4 முறை மட்டுமே இலவசம்.. எஸ்பிஐ புதிய உத்தரவு.. ஜூலை 1 முதல் அமலாக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வங்கி சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்குகளுக்கு இருந்த சலுகைகளைக் குறைக்கவும், சேவை கட்டணங்களையும் அதிகரிக்க நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

 

BSBD கணக்குகளுக்குப் பொதுவாகவே ஜீரோ பேலென்ஸ் கணக்குகள், ஒருவருக்கு ஒரு BSBD கணக்கு மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் ஒரு சிறப்புக் கணக்கு.

ஜூலை 1ஆம் தேதி முதல்

ஜூலை 1ஆம் தேதி முதல்

இதன் படி ஜூலை 1ஆம் தேதி முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருக்கும் BSBD கணக்குகளுக்கு அளிக்கப்பட்டு இருந்த இலவச ஏடிஎம் சேவை எண்ணிக்கையை 4 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

ஏடிஎம்-ஐ 4 இலவச முறைகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி சேவை கட்டணம் வசூலிக்கும்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

இதேபோல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்குகளின் கூடுதல் மதிப்புக் கூட்டுச் சேவைகளுக்கு 15 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக அதிகரிக்க உள்ளது. இந்தப் புதிய மாற்றமும் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

காசோலை கட்டணம்
 

காசோலை கட்டணம்

இதேபோல் எஸ்பிஐ பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்குகளுக்கு வருடத்திற்கு 10 காசோலைக்கு மட்டுமே இலவசமாக அளிக்கப்படும், 10-க்கு மேலும் பயன்படுத்தும் காசோலைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

காசோலை கட்டண விபரம்

காசோலை கட்டண விபரம்

புதிய அறிவிப்பின் படி முதல் 10 காசோலைகளுக்கு இலவசம், அடுத்த 10 காசோலைகள் கொண்ட 10 காசோலை புத்தகத்திற்கு 40 ரூபாய் + GST, 25 காசோலை புத்தகத்திற்கு 75 ரூபாய் + GST, அவசர 10 காசோலை புத்தகத்திற்கு 50 ரூபாய் + GST வசூலிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

நிதியியலற்ற சேவை இலவசம்

நிதியியலற்ற சேவை இலவசம்

மேலும் வங்கி கிளைகள், ஏடிஎம், கேஷ் டெப்பாசிட் மெஷின் ஆகியவற்றில் அளிக்கப்படும் இலவச நிதியியலற்ற சேவைகளுக்கு எவ்விதமான மாற்றமும் இல்லை. உதாரனாக ஏடிஎம் இயந்திரத்தில் பாஸ்வோர்டு மாற்றுவது போன்றது.

பணப் பரிமாற்ற சேவைகள்

பணப் பரிமாற்ற சேவைகள்

அதுவே வங்கி கிளைகள், ஏடிஎம், கேஷ் டெப்பாசிட் மெஷின் ஆகியவற்றில் செய்யப்படும் பணப் பரிமாற்ற சேவைகளுக்கு 4 முறை மட்டுமே இலவச சேவை அளிக்கப்படும், அதற்கு மேல் செய்யப்பட்டும் ஒவ்வொரு பணப் பரிமாற்றத்திற்கும் 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI allows only 4 free transactions per month for BSBD accounts

SBI allows only 4 free transactions per month for BSBD accounts
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X