அணு உலை கட்டும் ரோல்ஸ் ராய்ஸ்.. எதற்காக.. எங்கு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி விமான இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் புதிதாக அணு உலை கட்டும் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. எது அணு உலையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

 

உலகம் முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு, பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுப்பாடு, நிலக்கரி பயன்படுத்துதல் போன்ற பல பிரச்சனைக்கு அணு உலை மூலம் தீர்வு காண முடியும் எனக் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதுகுறித்து எலான் மஸ் கூடப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது ஆடம்பரமான விலை உயர்ந்த கார் தான், ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் வருவாய் பெறுவது விமான இன்ஜின் தயாரிப்பு அதைச் சார்ந்த வர்த்தகம் தான்.

 ஸ்மால் மாடுலர் ரியாக்டர்

ஸ்மால் மாடுலர் ரியாக்டர்

இந்நிலையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் தனது விமான இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஸ்மால் மாடுலர் ரியாக்டர் (Small Modular Reactor - SMR) பிரிவை 405 மில்லியன் பவுண்ட் தொகை முதலீட்டில் துவங்கியுள்ளது. இந்தப் பிரிவின் மூலம் உலக நாடுகளுக்கு மிகவும் குறைந்த செலவில் சிறிய அளவிலான அணு உலை கட்ட உள்ளது ரோல்ஸ் ராய்ஸ்.

 செலவு குறைவு
 

செலவு குறைவு

பெரிய அணு உலையைக் கட்டுவதைக் காட்டிலும் இந்தச் சிறிய ரக அணு உலையை மிகவும் குறைந்த செலவில் கட்ட முடியும். குறிப்பாக இந்த அணு உலையின் பாகங்கள் அதிகளவில் தொழிற்சாலையிலேயே கட்டமைக்கப்படும் காரணத்தால் போக்குவரத்து தான் முக்கியப் பணியாக இருக்கும்.

 நெட் ஜீரோ இலக்கு

நெட் ஜீரோ இலக்கு

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், அரசின் நெட் ஜீரோ இலக்கை அடைய எங்களுடை திட்டம் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பது மட்டும் அல்லாமல் இலக்கை வேகமாக அடையவும் உதவும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நெட் ஜீரோ இலக்கை 2050க்குள் அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

 40,000 வேலைவாய்ப்புகள்

40,000 வேலைவாய்ப்புகள்

ரோல்ஸ் ராய்ஸ் தற்போது உருவாக்கியுள்ள இந்தப் புதிய வர்த்தகப் பிரிவில் மட்டும் 2050ஆம் ஆண்டுக்குள் சுமார் 40,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என நம்புகிறது. இத்திட்டத்திற்காக ரோல்ஸ் ராய்ஸ், பிஎன்எப் ரெசோர்ஸ் மற்றும் எக்ஸ்லான் ஜெனரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் சேர்ந்து 195 மில்லியன் பவுண்ட்-ம், பிரிட்டன் அரசு 210 மில்லியன் பவுண்ட் தொகையும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

 SMR திட்டம்

SMR திட்டம்

பிரிட்டன் நாட்டில் கட்டப்பட்ட அணு உலைகள் அனைத்தும் கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் காலம் முடிவடையும் அல்லது மூடப்படும் நேரம் நெருங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் SMR திட்டம் பெரிய அளவில் உதவும்.

 20 சதவீத மின்சாரம்

20 சதவீத மின்சாரம்

மேலும் பிரிட்டன் நாட்டின் பிஸ்னஸ் மற்றும் எனர்ஜி துறை செயலாளர் Kwasi Kwarteng ரோல்ஸ் ராய்ஸ் திட்டம் குறித்துப் பேசுகையில், இதில் வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு, பிரிட்டன் நாட்டுக்குத் தேவையான மொத்த மின்சாரத்தில் 20 சதவீதத்தை அணு உலையில் இருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 சீனா

சீனா

சமீபத்தில் சீனாவில் குளிர் காலத்தில் மக்கள் வீட்டில் பயன்படுத்தும் thermostat-க்கு நிலக்கரியைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்பதற்காக Haiyang நகரத்தில் அணு உலை மூலம் நீராவி தயாரித்துப் பைப் இணைப்பு மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் அனுப்படுகிறது. இதன் மூலம் சீனாவில் இப்பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rolls-Royce Plans to Built small low-cost nuclear reactors in UK; launches new business

Rolls-Royce Plans to Built small low-cost nuclear reactors in UK; launches new business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X