ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமான, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகரலாபம் இருமடங்கு அதிகரித்து, 300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 130 கோடி ரூபாயாக லாபம் கண்டு இருந்ததாக, பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 45 சதவீதம் அதிகரித்து, 18,458 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 12,745 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
இதுவே நிகர பிரீமிய வருவாய் 22 சதவீதம் அதிகரித்து, 12,858 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 10,111.51 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட இந்த காலாண்டில், நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 1,86,360 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 1,54,760 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஏயுஎம் வளர்ச்சி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த பாதியாண்டில் நிகரலாபம் 680 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் பாதியில் 500 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 38 சதவீத வளர்ச்சியாகும்.
புதிய பிரீமிய வர்த்தகம் 15 சதவீதம் அதிகரித்து 9000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 7,820 கோடி ரூபாயாக இருந்தது.
ஆக மொத்தத்தில் நெட்வொர்த் மதிப்பு 20 சதவீதம் அதிகரித்து 9,660 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 8,070 கோடி ரூபாயாக இருந்தது.
கொரோனாவினால் இந்த நிறுவனம் சற்று பாதிப்பினை கண்டு இருந்தாலும், தேவை அதிகரிப்பு லாபத்திற்கு வழிவகுத்துள்ளது. புதிய பிரீமியமும் அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பிஎன்பி பாரிபஸ் நிறுவனத்தின் (BNP Paribas Cardif SA) கூட்டமைப்பாகும்.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 4 ரூபாய் சரிந்து, 774 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.