வருடத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் சம்பளம்.. ஐஐடி கேம்பஸில் தூள் கிளப்பிய இந்திய மாணவர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனமாக இருந்து வரும் ஐஐடி-யில் கேம்பஸ் இண்டர்வியூ தொடங்கிள்ளது. இதில் இதுவரையில் மூன்று மாணவர்கள் 2 கோடி ரூபாய் வரையிலான சம்பளத்தில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின் படி, ஐஐடி மாணவர் ஒருவருக்கு, சர்வதேச டெக் நிறுவனத்தில் வருடத்திற்கு 2.15 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையே மும்பையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சுமார் வருடத்திற்கு, 2.05 கோடி ரூபாய் சம்பளத்தினை உபெர் நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

5 ஆண்டுகளில் ரூ.14 லட்சம்.. எந்த திட்டம்.. எவ்வளவு முதலீடு.. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்..!

முன்பை விட சம்பளம் அதிகம்

முன்பை விட சம்பளம் அதிகம்

இதே கவுகாத்தியை சேர்ந்த ஐஐடி மாணவருக்கும் 2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் ஐஐடி மும்பை மாணவர் ஒருவருக்கு, அமெரிக்காவினை சேர்ந்த ஐடி நிறுவனமான கோஹெசிட்டி சுமார் 1.54 கோடி ரூபாய் சம்பளத்தினை வழங்கியதாக சுட்டிக் காட்டியுள்ளது.

சென்னை ஐஐடியில் கேம்பஸ்

சென்னை ஐஐடியில் கேம்பஸ்

ஐஐடி-யின் ரூர்க்கி மாணவர்கள் 11 பேர் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதில் மூன்று மாணவர்களுக்கு 1.3 - 1.8 கோடி ரூபாய் வரையிலான சலுகைகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது முதல் நாளிலேயே 46% வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. முதல் பாதிலேயே 176 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், முதல் நாள் முடிவில் மொத்தமாக 407 பேருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐஐடி குவகாத்தி
 

ஐஐடி குவகாத்தி

ஐஐடி குவகாத்தியில் கடந்த ஆண்டில் 158 வேலைவாய்ப்புகள் கிடைத்த நிலையில், இந்தாண்டில் முதல் நாளிலேயே கிட்டதட்ட 200 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொதுவாக கேம்பஸில் கடந்த ஆண்டினை காட்டிலும் வேலை ஆஃபர்களும் அதிகரித்துள்ளது. சம்பள விகிதமும் அதிகரித்துள்ளது.

சிறந்த தேர்வர்கள்

சிறந்த தேர்வர்கள்

இதில் மைக்ரோசாப்ட், டெக்சாஸ், இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், குவால்காம், கூகுள், பாஸ்டன் கன்சல்டிங் குரூப், ஏர்பஸ், அமேசான், ஆப்பிள், ஏபிடி போர்ட்போலியோ பிரைவேட் லிமிடெட், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பணியமர்த்தலை செய்துள்ளன.

எந்தெந்த பிரிவுகள்

எந்தெந்த பிரிவுகள்

மேலும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் சுயவிவரங்கள் அடிப்படையில் பல்வகைப்படுத்தப்பட்டது. அதில் ஆர்வம் மிக்க தொகுதியில் மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக பொறியாளர் (Product Engineer), ரிசர்ச் & டெவலப்மெண்ட், சாப்ட்வேர் இன்ஜினியர், ஹார்டுவேர் இன்ஜினியர், பிசினஸ் அனலிஸ்ட், பைனான்ஷியல் அனலிஸ்ட், மார்கெட்டிங் அனலிஸ்ட், கெட்(GET), டேட்டா சயின்ஸ், தயாரிப்பு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் வேலைகள் வழங்கப்பட்டன என்று, ஐஐடி ரூர்க்கியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவின் பொறுப்பாளர் பேராசிரியர் வினய் சர்மா கூறியுள்ளார்.

ட்விட்டர் சிஇஓவுக்கு வாழ்த்து

ட்விட்டர் சிஇஓவுக்கு வாழ்த்து

இதற்கிடையில் ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஐடியின் முன்னாள் மாணவர் பராக் அக்ரவாலுக்கு வாழ்த்துக்கள் என ஐஐடி பாம்பே ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது. அதில் அக்ரவால் 2005ல் பிடெக் ஐஐடி மும்பையில் படித்தார் என ட்வீட் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salary above Rs 2 crore per year, Indian students achieve record on IIT campus interviews

Salary above Rs 2 crore per year, Indian students achieve record on IIT campus interviews/ வருடத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் சம்பளம்.. ஐஐடி கேம்பஸில் தூள் கிளப்பிய இந்திய மாணவர்கள்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X