கொரோனா வைரஸ் பாதிக்காத துறை என ஒன்றைச் சுட்டிக் காட்ட முடியுமா? என்றால் மருத்துவம் மற்றும் பார்மா சார்ந்த விஷயங்களை மட்டுமே சொல்ல முடியும்.
பார்மா துறையை விடுங்கள், நம் ஸ்மார்ட்ஃபோன் விஷயத்துக்கு வருவோம். உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் பிராண்டுகளான ஆப்பிள் தொடங்கி, சாம்சங், சியாமி, ஓப்போ என பலரும் கண்ணா பின்னா என தள்ளுபடியில் செல்போன்களை விற்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்திகள்.
யார் எவ்வளவு ரூபாய் வரை தள்ளுபடி கொடுக்கிறார்கள்? கம்பெனி தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதை எல்லாம் இங்கு விரிவாகப் பார்ப்போம்.
மலிவு விலை வீட்டுக் கடனுக்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் வருமான வரிச் சலுகை இருக்கு தெரியுமா?

சீன கம்பெனிகள்
இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தை எனும் அப்பத்தில், பெரும் பகுதியை தன் கையில் வைத்திருக்கும் சீன கம்பெனிகளான சியாமி, ஒப்போ, விவோ போன்றவர்களும், இந்த முறை கணிசமாக விலையைக் குறைத்து இருக்கிறார்களாம். ஓப்போ கம்பெனி, தன்பிரீமியம் போன்களின் விலையை 7,000 ரூபாய் வரை குறைத்து இருக்கிறார்களாம்.

8 மாடல் சியாமி
இந்தியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் சந்தையை, கையில் வைத்திருக்கும் சியாமி கூட, தன்னுடைய எட்டு மாடல்களில் விலையை குறைத்து இருக்கிறார்களாம். அதிலும் குறிப்பாக 5ஜி மாடல் போன்களின் விலையை சுமாராக 5,000 ரூபாய் வரை குறைத்து இருக்கிறார்களாம். இதற்கே அசந்துவிட்டால் எப்படி? சாம்சங்கின் விலை குறைப்பைப் பாருங்கள்

₹30,000 வரை தள்ளுபடி
தென் கொரியாவைத் தாயகமாகக் கொண்டு செயல்படும் எலெக்ட்ரானிக்ஸ் ஜாம்பவானான சாம்சங் கம்பெனி, தன்னுடைய இரண்டு முன்னணி ஸ்மார்ட்போன்களின் விலையை, முறையே 28,000 ரூபாய் & 30,000 ரூபாய் குறைத்து இருக்கிறார்களாம். சாம்சங் ரசிகர்கள், இந்த செய்தியைப் படிக்கிறீர்கள் என்றால் இப்போதே அந்த மாடல்களை புக் செய்துவிடுங்கள்.

சாம் சங் தரப்பு
இந்த பண்டிகை காலத்தில், சாம்சங் கம்பெனியின் ஸ்மார்ட்ஃபோன்களில் 60 சதவிகிதம் வரை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். அதோடு 12.5 சதவிகிதம் வரை கேஷ் பேக் (Cash Back) சலுகையை எதிர்பார்க்கலாம் என, சாம்சங் இந்தியா கம்பெனியின் துணைத் தலைவர் அசிம் வர்சி சொல்லி இருக்கிறார்.

ஆப்பிள் ஐபோனுக்கே 16,000 தள்ளுபடி
எந்த கம்பெனி, என்ன மாதிரியான பொருட்களை விற்றாலும், ஆப்பிளின் தரத்துக்கு ஈடு இணை இல்லை எனவும் ஒரு ரசிகர் கூட்டம் இந்தியாவில் இருக்கிறது. டியூயல் கேமரா, 12 எம் பி அல்ட்ரா வைட், நைட் மோட், 12 எம் பி முன் கேமரா, மூன்றாம் தலைமுறை A13 Bionic chip, அதிவேக சார்ஜிங் கேபிள் உடன் வரும் 64 ஜிபி ஆப்பிள் ஐபோன் 11-ன் விலை 64,900 ரூபாயாக இருந்தது. இப்போது இயர் பாட் & சார்ஜிங் அடாப்டர் உடன் சேர்த்தே, 16,901 ரூபாய் தள்ளுபடி கொடுத்து 47,999 ரூபாய்க்கு விற்கிறது அமேசான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்டாக்கை தள்ளிவிடும் கம்பெனிகள்
உண்மையிலேயே, மக்கள் கையில் அதிகம் பணம் இல்லை. எனவே வாடிக்கையாளர்கள், புதிய ஸ்மார்ட்ஃபோன் வாங்குவதை ஒத்திப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, ஸ்மார்ட்ஃபோன் பிராண்டுகள், தங்கள் கையிருப்புகளை எல்லாம் காலி செய்யும் விதத்தில் தள்ளுபடிகளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கிறது என கவுண்டர் பாயிண்ட் நிறுவனம் சொல்கிறது.