எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கே இந்த கதியா.. என்ன செய்யப் போகிறது அரசு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதார சக்கரம் கடந்த ஒரு வருட காலமாக நிறைய சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இதை ஜிடிபி, ஆட்டோமொபைல் விற்பனை சரிவு, தொழில் துறை உற்பத்தி சரிவு, வேலை இல்லா திண்டாட்டம் என பல தரவுகள் உறுதிப்படுத்திக் கொண்டு இருக்கின்றன.

 

இந்த சிக்கல்களைச் சரி செய்ய, ஆர்பிஐ களம் இறங்கியது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் ஐந்து முறை வட்டி விகிதங்களைக் குறைத்தது ஆர்பிஐ.

ஆனால், நேற்று நடந்து முடிந்த, ஆர்பிஐயின் பணக் கொள்கைக் கூட்டத்தில், இந்த முறை வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள்.

வட்டி விகிதங்கள் குறைப்பு

வட்டி விகிதங்கள் குறைப்பு

ஆர்பிஐ தன் வட்டி விகிதங்களைக் குறைக்காத போதும், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தன் கடன்களுக்கான, வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள். கடன்களுக்கு வட்டி விகிதங்களைக் குறைத்த அதே நேரத்தில், ஃபிக்ஸட் டெபாசிட் என்று சொல்லப்படும் FD-க்களுக்கும் வட்டி விகிதங்களையும் குறைத்து இருக்கிறார்கள். எவ்வளவு வட்டி விகிதம் குறைத்து இருக்கிறார்கள்..? வாருங்கள் பார்ப்போம்.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்

எளிதில் வங்கிக்கு பணம் கிடைத்துக் கொண்டு இருப்பதாலும், கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து இருப்பதாலும், ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள். தற்போது குறைக்கப்பட்டுள்ள இந்த புதிய வட்டி விகிதமானது பிப்ரவரி 10 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

புதிய FD வட்டி - பொது மக்கள்
 

புதிய FD வட்டி - பொது மக்கள்

இது பொதுமக்களுக்கான வட்டி விகிதம்.

7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 4.50%

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 5%

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 5.50%

211 நாட்கள் முதல் 1 வருடம் வைப்புத் தொகைக்கு- 5.50%

1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 6%

2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 6%

3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 6%

5 வருடம் முதல் 10 வருடம் -6%

பொது மக்கள் ஒப்பீடு

பொது மக்கள் ஒப்பீடு

ஜனவரி மாதத்தில் கொடுத்துக் கொண்டிருந்த வட்டி விகிதங்களை விட சுமார் 0.1 - 0.5 சதவிகிதம் வரை வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள். ஒப்பீடுகளை அட்டவணையில் பார்க்கவும்

பொதுமக்களுக்கான எஸ்பிஐ FD வட்டி ஒப்பீடு
டெபாசிட் காலம் புதிய வட்டி (%) முந்தைய வட்டி (%) மாற்றம் (%)
7 days to 45 days 4.50 4.50 0.00
46 days to 179 days 5.00 5.50 0.50
180 days to 210 days 5.50 5.80 0.30
211 days to less than 1 year 5.50 5.80 0.30
1 year to less than 2 year 6.00 6.10 0.10
2 years to less than 3 years 6.00 6.10 0.10
3 years to less than 5 years 6.00 6.10 0.10
5 years and up to 10 years 6.00 6.10 0.10

புதிய FD வட்டி - மூத்த குடிமக்கள்

புதிய FD வட்டி - மூத்த குடிமக்கள்

இது மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கொடுக்கும் வட்டி விகிதம்.

7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 5%

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 5.50%

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 6%

211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 6%

1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 6.50%

2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 6.50%

3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 6.50%

5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 6.50%

மூத்த குடி மக்கள் ஒப்பீடு

மூத்த குடி மக்கள் ஒப்பீடு

ஜனவரி மாதத்தில் கொடுத்துக் கொண்டிருந்த வட்டி விகிதங்களை விட சுமார் 0.1 - 0.5 சதவிகிதம் வரை, மூத்த குடிமக்களுக்கும் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள். ஒப்பீடுகளை அட்டவணையில் பார்க்கவும்.

மூத்த குடி மக்களுக்கான எஸ்பிஐ FD வட்டி ஒப்பீடு
டெபாசிட் காலம் புதிய வட்டி (%) முந்தைய வட்டி (%) மாற்றம் (%)
7 days to 45 days 5.00 5.00 0.00
46 days to 179 days 5.50 6.00 0.50
180 days to 210 days 6.00 6.30 0.30
211 days to less than 1 year 6.00 6.30 0.30
1 year to less than 2 year 6.50 6.60 0.10
2 years to less than 3 years 6.50 6.60 0.10
3 years to less than 5 years 6.50 6.60 0.10
5 years and up to 10 years 6.50 6.60 0.10

ஜூலை 2014 எஸ்பிஐ வட்டி விகிதங்கள்

ஜூலை 2014 எஸ்பிஐ வட்டி விகிதங்கள்

7 days to 90 days - 7.00 %

91 days to 179 days - 7.00 %

180 days to 210 days - 7.00 %

211 days to less than 1 year - 7.50 %

1 year to less than 2 years - 9.00 %

2 years to less than 3 years - 9.00 %

3 years to less than 5 years - 8.75 %

5 year and upto 10 years - 8.50 %

பிழைக்க முடியுமா..?

பிழைக்க முடியுமா..?

2014 ஜூலை மாதத்தில், ஒரு எஸ்பிஐ வாடிக்கையாளர், 10 லட்சம் ரூபாயை, எஸ்பிஐயில் 2 வருட FD-க்கு 9 சதவிகிதம் வாங்கிக் கொண்டு இருந்தார் என்றால், 10 லட்சம் ரூபாய்க்கு 90,000 ரூபாய் தான் ஒரு வருடத்துக்கு கிடைக்கும். ஆனால் இன்று, அதே எஸ்பிஐ வாடிக்கையாளர், அதே 10 லட்சம் ரூபாயை எஸ்பிஐயில் 2 வருட FD டெபாசிட் செய்தால் 60,000 ரூபாய் தான் ஒரு வருடத்துக்கு கிடைக்கும் என்பதை எப்படி ஜீரணித்துக் கொள்வது என்றே தெரியவில்லை. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கு..?

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை எல்லாம் அரசு வங்கிகளை நம்பி FD-யில் போட்டு வைத்து விட்டு வரும் வட்டி வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கும் மூத்த முடி மக்களின் நிலை இன்னும் சிரமமாகி இருக்கிறது. விலைவாசி உயர்வு மற்றும் மருத்துவ செலவுகளை எல்லாம் இவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

இரு முனைக் கத்தி

இரு முனைக் கத்தி

ஒரு பக்கம் பொருளாதாரம் மேம்பட இந்தியப் பொருளாதாரத்தில் நிறைய பணம் புழங்க வேண்டும். அதற்கு வங்கியின் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் விலை வாசி உயர்வால் மேற்கொண்டு வட்டி விகிதங்களைக் குறைக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ. மறு பக்கம் வங்கி FD வட்டி விகிதங்கள் சரிவதால், மூத்த குடிமக்களின் கையில் புழங்கும் பணம் கணிசமாக குறைந்து இருக்கிறது. இதை எல்லாம் அரசு எப்படி சமாளிக்கப் போகிறதோ தெரியவில்லை. நல்ல முடிவாக எடுப்பார்கள் என நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sbi Fixed deposit interest rate drastic down

State Bank of India has reduced its fixed deposit interest rates. The one year to 10 year deposits are giving only 6 percent returns.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X