இதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் நமக்கு பேருதவியாக இருப்பது டிஜிட்டல் வங்கி சேவை தான். ஆனால் அதுவே சில நேரங்கங்களில் பிரச்சனையாகவும் மாறக்கூடும்.

 

ஆக அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு எச்சரிக்கையாக, இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்.

மக்களுக்கு மிகுந்த பயனுள்ள டிஜிட்டல் சேவைகள் தான், ஒரு நேரத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகவும் உள்ளது. ஆக எப்படியெல்லாம், டிஜிட்டல் மோசடியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம், வாருங்கள் பார்க்கலாம்.

பெரும்பாலான மோசடிகள்

பெரும்பாலான மோசடிகள்

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மோசடிகள் மொபைல் எண் மற்றும் இணையம் மூலமாகத் தான் ஏற்படுகிறது. ஆக அடிக்கடி அத்தகைய மெயில் ஐடியையும், மொபைல் எண்ணும் சரியாக இருகிறதா? அதை எப்படி தொடர்ந்து நம்முடன் தொடர்பில் வைத்துக் கொளவது, குறிப்பாக எஸ்பிஐ வாடிக்கையாளார்கள் எப்படி தங்களை இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து கொள்வது வாருங்கள் பார்க்கலாம்.

பிரச்சனைகளை பற்றி அறிய உதவும்

பிரச்சனைகளை பற்றி அறிய உதவும்

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ, புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை எப்படி தங்களது சேமிப்பு கணக்குடன் இணைப்பது? ஏனெனில் இந்த இணைப்பானது உங்களது வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள உதவும், ஏனெனில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றி நீங்கள் உடனடியாக அறிய இவைகள் தான் உதவும்.

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை
 

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை

ஏனெனில் நீங்களோ அல்லது வேறு யாரேனும் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும்போது உங்களது மொபைல் எண்ணுக்கு செய்தி வரும். ஆனால் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்வதை யாராலும் தடுக்க முடியாது. அது சரியான நேரத்தில் உங்களுக்கு தெரியவும் வாய்ப்பில்லை. ஆக இதனால் பின்னர் அவஸ்தைபட போவதும் நீங்கள் தான்.

சரியான மொபைல் நம்பர்

சரியான மொபைல் நம்பர்

அதிலும் தற்போது எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள ஏடிஎம் திருத்தங்களில், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும் போது ஓடிபி எண் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் என்பது மிக வரவேற்கதக்க விஷயம் தான். ஆக இதன் மூலம் நீங்கள் உங்களது சரியான மொபைல் எண் இருந்தால் மட்டுமே உங்களது பணத்தினை 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியும். எனினும் பகல் நேரத்தில் அந்த சேவை இல்லை என்பதனையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடனடியாக மாற்றுங்கள்

உடனடியாக மாற்றுங்கள்

அதே நேரம் ஏதாவது ஒரு காரணத்தால் உங்களது பழைய நம்பரை மாற்ற நேரிட்டாலோ அல்லது மெயில் ஐடியை மாற்றினாலோ, அதை உடனடியாக வங்கிக்கு உடனே அதை தெரியப்படுத்தவும். ஏனெனில் மொபைல் எண் மட்டும் அல்ல, மெயில் ஐடி மூலமாக உங்கள் தகவல்களை திருட முடியும். மோசடி செய்ய முடியும்.

எப்படி மொபைல் எண்ணினை மாற்றுவது?

எப்படி மொபைல் எண்ணினை மாற்றுவது?

எஸ்பிஐ வங்கி இணைய சேவையை லாகின் செய்து, அங்கு உங்களது மை அக்கவுன்ட்ஸ் & புரஃபைல் ஆப்சனை க்ளிக் செய்யவும். அதில் புரஃபைல் லிங்கை க்ளிக் செய்து உங்களது தனிப்பட்ட விவரம் மற்றும் மொபைல் எண்ணை பகுதிக்கு செல்லவும். இங்கு திருத்து ஐகானைக் கிளிக் செய்து அப்டேட் செய்ய வேண்டும்.

புதிய மொபைல் எண்

புதிய மொபைல் எண்

தகவல்களைக் திருத்தும் பகுதிக்கு சென்று புதிய மொபைல் எண் அல்லது புதிய மெயில் ஐடியை உள்ளிடவும். இதன் மூலம் கிடைக்கும் ஒடிபியை பயன்படுத்தி புதிய நம்பரை கொடுக்கவும். இதன் பிறகு சப்மிட் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை உங்களது மொபைல் எண், மற்ற விவரங்கள் சரியாக உள்ளதா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

மெயில் ஐடியை எப்படி மாற்றுவது?

மெயில் ஐடியை எப்படி மாற்றுவது?

எஸ்பிஐ மொபைல் பயன்பாடு வழியாக மொபைல் எண், மெயில் ஐடியை எப்படி மாற்றுவது? முதலில் உங்களது எஸ்பிஐ மொபைல் பயன்பாட்டினை லாகின் செய்து கொள்ள வேண்டும். அங்கு மெனுவில் இருந்து மை புரஃபைல் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். அங்கு உங்களது புதிய மெயில் ஐடியை கொடுத்து சமர்பிக்கவும்.

வங்கியை அணுகுங்கள்

வங்கியை அணுகுங்கள்

உங்களது மொபைல் எண்ணும், மெயில் ஐடியும் சரியாக செயல்பாட்டில் இருக்கும் போது, உங்களது வங்கி கணக்கில் மோசடி செய்யப்படுவதாக தோன்றினால் உடனடியாக நீங்கள் வங்கிக் கிளையை அணுக வேண்டும். இவை எல்லாமே உங்கள் மொபைல் கையில் இருந்தால் மட்டுமே முடியும். ஆக இதன் மூலம் தவறுகளை ஆரம்பத்திலேயே உங்களால் தடுக்க முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இது எஸ்பிஐ மட்டும் அல்ல, அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஏற்ற ஒரு விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI customers should be alerted this will be done without registering mobile number

SBI updates,, SBI customers should be alerted this will be done without registering mobile number
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X