விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து இரவோடு இரவாக இந்தியாவை விட்டுத் தப்பி ஓடிய விஜய் மல்லையா இந்தியாவிற்கு அழைத்துவரவும், உரியத் தண்டனையை வாங்கிக் கொடுக்கவும் மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

 

டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..!

இந்நிலையில் விஜய் மல்லையாவிற்குக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைந்த இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கும் விஜய் மல்லையா சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

கிங்ஃபிஷர் விஜய் மல்லையா

கிங்ஃபிஷர் விஜய் மல்லையா

விஜய் மல்லையாவிற்குக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைந்த இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இக்கடன் தொகையை வசூலிக்கும் பணியில் எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு அமைத்து இயங்கி வரும் நிலையில், விஜய் மல்லையாவின் 5,646.54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு

எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு

இதற்காக எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறையிடம் ஆலோசனை நடத்தியது. இதற்கிடையில் Prevention of Money Laundering Act (PMLA) நிதீமன்றம் கடன் தொகையை ஈடு செய்ய விஜய் மல்லையா சொத்துக்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது.

5,646.54 கோடி ரூபாய் சொத்து விற்பனை
 

5,646.54 கோடி ரூபாய் சொத்து விற்பனை

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு அறிவிக்கப்பட்டு உள்ள 5,646.54 கோடி ரூபாய் சொத்துக்களை விற்பனை செய்து முடித்தால், விஜய் மல்லையா கடன் மோசடி செய்த தொகையில் 91 சதவீத அசல் தொகை அதாவது Principal தொகையைப் பெற முடியும் எனத் தெரிகிறது. இதற்குப் பின் வட்டி தொகை உள்ளது.

யுனைடெட் ப்ரீவரிஸ் பங்குகள்

யுனைடெட் ப்ரீவரிஸ் பங்குகள்

மேலும் விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான யுனைடெட் ப்ரீவரிஸ் நிறுவனத்தில் இருக்கும் 16.165 சதவீத பங்குகளை நடப்பு நிதியாண்டின் முதல் அல்லது 2வது காலாண்டில் பங்குச்சந்தையில் லார்ஜ் பிளாக் டீல் வாயிலாகா விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

5,500 கோடி ரூபாய் மதிப்பிலான யுபி பங்குகள்

5,500 கோடி ரூபாய் மதிப்பிலான யுபி பங்குகள்

5,500 கோடி ரூபாய் மதிப்பிலான யுனைடெட் ப்ரீவரிஸ் நிறுவனத்தின் 16.165 சதவீத பங்குகளை எஸ்பிஐ தலைமையிலான குழு எஸ்பிஐ கேப்பிடல் மூலம் ரீடைல் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது.

இதோடு ஏற்கனவே அமலாக்கத் துறை 4.13 கோடி ரூப்ய் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை Debt Recovery Tribunal (DRT) டிமேட் கணக்கிற்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Consortium readying for Selling Rs 5,646 Crore worth of Vijay Mallya's Assets

SBI Consortium readying for Selling Rs 5,646 Crore worth of Vijay Mallya's Assets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X