ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தைத் துவங்கிய நாளில் இருந்து படுபிசியாக இருக்கும் நிலையில் பேஸ்புக் மற்றும் இதர 3 நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்ற பின் பிசிக்கு டபுள் ஷிப்போட்டு வேலை செய்துகொண்டு இருக்கிறார்.
பேஸ்புக் ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் முதலீடு செய்தது மூலம் வாட்ஸ்அப் மூலம் ஜியோமார்ட்-ல் மக்கள் ஆர்டர் செய்ய வழிவகைச் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 53,125 கோடி ரூபாய் மதிப்பிலான ரைட்ஸ்-ஐ முதலீட்டாளர்களுக்கு வெளியிட்டது.
இந்த ரைட்ஸ் வெளியீடு குறித்து முதலீட்டாளர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக ஜியோ - பேஸ்புக் கூட்டணி வாயிலாகப் புதிய வாட்ஸ்அப் சாட்பாட் அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ்.

சாட்பாட்
சாட்பாட் என்பது வாடிக்கையாளர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு மனிதர்கள் அல்லாமல் மென்பொருள் வாயிலாகவே அதைப் புரிந்துகொண்டு பதில் அளிக்கும் ஒரு சேவை. சுருக்கமாக நாம் டெலிகாம் கஸ்மர் கேர்-க்கு பேசும் போது 1 -ஐ அழுத்தவும், 2 ஐ அழுத்தவும் என்று வருவது போல் படிப்படியாகத் தேவையின் அடிப்படைபோல் மனிதர்களிடம் பேசுவதற்கு இணைக்கப்படும்.
கிட்டத்தட்ட இதேபோன்றது தான் சாட்பாட், ஆனால் சாட்பாட்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட சேவைக்காக மட்டுமே உருவாக்கப்படுபவை.

ரிலையன்ஸ் சாட்பாட்
இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்காக முதல் முறையாகச் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு சாட்பாட்-ஐ ரிலையன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சாட்பாட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 53,125 கோடி ரூபாய் மதிப்பிலான ரைட்ஸ் வெளியீடு குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்.

ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜிஸ்
இந்த அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்பாட்-ஐ உருவாக்கியது ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜிஸ். முதல் முறையாக மக்களின் பயன்பாட்டுக்கு இந்நிறுவனத்தின் சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பேஸ்புக் உடன் கூட்டணி மூலம் தற்போது அனைத்து மக்களுக்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சாட்பாட் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம், ஹிந்தி, மாராதி, கன்னடா, குஜராத்தி, பங்களா மொழிகளில் பதில் அளிக்கும்.

1000 கோடி ரூபாய்
ரிலையன்ஸ் ஜியோ இந்த ஹாப்டிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை 2019இல் 230 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தில் ரிலையன்ஸ் இன்னும் 700 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"7977111111"
ஜியோவின் இந்தப் புதிய சாட்பாட் சேவையைப் பயன்படுத்த "7977111111" இந்த எண்-ஐ போன் தொடர்புகளில் பதிவு செய்து வாட்ஸ்அப் இணைத்து 'Hi' என மெசேஜ் தட்டினால் போதும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 53,125 கோடி ரூபாய் மதிப்பிலான ரைட்ஸ் வெளியீடு குறித்த கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
இனி வரும் நாட்களில் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் சேவைகளில் அதிகளவிலான சாட்பாட் அறிமுகம் செய்யப்படும்.