ஸ்லாக் நிறுவனத்தை 27.7 பில்லியன் டாலருக்கு வாங்கும் சேல்ஸ்போர்ஸ்.. மைக்ரோசாப்ட் உடன் போட்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஸ்ன்ஸ் மென்பொருள் வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்கும் சேல்ஸ்போர்ஸ் அடுத்தகட்டத்திற்குச் செல்வதற்காகவும், புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெறுவதற்காகவும் சுமார் 27.7 பில்லியன் டாலர் முதலீட்டில் வொர்க்ப்ளேஸ் மெசேஜிங் சேவை நிறுவனமான ஸ்லாக் செயலியை வாங்க உள்ளது.

 

வோடபோனின் அதிரடி நடவடிக்கை.. 2 திட்டங்கள் அதிரடி விலையேற்றம்.. அடுத்தது ஏர்டெல், ஜியோ தானா?

ஸ்லாக் நிறுவனத்தின் கைப்பற்றல் மூலம் இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நேரடியாகப் போட்டிப்போடும் அளவிற்குச் சேல்ஸ்போர்ஸ் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21 வருட வர்த்தகம்

21 வருட வர்த்தகம்

சேல்ஸ்போர்ஸ் மென்பொருள் வர்த்தகத் துறையில் சுமார் 21 வருடம் இயங்கி வரும் நிலையில், இந்நிறுவனத்தின் மிகப்பெரிய கைப்பற்றலாக ஸ்லாக் நிறுவனம் திகழ்கிறது.

சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் தான் முதன் முதலில் இண்டர்நெட் இணைப்புக் கொண்டு அனைவருக்கும் மென்பொருளை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வர்த்தகம் செய்யத் துவங்கியது. இந்நிறுவனத்தின் இந்த முயற்சி Game Changer என்று தான் சொல்ல வேண்டும்.

ஸ்லாக் செயலி

ஸ்லாக் செயலி

ஸ்லாக் செயலி அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 6 வருடங்கள் மட்டுமே ஆன நிலையில் உலக நாடுகளில் பல கோடி நிறுவனங்கள் அலுவலகத் தகவல் பரிமாற்றத்திற்காக (வொர்க்ப்ளேஸ் மெசேஜிங்) இச்செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்லாக் செயலியின் வெற்றியைப் பார்த்து மைக்ரோசாப்ட் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற 2016ல் சுமார் 8 பல்லியன் டாலர் தொகையை அறிவித்தது, ஆனால் இந்நிறுவன கைப்பற்றலுக்குப் பில்கேட்ஸ் மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

பில் கேட்ஸ்
 

பில் கேட்ஸ்

8 பில்லியன் டாலர் தொகைக்கு ஸ்லாக் நிறுவனத்தைக் கைப்பற்ற பில்கேட்ஸ் மறுப்பு தெரிவித்துவிட்டு, ஸ்கைப் ஃபார் பிஸ்னஸ் செயலியை விரைவாக மேம்படுத்த உத்தரவிட்டார். இந்நிலையில் வெறும் 9 மாத இடைவெளியில் மைக்ரோசாப்ட் ஸ்லாக் செயலிக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் உருவாக்கியுள்ளதாக அறிவித்தது.

ஆபீஸ் 365

ஆபீஸ் 365

ஸ்லாக் உடன் போட்டி போடும் வகையில் மைக்ரோசாப்ட் பல கோடி வணிக நிறுவனங்களுக்கு ஆபீஸ் 365 சப்ஸ்கிரிப்ஷன் கொடுத்துள்ளது. இதன் மூலம் வர்த்தகத்தைப் பெற முடிவு செய்த மைக்ரோசாப்ட், ஆபீஸ் 365 பேகேஜ்-ல் இருந்து கிளாஸ்ரூம் (Classroom) சேவையை நீக்கிவிட்டு மைக்ரோசாப்ட் டீம்ஸ்-ஐ மே 3, 2017ல் இணைத்தது.

பின்னடைவு

பின்னடைவு

ஆபீஸ் 365 பேகேஜ்-ல் டீம் சேவையை இணைத்தது, ஸ்லாக் நிறுவனத்திற்குப் பெரிய வர்த்தகப் பாதிப்பாக இருந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் 365 மென்பொருளில் புதிதாக உருவாக்கிய டீம்ஸ் சாட்டிங் சேவையை இணைத்தது முறையற்றது என ஐரோப்பிய யூனியனில் ஸ்லாக் குற்றஞ்சாட்டியது. இந்த இணைப்பினால் ஸ்லாக்-ஐ விரும்பும் பலர் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உள்ளது எனத் தெரிவித்தது.

லேச்ஸ்போர்ஸ்

லேச்ஸ்போர்ஸ்

இதேபோல் பல லேச்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் பல சேவைகளுக்கு மாறாக மைக்ரோசாப்ட் புதிய சேவைகளை உருவாக்கிய நிலையில் இரு நிறுவனங்களுக்கும் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது.

லிங்கிடுஇன்

லிங்கிடுஇன்

2016ல் லிங்கிடுஇன் நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் மைக்ரோசாப்ட் மற்றும் சேல்ஸ்போர்ஸ் போட்டிப்போட்ட நிலையில் மைக்ரோசாப்ட் கைப்பற்றியது. இதற்குப் பழிவாங்கும் முயற்சியாகவே தற்போது 27.7 பில்லியன் டாலர் கொடுத்து ஸ்லாக் நிறுவனத்தைக் கைப்பற்றி வொர்க்ப்ளேஸ் மெசேஜிங் சேவை பிரிவில் சக போட்டி நிறுவனமாக மாறியுள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

கொரோனா காரணமாக உலகம் நாடுகள் முழுவதும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியற்ற துவங்கிய காரணத்தால் வொர்க்ப்ளேஸ் மெசேஜிங் சேவை அனைத்து ஊழியர்களுக்கும் அடிப்படைத் தேவையாக மாறியுள்ளது. ஸ்லாக் மற்றும் டீம்ஸ் செயலியின் பயன்பாடும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும், வர்த்தகமும் அதிகளவில் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salesforce is buying Slack to take on Microsoft: $27.7 billion deal

Salesforce is buying Slack to take on Microsoft: $27.7 billion deal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X