இந்திய ரூபாய் மதிப்பு 80ஐ தாண்டும்.. அதிரவைக்கும் காரணங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பின் காரணமாக ஒருபக்கம் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வரும் நிலையில், மறுபக்கம் இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடு அதிகளவில் வெளியேறி வரும் காரணத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் வரையில் சரியும் என ஆய்வுகள் கூறுகிறது.

 

ரூபாய் மதிப்பு இந்த மோசமான காலகட்டத்தை அடையும் முன் ரிசர்வ் வங்கி உடனடியாக செயல்பட்டு முக்கியமான நடவடிக்கையை எடுக்க வேண்டும், இல்லையெனில் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.

 இந்திய ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு

2020ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் இன்று வரையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7.7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தை இன்னும் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை முதல் பங்குச்சந்தை வர்த்தகம் என அனைத்தும் மந்தமாக இருக்கும். இவை அனைத்தும் தாண்டி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாக்கத் தொடர்ந்து அன்னிய முதலீடுகளை வெளியேற்றம் செய்து வருகின்றனர்.

இது தொடரும் நிலையில், அடுத்த 3 மாதம் அதாவது 2020இன் அரையாண்டு முடிவதற்குள் இன்னும் 6 சதவீதம் ரூபாய் மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா பாதிப்பு

சீனா பாதிப்பு

2019 இறுதியிலேயே சீனாவில் கொரோனா பாதிப்பு துவங்கிய நிலையில் ஏற்றுமதி அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் சீன பொருட்களைச் சார்ந்து இருக்கு நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் பாதித்த காரணத்தால் அப்போதிலிருந்தே அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது.

 2019 டூ 2020
 

2019 டூ 2020

இந்நிலையில் 2019 டிசம்பர் 30ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.32 இல் இருந்து ஏப்ரல் 21ஆம் தேதி ரூபாய் மதிப்பு 76.83 ரூபாய் வரையில் சரிந்து இந்திய சந்தையைப் பதம் பார்த்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இக்காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த காரணத்தால் ரூபாய் மதிப்பின் சரிவு கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இல்லையெனில் ரூபாய் மதிப்பு இன்னும் மோசமான நிலையில் இப்போது அடைந்திருக்கும்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இனி வரும் காலத்திலும் இந்திய ரூபாய் மதிப்பு மோசமான நிலையைச் சந்திக்கும் சூழ்நிலைகள் இருப்பதால் ரிசர்வ் வங்கி உடனடியாகச் செயல்பட்டு அன்னிய முதலீட்டை வெளியேற்றத்தைத் தடுக்கும் வகையில் நடவடிக்கையை உடனடியாகச் செயல்படுத்தியாக வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee value might slump to 80 per dollar: RBI need to act fast

The Indian Rupee could slump as low as 80 per dollar as the Reserve Bank of India has so stayed away from propping it up. Coupled with the plummeting crude oil prices and continuous FDI outflows, will push it towards historic lows.
Story first published: Wednesday, April 22, 2020, 6:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X