வலது கால் எடுத்து வைத்த ஜியோமார்ட்... நடு நடுங்கும் ஃப்ளிப்கார்ட் அமேசான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
வலது கால் எடுத்து வைத்த ஜியோமார்ட்... நடு நடுங்கும் ஃப்ளிப்கார்ட் அமேசான்..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் சந்தையைப் பிடிக்க அமெரிக்க நிறுவனமான அமேசானும், அமெரிக்காவின் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட்-ம் நடத்திய வர்த்தகப் போட்டியை யாராலும் மறக்க முடியாது. இரு நிறுவனங்களுக்கும் மாறி மாறி தள்ளுபடிகளை அறிவித்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்தனர். போட்டிப் போட்டு, போட்டிப் போட்டு ஓய்ந்து கிடைக்கும் இந்தச் சூழ்நிலையில் களத்தில் இறங்குகிறது ஜியோமார்ட்..

ஆம், நீண்ட நாட்களாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேசிக் கொண்டு இருந்த ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகம் தற்போது ஜியோமார்ட் என்ற பெயரில் கலக்கலாகக் களம் இறங்கியுள்ளது.

ஜியோ மற்றும் ஜியோமார்ட்
 

ஜியோ மற்றும் ஜியோமார்ட்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் திங்கட்கிழமை முதல் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோமார்ட் தளத்தில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஜியோமார்ட் தளத்திற்கு வாடிக்கையாளர்களை உடனடியாகப் பெற வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் ரீடைல், ரீலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களைப் பயன்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களைக் காட்டிலும் ஜியோமார்ட் அதிக வாடிக்கையாளர்களைப் பெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

புதிய கடை

புதிய கடை

ஜியோமார்ட் தற்போது "நாட்டின் புதிய கடை" என்கிற டேக்லைன் உடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் பெரு நகரம் முதல் சிறிய கிரமங்கள் வரையில் இருக்கும் மக்களை அடையவும் எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ஜியோமார்ட் தற்போது ஆரம்பக்கட்டமாக நவி மும்பை, தானே மற்றும் கல்யான் ஆகிய மும்பை பகுதிக்கும் மட்டும் தான் இந்த ஆன்லைன் ஷாப்பிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும்

மும்பையில் தற்போது சோதனை ஓட்டமாக மட்டுமே ஜியோமார்ட் செயல்படுத்தப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் இந்தச் சேவை அறிமுகம் செய்ய இன்னும் குறைந்தது 4 முதல் 6 மாத காலம் தேவைப்படும்.

ஜியோ அறிமுகம் செய்யும்போது கூட முதல் கட்டமாக நிறுவன ஊழியர்களுக்கும், 2வது கட்டமாக நிறுவன ஊழியர்களான ஜியோ வாடிக்கையாளர்கள் பரிந்துரை அதாவது Invitation முறையில் வாடிக்கையாளர்களைச் சேர்த்து 6 மாத சோதனைக்குப் பின்பு தான் டெலிகாம் சேவையான ஜியோ-வை அறிமுகம் செய்தது. அதேபோல் தான் ஜியோமார்ட்-ம் இயங்கும் எனத் தெரிகிறது.

50000 பொருட்களுடன் அதிரடி ஆஃபர்
 

50000 பொருட்களுடன் அதிரடி ஆஃபர்

தற்போது ஜியோமார்ட் தளத்தில் வாடிக்கையாளர்கள் சுமார் 50,000 மளிகை பொருட்களில் தங்களுக்குத் தேவையானவற்றை இலவசமாக ஹோம் டெலிவரி பெறலாம். இவ்விதமான கட்டண அளவீடும் இல்லை, பொருட்கள் பிடிக்கவில்லை எனில் எவ்விதமான கேள்வியும் கேட்காமல் பொருட்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதி, அதிவேகமான டெலிவரி என அதிரடியான சேவைகளை அறிவித்துள்ளது.

2 வருட உழைப்பு

2 வருட உழைப்பு

ரிலையன்ஸ் நீண்ட நாட்களாகப் பேசி வரும் ஆப்லைன் டூ ஆன்லைன் வர்த்தகத் திட்டத்தின் துவக்கம் தான் இது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், பிராண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய மக்கள் என அனைவரையும் இத்தளத்தில் இணைக்கிறது.ட

ஜியோமாரட் வெற்றி அடைந்தால் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பு ஏற்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL launched JioMart: Amazon, Flipkart on big trouble #GameBegins

RIL gears up to take on Amazon, Flipkart with JioMart launch. JioMart will cater to online shoppers in Navi Mumbai, Thane and Kalyan, with plans to scale it up gradually. Reliance Retail, the retail arm of Reliance Industries, on Monday began sending invites to Jio telecom users for registering on the new venture named JioMart.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X