துபாய் உடன் போட்டிப்போடும் சவுதி.. 44 நிறுவனங்களுக்கு அனுமதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் மூலம் செழிப்பாக வாழும் வளைகுடா நாடுகள் மத்தியில் வர்த்தகப் போட்டி துவங்கிப் பல வருடங்கள் ஆன நிலையில், தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன்பும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஐக்கிய அரபு நாடுகளும், சவுதி அரேபியாவும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகள் தனது வர்த்தக ஆதாரத்தைக் கச்சா எண்ணெய் தாண்டி உருவாக்க வேண்டும் என்பதில் தீவரமாக இருந்த காரணத்தால் பல ஆசிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தது.

தப்போது ஐக்கிய அரபு நாடுகளுக்குப் போட்டியாகச் சவுதி அரேபியாவும் அதிரடியாகக் களத்தில் இறங்கியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியில் மிகப்பெரிய வர்த்தகப் போட்டியை உருவாகியுள்ளது.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

உலகிலேயே அதிகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா புதன்கிழமை மட்டும் சுமார் 44 சர்வதேச நிறுவனங்களுக்குத் தன் நாட்டில் வர்த்தகத்தைத் துவங்க அனுமதி கொடுத்துள்ளது. 2021ல் துவக்கத்தில் சவுதியில் பெப்சிகோ, PepsiCo, Schlumberger, டெலாய்ட், PwC மற்றும் Bechtel ஆகிய நிறுவனங்கள் தலைமை அலுவலகத்தை அமைக்கச் சவுதி உடன் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தலைமை அலுவலகம்

தலைமை அலுவலகம்

இந்த ஒப்புதல் மூலம் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் தத்தம் நிறுவனங்கள் வளைகுடா சந்தை வர்த்தகத்தின் தலைமை அலுவலகத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் அதிகளவிலான திறன் வாய்ந்த ஊழியர்களை உலக நாடுகளில் இருந்து ஈர்க்க உள்ளது.

44 நிறுவனங்கள்
 

44 நிறுவனங்கள்

தற்போது சவுதி அரேபிய அரசு டெக்னாலஜி, உணவு, குளிர்பானம், கன்சல்டிங், கட்டுமானம் துறை சார்ந்த பல நிறுவனங்களுக்கு ரியாத் நகரில் தலைமை அலுவலகத்தை அமைக்க அனுமதி கொடுத்துள்ளது. இதில் யூனிலீவர், பேக்கர் ஹூக்ஸ், சீமென்ஸ் ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.

 சவுதி அரசு உத்தரவு

சவுதி அரசு உத்தரவு

இதேபோல் சவுதி அரேபியா பிப்ரவரி மாதம் அந்நாட்டில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களை ரியாத்-ல் தலைமை அலுவலகத்தை அமைக்காவிட்டால் அரசு ஒப்பந்தங்களை இழக்க நேரிடும் என்ற உத்தரவையும் வெளியிட்டது. இதன் வாயிலாகவும் பல நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்துள்ளது.

முகமது பின் சல்மான்

முகமது பின் சல்மான்

சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வரும் போதே புதிய வர்த்தகத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் இதில் வேகமெடுக்கத் துவங்கிய நிலையில் சவுதி அரேபியா தற்போது அதிரடி காட்டி வருகிறது.

 67 பில்லியன் ரியால் முதலீடு

67 பில்லியன் ரியால் முதலீடு

சவுதி அரேபியாவில் உலக நாடுகள் தலைமை அலுவலகத்தை அமைப்பதன் மூலம் சுமார் சவுதி அரேபியாவில் சுமார் 67 பில்லியன் ரியால் அதாவது 18 பில்லியன் டாலர் முதலீடு கிடைக்கும்.

480 நிறுவனங்கள்

480 நிறுவனங்கள்

இதன் மூலம் 2030க்குள் அந்நாட்டவர்களுக்குச் சுமார் 30,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தற்போது அனுமதி அளிக்கப்பட்ட 44 நிறுவன எண்ணிக்கை 2030க்குள் 480ஆக உயரும் எனச் சவுதி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia beats UAE: 44 International companies setup headquarters in capital Riyadh

Saudi Arabia beats UAE: 44 International companies setup headquarters in capital Riyadh
Story first published: Wednesday, October 27, 2021, 20:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X