ரோல்ஸ் ராய்ஸ் எடுத்த வரலாற்று முடிவு.. 2030க்குப் பின் வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ள நிலையில் ஆடம்பர கார்களுக்குப் பெயர்போன ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

 

டெஸ்லாவின் வெற்றிக்கு பின்பு புதிகாகப் பல எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் உருவாகியிருப்பது மட்டும் அல்லாமல் ஏற்கனவே சந்தையில் இருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை இழக்கக் கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா.. உண்மை நிலவரம் என்ன.. தமிழகத்தில் எத்தனை நாட்கள்..!

ஆடம்பர கார் உலகம்

ஆடம்பர கார் உலகம்

ஆடம்பர கார் உலகில் தனக்கான இடத்தை எப்போதும் இழக்காமல் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ், சக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையாகச் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வண்ணம் பெட்ரோல் கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை 2030 முதல் முழுமையாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்

இதுக்குறித்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Torsten Müller-Ötvös 2030 முதல் அதாவது அடுத்த 9 ஆண்டுகளில் ரோல்ஸ் ராய்ஸ் பெட்ரோல் கார்களை விற்பனையை முழுமையாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

பென்ட்லி, ஜாகுவார்
 

பென்ட்லி, ஜாகுவார்

இந்த அறிவிப்பு மூலம் ஆடம்பர பிரிவில் பென்ட்லி, ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனங்களுடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. பெரும் நிறுவனங்கள் எடுக்கும் இந்த முடிவின் மூலம் சிறு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் தீவிரம் காட்ட உந்துதலாக இருக்கும்.

BMW நிறுவனம்

BMW நிறுவனம்

ரோல்ஸ் ராய்ஸ் தற்போது BMW நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், ரோல்ஸ் ராய்ஸ் நிர்வாகம் தனியாகவே உள்ளது. மேலும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க வேண்டும் என முடிவு செய்துள்ள ரோல்ஸ் ராய்ஸ் அக்காருக்கான பெயரையும் வெளியிட்டுள்ளது.

2023ல் புதிய எலக்ட்ரிக் கார்

2023ல் புதிய எலக்ட்ரிக் கார்

ரோல்ஸ்ராய்ஸ் 2023ஆம் ஆண்டு முழு எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பம் மிகவும் எளிதாகக் கிடைக்கும் காரணத்தால் தானியங்கி சேவை இல்லாமல் தயாரிப்பது என்பது ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு மிகவும் எளிதான காரியம்.

ரோல்ஸ் ராய்ஸ் Spectre

ரோல்ஸ் ராய்ஸ் Spectre

கடந்த சில ஆண்டுகளாகவே எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கான பணிகளைச் செய்து வரும் ரோல்ஸ் ராய்ஸ் 2023ல் அறிமுகம் செய்யும் 100 சதவீத எலக்ட்ரிக் கார் Spectre என்ற பெயரில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இக்காரின் வெற்றி மற்றும் வர்த்தகம் மூலம் 2030க்கு இலக்கை அடைவோம் என ரோல்ஸ் ராய்ஸ் நம்புகிறது.

1904 முதல் ரோல்ஸ் ராய்ஸ்

1904 முதல் ரோல்ஸ் ராய்ஸ்

மே 4, 1904ஆம் ஆண்டுச் சார்லஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்ரி ராய்ஸ் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் ரோல்ஸ் ராய்ஸ். இந்நிறுவனம் துவங்கியதில் இருந்து V-12 இன்ஜின் கொண்ட கார்களை மட்டுமே தயாரித்து வரும் நிலையில் முதல் முறையாக இன்ஜின் இல்லாத எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது வரலாற்று முடிவாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rolls-Royce to end selling petrol cars by 2030; New 100% Electric car Spectre to launch by 2023

Rolls-Royce to end selling petrol cars by 2030; New 100% Electric car Spectre to launch by 2023
Story first published: Thursday, September 30, 2021, 18:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X