இந்தியாவுக்கு உதவிய சவுதி அரேபியா.. பறந்து வரும் ஆக்சிஜன் டேக்.. அதானிக்கு நன்றி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு அடிப்படைத் தேவையாக விளங்கும் ஆக்சிஜனுக்கு அதிகப்படியான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி, பாகிஸ்தான், அமெரிக்கா தொடர்ந்து இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சவுதி அரேபியா இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.

 

 80 டன் திரவ ஆக்சிஜன்

80 டன் திரவ ஆக்சிஜன்

இந்நிலையில் இந்தியாவில் ஆக்சிஜனுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நிலையில் சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் சுமார் 80 டன் திரவு ஆக்சிஜனை இந்தியாவிற்கு அளித்துள்ளது.

 ஏற்றுமதி செய்யும் அதானி

ஏற்றுமதி செய்யும் அதானி

இந்த 80 டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவிற்கு அதானி மற்றும் லைன்டே ஆகிய இரு நிறுவனங்கள் உடன் இணைந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும், சவுதி அரேபியாவின் இந்திய தூதரகம் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

 உலக நாடுகளிடம் உதவி

உலக நாடுகளிடம் உதவி

இந்தியாவில் நாளுக்கு நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு உலக நாடுகளில் இருந்து உதவிகளைப் பெற துவங்கியுள்ளது. ஆக்சிஜென் உற்பத்தி டிரக்குகள், திரவ ஆக்சிஜன் மட்டும் அல்லாமல் அமெரிக்காவிடம் கொரோனா வேக்சினுக்கான கோரிக்கையும் வைத்துள்ளது.

7,100 டன் ஆக்சிஜன் தயாரிப்புத் தளம்
 

7,100 டன் ஆக்சிஜன் தயாரிப்புத் தளம்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் உட்படத் தினமும் 7,100 டன் ஆக்சிஜன் தயாரிக்கும் தளம் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று மற்றும் போக்குவரத்து பிரச்சனையின் காரணமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.

 ஆக்சிஜன் போக்குவரத்தில் சிக்கல்

ஆக்சிஜன் போக்குவரத்தில் சிக்கல்

ஆக்சிஜன் போக்குவரத்தை எளிதாக்க ஆக்சிஜன் டேக்குகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு ஆர்கன் மற்றும் நைட்ரஜன் வாயுவை போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் டிரக்குகளை ஆக்சிஜன் போக்குவரத்து செய்யும் வகையில் மாற்ற உத்தரவிட்டுள்ளது.

 மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி டிரக்கு

மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி டிரக்கு

மேலும் மத்திய அரசு ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திச் செய்ய ஜெர்மனி நாட்டில் இருந்து சுமார் 23 மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி டிரக்குகளை இறக்குமதி செய்துள்ளது. இது அதிகம் பாதிப்பு நிறைந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனையிலும் அமைக்கப்படுவதன் மூலம் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia Ministry of Health provides 80MT liquid oxygen to India

Saudi Arabia Ministry of Health provides 80MT liquid oxygen to India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X