சுதந்திரத்திற்கு முன் அமெரிக்கா டாலரின் மதிப்பு என்ன தெரியுமா..? வியக்கவைக்கும் உண்மை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1947 ல் இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒரே மதிப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது.

 

ஏனெனில் அப்போது இந்தியாவிற்கு பெரியளவில் கடன் இல்லை. ஆனால் அதன் பிறகு 1951க்கு பிறகு தான் இந்தியா வெளி நாடுகளில் இருந்து கடன் வாங்க தொடங்கியது. அப்போதே இந்திய ரூபாயின் மதிப்பும் வலுவிழக்கத் தொடங்கியது.

இந்தியாவின் கடன் வளர்ச்சி அடைய, அடைய ரூபாயின் மதிப்பும் அதல பாதாளம் நோக்கி சென்று கொண்டுள்ளது.

சுதந்திரம் பெற்ற ஆண்டில் ரூபாய் மதிப்பு

சுதந்திரம் பெற்ற ஆண்டில் ரூபாய் மதிப்பு

1947ல் 1 டாலரின் மதிப்பு 4.16 ரூபாயாக இருந்த நிலையில், 1974க்கு பிறகே 8 ரூபாயினை தொட்டது. அதுவரையில் அதே விகிதத்தில் தான் இருந்தது. இதே 1983ல் 10.1 ரூபாயினை தொட்டது. 1990 வரையில் வெறும் 20 ரூபாய்க்குள்ளேயே தான் இருந்துள்ளது. ஆனால் 1991க்கு பிறகு தான் வருடத்திற்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என சரிய ஆராம்பித்தது. இப்படி சரிய ஆரம்பித்த ரூபாயின் மதிப்பானது 2000ம் ஆண்டில் கூட வெறும் 44.94 ரூபாயாகத் தான் இருந்துள்ளது.

2019ல் நிலவரம் என்ன?

2019ல் நிலவரம் என்ன?

இதன் பிறகு 2012ம் ஆண்டில் 50 ரூபாயினையும் தாண்டி, 53.44 ரூபாயாக இந்த ஆண்டில் இருந்தது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 2013ல் 56.57 ரூபாயாக இருந்த ரூபாயின் மதிப்பு, 2014ல் 62.33 ரூபாயாக சரிவினைத் தொட்டது. ஆனால் அதன் பிறகு மோசமான சரிவினைக் காண ஆரம்பித்த ரூபாயின் மதிப்பானது 2019ல் 73.66 ரூபாயினை தொட்டது.

கொரோனா காலத்தில் எப்படி?
 

கொரோனா காலத்தில் எப்படி?

இதே 2020 ஜூன் மாதத்தில் 76.38 ரூபாயாக சரிவினைக் கண்டது. எனினும் படிப்படியாக சற்று குறைந்து தற்போது சுமார் 73 ரூபாய் என்ற லெவலில் தற்போது உள்ளது (பிப்ரவரி 04, 2021). இப்படி தொடர்ச்சியாக சரிவினை கண்டு வரும் ரூபாயின் மதிப்பானது 1962 - 1965களில் இந்தியா சீனா இடையேயான உறவு மோசமான நிலையில் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சயமத்தில் கூட இந்திய ரூபாயின் மதிப்பானது 7.50 ரூபாயினை தொட்டது.

எண்ணெய் நெருக்கடியும் ஒரு காரணம்

எண்ணெய் நெருக்கடியும் ஒரு காரணம்

இதே 1973களில் எண்ணெய் நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டதாக அறிக்கைகள் கூறுகின்றன, ஏனெனில் அந்த சமயத்தில் ஓபெக் நாடுகளில் எண்ணெய் உற்பத்தியினை குறைத்தன. இதனால் அந்த காலகட்டத்தில் ரூபாயின் மதிப்பு பெரும் சரிவினைக் கண்டது. எனினும் அதன் பிறகு அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்த இந்தியா, வெளி நாட்டுக் கடன் வாங்க வேண்டியிருந்தது. இதனால் ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியினைக் கண்டது. இது 1990களில் 17.50 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.

இந்தியாவுக்கு இது மோசமான காலம்

இந்தியாவுக்கு இது மோசமான காலம்

ஆனால் 1990 என்பது இந்தியாவுக்கு மிக மோசமான காலம் என்றே கூறலாம். ஏனெனில் பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் அரசின் வருவாயில் 39% வட்டியாக செலுத்தப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. அப்போதே நிதி பற்றாக்குறை என்பது ஜிடிபியில் 7.8% ஆக இருந்துள்ளது. இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியினை கண்டது. இது சர்வதேச சந்தையிலும் நாணய மதிப்பினை குறைத்தது.

ஏற்றுமதி & இறக்குமதி

ஏற்றுமதி & இறக்குமதி

ஏனெனில் இந்தியாவின் ஏற்றுமதி மலிவாகவும், இறக்குமதி சந்தை விலை உயர்ந்ததாகவும் இருந்தது. நாம் ஏற்றுமதியை விட இறக்குமதியை தான் அன்றிலிருந்து இன்று வரை அதிகமாக செய்கிறோம். இதனால் நாம் அதிக விலை கொடுத்து தான் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆக இதுவும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த ஆண்டில் கொரோனாவும் வந்து பொருளாதாரத்தினை வாரிச் சுருட்டிக் கொண்டது.

வரலாறு காணாத சரிவு

வரலாறு காணாத சரிவு

அதிலும் கடந்த ஆண்டில் ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது. ஏனெனில் கச்சா எண்ணெய் இறக்குமதி, எண்ணெய் விலை அதிகரிப்பு, அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேற்றம், அரசின் கடன் விகிதம் அதிகரிப்பு, பணவீக்க விகிதம், இறக்குமதி அதிகம், கொரோனா வைரஸ் என பல காரணங்களினால் வீழ்ச்சி கண்டுள்ளது.

ரூபாய் வீழ்ச்சியால் நன்மை உண்டா?

ரூபாய் வீழ்ச்சியால் நன்மை உண்டா?

ரூபாயின் சரிவால் சிலருக்கு நன்மையும் கிடைக்கும். குறிப்பாக ஏற்றுமதி செய்பவர்களுக்கு லாபம் தான்.ஐடி துறையினருக்கும் இந்த சரிவு நன்மை தான். ஏனெனில் அவர்களுக்கு அமெரிக்கா ரூபாயின் மதிப்பில் செலுத்துவதால், நமது வீழ்ச்சி இத்துறையினருக்கு சாதகமாக இருக்கும். எனினும் ரூபாயின் சரிவால் தாக்கமே அதிகம்.

இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால், விலைவாசி அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், மற்ற அடிப்படை தேவைகளின் விலையும் அதிகரிக்கும். டாலரில் செலுத்த வேண்டிய செலவினங்களுக்கு அதிக ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். கல்வி கற்பதற்கான செலவு மற்றும் வெளிநாட்டு பயண செலவுகள் என பலவும் அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee’s journey since independence: 1USD to INR from 1947 to till now,

Indian Rupee updates.. Rupee’s journey since independence: 1USD to INR from 1947 to till now
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X