தொடர்ந்து சரிவிலேயே ரூபாயின் மதிப்பு.. என்ன தான் காரணம்.. எப்போது தான் மீண்டு வரும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.

 

சமீப காலமாகவே இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 75 - 76 ரூபாய்க்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது.

இது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சரிவிலேயே காணப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

அதிலும் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் 76.10 ரூபாயாக தொடங்கிய இந்திய ரூபாயின் மதிப்பானது, அதிகபட்சமாக 76.11 ரூபாய் வரை சரிந்து, பின் தற்போது 75.78 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை நிலவரத்தோடு ஒப்பிடும்போது சற்று இதன் மதிப்பு அதிகரித்து இருந்தாலும், நேற்றைய முடிவு விலையுடன் ஒப்பிடும்போது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

நேற்று ரூபாயின் மதிப்பு

நேற்று ரூபாயின் மதிப்பு

நேற்றைய முடிவு விலையானது 75.78 ரூபாயாகும். இந்த நிலையில் சென்செக்ஸ் இன்று காலையில் சரிவில் தொடங்கிய நிலையில், தற்போது பெரியளவில் மாற்றமின்றி 5 புள்ளிகள் மட்டும் ஏற்றம் கண்டு 33,543 ஆக வர்த்தகமாகி வருகிறது. இது இன்று காலை நேர வர்த்தகத்தில் 200 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டாலரின் மதிப்பு
 

டாலரின் மதிப்பு

இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 1 புள்ளிகள் அதிகரித்து 9,903 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே வியாழக்கிழமையன்று அமெரிக்கா பங்கு சந்தையானது 5 சதவீதம் வீழ்ச்சி கண்ட நிலையில், சென்செக்ஸ் 800 புள்ளிகள் கிட்ட வீழ்ச்சி கண்டது. இதன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பானது சற்று வலுவடைந்து வருகிறது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

இந்த நிலையில் இன்று ஏப்ரல் மாத உற்பத்தி குறித்தான அறிக்கையும், மே மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடு குறித்த தரவும் வெளியாக உள்ளது. இதுவும் ரூபாயின் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. அதோடு வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மூலதன சந்தையில் இருந்து 805.14 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

பலவீனமான உணர்வு

பலவீனமான உணர்வு

இதற்கிடையில் இந்தியா மற்றும் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் பலவீனமான உணர்வாக இருந்து வருகிறது. இதுவும் ஏற்கனவே இருக்கும் முதலீடுகளை வெளியே எடுக்கவும், இதே புதிய முதலீடுகளை கட்டுப்படுத்தவும் காரணமாக உள்ளது. ஆக இதுவும் இந்திய ரூபாயின் தொடர்ன் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee trade at lower 75.78 against dollar

Investor sentiment remained fragile due to rising coronavirus pandemic cases across the world and gloomy economic outlook. so Indian rupee sharply fall against dollar.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X