ரஷ்யா-வின் 35 டாலர் தள்ளுபடிக்கு பின் இப்படியொரு விஷயம் இருக்கா..?! அமெரிக்கா ஷாக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யா தனது வர்த்தகத்தை மேம்படுத்து இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் அளிப்பது மட்டும் அல்லாமல் ரூபாய் - ரூபிள் நாணய பரிமாற்றத்தில் அளிக்க முடிவு செய்துள்ளது.

 

இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் பல எச்சரிக்கையை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இதற்குப் பின்பு இருக்கும் காரணம் தான் தற்போது அதிர்ச்சி அளிக்கிறது.

ரஷ்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியா..!

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

உக்ரைன் மீது போர் தொடுத்த பின்பு ரஷ்யா மீது அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய நாடுகளும் கடுமையான தடைகளை விதித்தது. ஆனால் இன்றும் ஐரோப்பா ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எரிபொருள், எரிவாயுவை வாங்கிக்கொண்டு இருக்கிறது, ஆனால் அமெரிக்கா இந்தியாவுக்கு மட்டும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இரண்டு முக்கிய விஷயம்

இரண்டு முக்கிய விஷயம்

அமெரிக்காவின் இந்த மாறுபட்ட மனநிலைக்கு முக்கியக் காரணம் ரஷ்யா உடனான ரூபாய்- ரூபிள் நாணய வர்த்தகம் மற்றும் ரஷ்யா மத்திய வங்கியின் SPFS பேமெண்ட் முறையை பயன்படுத்தத் திட்டமிட்டு வருவது தான். இதை மட்டும் செய்தால் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் சர்வதேசச் சந்தையில் ஆதிக்கமும் பெரிய அளவில் குறையும்.

அமெரிக்காவின் ஆதிக்கம்
 

அமெரிக்காவின் ஆதிக்கம்

உக்ரைன் போர் மூலம் ரஷ்யாவின் ஆதிக்கத்தையும் வளர்ச்சியைக் குறைக்க அமெரிக்கப் பல தடைகளை விதித்த நிலையில், தற்போது ரஷ்யா தன்னிடம் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் முதல் படி தான் இந்த ரூபிள் நாணயத்தின் வாயிலாக வர்த்தகப் பரிமாற்றம்.

இந்தியா

இந்தியா

இந்தியா மிகப்பெரிய இறக்குமதி நாடு என்பது அனைவருக்கும் தெரியும், இந்திய அரசு பெரும்பாலான இறக்குமதி வர்த்தகத்தை அமெரிக்க டாலரின் வாயிலாகச் செய்யும் வேளையில், கச்சா எண்ணெய் இறக்குமதி போன்ற பல பில்லியன் டாலர் புழங்கும் பிரிவில் ரூபிள் வாயிலாகப் பேமெண்ட் செய்தால் டாலருக்கான டிமாண்ட் குறைந்து அதன் மதிப்பு பெரிய அளவில் குறையும்.

ரஷ்யா-வின் அறிவிப்பு

ரஷ்யா-வின் அறிவிப்பு

ரஷ்யா இந்தியாவிடம் மட்டும் அல்லாமல் ஐரோப்பா, சீனா, துருக்கி, பிற சோவியத் நாடுகள் உடனும் டாலருக்கு பதிலாக ரூபிள் வாயிலாகக் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய அறிவுறுத்த டாலரை மொத்தமாக ஒதுக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவுக்குப் பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது.

SWIFT தளம்

SWIFT தளம்

இதேபோல் உலக நாடுகள் மத்தியில் பணப்பரிமாற்றம் செய்யும் SWIFT தளத்தைப் பயன்படுத்த அமெரிக்கா ரஷ்யாவுக்குத் தடை விதித்துள்ளது. SWIFT தளம் பெல்ஜியம் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் அமெரிக்கா இந்தத் தளத்தில் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் டாலர் பரிமாற்றத்தை இதன் மூலம் அதிகளவில் ஆதரித்து வருகிறது.

SPFS பேமெண்ட் நெட்வொர்க்

SPFS பேமெண்ட் நெட்வொர்க்

இந்த ஆதிக்கத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யா தன் நாட்டு வங்கிகளுக்கு மத்தியில் பயன்படுத்தும் SPFS பேமெண்ட் நெட்வொர்க்-ஐ பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, இந்தியா - ரஷ்யா மத்தியிலான பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்க முடியாமல் போகும், இது SPFS தளத்தைப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

டாலர் ஆதிக்கம்

டாலர் ஆதிக்கம்

ரஷ்யா இவ்விரு திட்டத்தின் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் டாலர் ஆதிக்கத்தைக் குறைப்பது மட்டும் அல்லாமல் முக்கியமான பொருளாதார நாடுகள் மத்தியிலான பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்தியா மீது அமெரிக்காவிற்கு இருக்கும் கோபம் இது தான்.

35 டாலர் தள்ளுபடி

35 டாலர் தள்ளுபடி

ரூபாய் - ரூபிள் பணப் பரிமாற்றம், SPFS தளம் பயன்பாடு இவ்விரண்டையும் எப்படியாவது இந்தியா பயன்படுத்த வேண்டும், அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ரஷ்யா ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு 35 டாலர் வரையில் தள்ளுபடி கொடுத்து ஆசை காட்டுகிறது. இதை ஏற்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியாவின் நிலைப்பாடு

ஆனால் இந்தியா இரண்டு பக்கமும் பகையை வளர்த்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதேபோல் ரஷ்யாவுக்கு இந்தியா உடனான முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு சீனா உடனான எல்லை பிரச்சனையும் தீர்க்க முயற்சி செய்து வருகிறது. இதேபோல் தள்ளுபடி எண்ணெய்யை முதலில் யூரோவில் வாங்கிக்கொண்டு பின்பு ரூபாய் - ரூபிள் பணப் பரிமாற்றத்தின் கீழ் செய்யத் திட்டமிட்டு வருகிறது.

இந்தியா - ரஷ்யா நட்பு

இந்தியா - ரஷ்யா நட்பு

அமெரிக்காவின் எச்சரிக்கைகளைத் தாண்டி இந்தியா ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யப் பல காரணங்களும், தேவைகளும் உள்ளது. இந்தியா பல ஆண்டுக் காலமாகப் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வருகிறது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்


இதைத் தாண்டி பல போர்களில் இந்தியாவிற்குத் ரஷ்யா துணையாக நின்றுள்ளது. இந்த நட்புறவின் காரணமாகவே அமெரிக்கா ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடை விதிக்கும் போது இந்தியா எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் துணை நின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia $35 discount crude oil for India; Impacts US Dollar domination Putin Mastermind behind it

Russia govt giving 35 dollar discount for crude oil to India, Suggesting Rupee ruble payment, How it Impact US Dollar domination and US SWIFT domination, Putin Mastermind behind in 35 dollar discount for crude oil. 35 டாலர் தள்ளுபடிக்குப் பின் இப்படியொரு விஷயம் இருக்கா..? ரஷ்யா மாஸ்டர் பிளான், அமெரிக்கா ஷாக்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X