ஆஹா... பிரதமர் சொன்ன ரூ. 20 லட்சம் கோடிக்கு புது கணக்கால்ல இருக்கு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி சொன்ன 20 லட்சம் கோடி ஆன்லைன் முழுக்க டிரெண்டாகி விட்டது.

 

எந்த அளவுக்கு டிரெண்டாகி இருக்கிறது என்றால், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு எத்தனை சைபர் என ஹேஷ் டேக் உருவாகும் அளவுக்கு டிரெண்டாகி இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த 20 லட்சம் கோடி ரூபாய் பற்றி ரெட்டிஃப் வலைதளம் ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. அதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன் 10 % ஜிடிபியை பார்த்துவிடுவோம்.

10 % ஜிடிபி

10 % ஜிடிபி

உலக வங்கியின் தரவுகள் படி இந்தியாவின் மொத்த ஜிடிபி 2.7 ட்ரில்லியன் டாலர். இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமாராக 202 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. இந்தியா, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பல வழிகளில் பல திட்டங்களை அறிவித்து இருப்பது, இனி அறிவிக்க இருக்கிறது. எனவே இந்தியா தன் மொத்த ஜிடிபியில் 10 %-த்தை கொரோனா திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

5-வது இடம்

5-வது இடம்

Ceyhun Elgin Columbia பல்கலைக்கழகத்தின் கணக்குப் படி, உலகிலேயே ஜப்பான் தான், தன் நாட்டின் மொத்த ஜிடிபியில் 21.1 %-க்கு பணத்தை கொரோனா ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு அறிவித்து இருக்கிறார்கள். அமெரிக்கா, தன் மொத்த ஜிடிபியில் 13 %-த்தை அறிவித்து இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இந்தியா இந்த 20 லட்சம் கோடியை அறிவித்து (ஜிடிபியில் 10 %), 5-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது.

ரெட்டிஃப் செய்தி
 

ரெட்டிஃப் செய்தி

ஆனால் ரெட்டிஃப் வலைதளமோ, பல நாடுகளும் புதிதாக அறிவித்து இருக்கும் கொரோனா பேக்கேஜ்கள் முழுமையாக புதிய செலவுகள். ஆனால் இந்தியா சொல்வது போல, 20 லட்சம் கோடி ரூபாய் புதிய செலவுகள் இல்லை என உதாரணங்களை கையில் எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்கா

அமெரிக்கா

சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா சுமாராக 2.2 ட்ரில்லியன் டாலர் (150 லட்சம் கோடி ரூபாய்) கொரோனா உதவித் திட்டங்களாக, புதிய செலவுகளாகச் சொல்லி இருக்கிறது ரெட்டிஃப். குறிப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெட்ரல் ரிசர்வ் அறிவித்த வட்டி விகித குறைப்புகளை எல்லாம், அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் தெளிவாகச் சொல்கிறது ரெட்டீஃப் வலைதளம்.

இந்தியா கணக்கு

இந்தியா கணக்கு

இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளமோ, இந்தியாவின் 20 லட்சம் கோடி ரூபாயில் மார்ச் 27 அன்று நிதி அமைச்சர் அறிவித்த 1.7 லட்சம் கோடி + ஆர்பிஐ அறிவித்த லிக்விடிட்டி திட்டங்கள் 8.04 லட்சம் கோடி எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறது.

புதிய திட்டம் இல்லை

புதிய திட்டம் இல்லை

ஆக மொத்தத்தில், மற்ற நாடுகள் கொரோனா உதவித் திட்டங்களை (புதிய செலவுகளை) தனியாகச் சொல்லி இருப்பதாக ரெட்டீஃப் சொல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் முழுக்க புதிய திட்டங்கள் இல்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்கிறது. அதை வைத்து தான், மொத்த ஜிடிபியில் 10 சதவிகிதத்தை கொரோனா திட்டங்களுக்கு செலவழிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். இது எல்லாம் அரசுக்கு தான் வெளிச்சம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 20 lakh crore not fully new spending it include Rs 9.74 lakh crore old packages

The narendra modi announced 20 lakh crore is not fully a new spending. This package includes old Finance minister 1.7 lakh crore package and 8.04 lakh crore RBI liquidity measures.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X