடியுரிமை பெற்ற தீபக் என்ற இந்திய தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

3 மாதத்தில் குடியுரிமை

3 மாதத்தில் குடியுரிமை

மேலும் இந்த நாட்டில் முதலீட்டு மூலம் குடியுரிமை திட்டத்தின் கீழ் ஒருவர் வெறும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள் குடியுரிமை பெற முடியும். இது மட்டும் அல்லாமல் இந்த நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான வழிமுறையும் மிகவும் சுலபமானது எனவும் தீபக் தெரிவித்துள்ளார்.

சிறப்புச் சலுகை

சிறப்புச் சலுகை

Saint Kitts and Nevis நாட்டு அரசு தற்போது டிசம்பர் 31, 2021 வரையில் முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது முதலீட்டு மூலம் குடியுரிமை திட்டத்தில் இதற்கு முன்பு 1,95,000 டாலர் முதலீடு செய்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும், ஆனால் டிசம்பர் 31 வரையில் 1,50,000 டாலர் முதலீடு செய்தாலே குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rich Indians eager to get dual citizenship from Saint Kitts and Nevis

Rich Indians eager to get dual citizenship from Saint Kitts and Nevis
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X