அதானி கொடுத்த சூப்பர் ஆஃபர்.. லட்சாதிபதியாக சூப்பர் சான்ஸ்.. நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று அதானி குழுமம். நாட்டில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், இவர்களது காட்டில் எப்போதும் பண மழைதான்.

 

உள்கட்டமைப்பு துறையில் இன்று இந்தியா முதல் சர்வதேச நாடுகள் வரையில் கொடி கட்டி பறக்கும், அதானி குழுமம், கடந்த ஆண்டில் கொரோனா நெருக்கடியில் கூட, மிகப்பெரிய அளவில் வளர்ச்சியினைக் கண்டது.

இதனால் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்ற பதவிக்கு சொந்தகாரர் ஆனார் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி.

சந்தை மதிப்பு 5 மடங்கு அதிகரிப்பு

சந்தை மதிப்பு 5 மடங்கு அதிகரிப்பு

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதானி குழும நிறுவனங்களின் சந்தை ,மதிப்பு 5 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது 1.64 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 8.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கெளதம் அதானியின் குழும நிறுவனங்கள் அசுர வளர்ச்சியினை கண்டு வருகின்றன.

அடுத்தது அம்பானி தான்

அடுத்தது அம்பானி தான்

அகமதாபாத்தினை தளமாக கொண்ட ஒரு நிறுவனமாகும். இது நடுத்தர அளவில் இருந்து, இன்று இந்தியாவில் பணக்கார குடும்பங்களின் வர்த்தகங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது டாடா, பிர்லா, வாடியாஸ் குழுமங்களையும் தாண்டி சென்றுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அதானிக்கு முன்னதாக அம்பானி மட்டுமே உள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.75 கோடி
 

ஒரு மணி நேரத்திற்கு ரூ.75 கோடி

சொத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் அம்பானியின் சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராகும். இதே அதானியின் சொத்து மதிப்பு சுமார் 69 பில்லியன் டாலர்களாகும். 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் அதானி ஒரு மணி நேரத்திற்கு 75 கோடி ரூபாய் தனது சொத்தில் சேர்த்து கொண்டு இருந்தார் என்கிறது தரவுகள். இது உலகின் மற்ற பெரும் பணக்காரர்களை விட மிக அதிகம்.

செம வளர்ச்சியில் அதானி குழும நிறுவனங்கள்

செம வளர்ச்சியில் அதானி குழும நிறுவனங்கள்

உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து வந்து கொண்டு இருக்கும் நிலையில், அதானி குழுமம் மின்சாரம், போர்ட்ஸ், கேஸ் டிஸ்டிரிபியூசன், பவர் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட துறைகளில் பல மடங்கு சந்தை மூலதனத்தினை கண்டுள்ளது. இவற்றில் சில பங்குகள் கிட்டதட்ட 11 மடங்கு உயர்வினைக் கண்டன.

இவ்வளவு லாபமா?

இவ்வளவு லாபமா?

இதனையடுத்து ஆறு அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1.64 லட்சம் கோடியில் இருந்து 8.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 420% அதிகரிப்பாகும்.

அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மே 2020ல் - 12,604 கோடி ரூபாயாகும். மே 2021ல் 1,47,292 கோடி ரூபாயாகும். இது 1069% வளர்ச்சியாகும்.

இதன் சந்தை மதிப்பு எவ்வளவு?

இதன் சந்தை மதிப்பு எவ்வளவு?

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மே 2020ல் 15,348 கோடி ரூபாயாகும். மே 2021ல் 1,44,603 கோடி ரூபாயாகும். இது 842% வளர்ச்சியாகும்.

அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மே 2020ல் 19,615 கோடி ரூபாயாகும். மே 2021ல் 1,59,939 கோடி ரூபாயாகும். இது 715% வளர்ச்சியாகும்.

அதானி க்ரீன் எனர்ஜியின் சந்தை மதிப்பு மே 2020ல் 37,497 கோடி ரூபாயாகும். மே 2021ல் 2,03,392 கோடி ரூபாயாகும். இது 442% வளர்ச்சியாகும்.

மொத்த வளர்ச்சி விகிதம்?

மொத்த வளர்ச்சி விகிதம்?

அதானி பவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மே 2020ல் 14,155 கோடி ரூபாயாகும். மே 2021ல் 39,012 கோடி ரூபாயாகும். இது 176% வளர்ச்சியாகும்.

அதானி போர்ட்ஸ் & செஷ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மே 2020ல் 64,448 கோடி ரூபாயாகும். மே 2021ல் 1,57,041 கோடி ரூபாயாகும். இது 144% வளர்ச்சியாகும்.

ஆக மொத்தம் ஆறு நிறுவனங்களின் சந்தை மதிப்பானது மே 2020ல் 1,63,666 கோடி ரூபாயாக இருந்த நிலையில், மே 2021ல் 8,51,279 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

லட்சாதிபதியாக வாய்ப்பு?

லட்சாதிபதியாக வாய்ப்பு?

அதானியின் டோட்டல் கேஸ் நிறுவனத்தின் கடந்த ஆண்டு மே 26, 2020ல் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 11.34 லட்சம் ரூபாயாகும். மே 20,2020ல் இந்த பங்கின் விலை வெறும் 114 ரூபாய் தான். இன்று அதன் விலை 1,293 ரூபாயாகும். கடந்த 12 மாதங்களில் இது 1,034% வளர்ச்சி கண்டுள்ளது.

போட்டி நிறுவனங்களின் லாபம்

போட்டி நிறுவனங்களின் லாபம்

அதானியின் டோட்டல் கேஸ் நிறுவனத்தின் 52 வார குறைந்தபட்ச விலை 113.10 ரூபாயாகும், மே 27, 2020 அன்று கண்டது. இதே ஒரு வருட காலகட்டத்தில் சென்செக்ஸ் 68%மும், நிஃப்டி 68.25% ஏற்றம் கண்டுள்ளது.

இதே காலகட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலையானதுன் 77.92%மும், இந்திரபிரசாத கேஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 13.17%மும், குஜராத் ஸ்டேட் பெட்ரோனெட் 43.36%மும் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் அதானி கொடுத்த செம ஆஃபர் தான் இது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs.114 to Rs.1,293: adani gave an opportunity to become a multibagger

Adani group latest updates.. Rs.114 to Rs.1,293: adani gave an opportunity to become a multibagger
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X