நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துக்களை, இன்று ஏலம் விட உள்ளதாக அறிவித்துள்ளது.
நீங்கள் ஒரு வீட்டையோ அல்லது ஏதேனும் சொத்துக்களை வாங்க தயாராக இருக்கிறீர்கள் என்றால், இது உங்களுக்கு சிறப்பான வாய்ப்பே. ஏனெனில் இது சந்தை விலையை விட குறைந்த விலையில், சொத்துக்களை வாங்க, உங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
எஸ்பிஐ-யின் இந்த ஏலத்தில் அனைத்து வகையான வீட்டு வசதி, குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை சொத்துக்கள் என ஏராளம் உள்ளன.

அடமானக் கடன்
வங்கிகளின் முக்கியமான வேலையே கடன் தருவது தான். எனினும் அந்த கடனை பல வழிகளில் வழங்குகின்றன. அதிலும் சில கடன் வகைகளை சொத்துகளுக்கு பிணையமாகவும் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் பல்வேறு தேவைகளை முன்னிட்டு இந்த கடனை பெறும் வாடிக்கையாளர்கள், வீட்டின் பெயரிலோ அல்லது ஏதாவது சொத்தின் பெயரிலோ இந்தக் கடனை பெறலாம். ஆனால் அதனை சரியான நேரத்தில் செலுத்த தவறும்பட்சத்தில், வங்கிகள் அதனை ஏலத்தில் விடுகின்றன. பொதுவான இந்த மாதிரியாக ஏலத்தில் விடபப்படும் சொத்துகள் சற்று குறைவாகவே இருக்கும். ஆக குறைந்த விலையில் சொத்து வாங்க இது நல்ல வாய்ப்பே.

கடன் கட்டாதவர்களின் சொத்துக்கள் ஏலம்
அப்படி கடன் பெறுபவர்களில், உரிய காலகட்டத்தில் கடனை திரும்ப செலுத்தாதவர்களின் சொத்துகளை, வங்கிகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடுகின்றன. அப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் சொத்துக்களை எஸ்பிஐ இன்று ஏலமிடவுள்ளது. இதுபோன்ற சொத்துகளைத் தான் தற்போது வங்கி ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்கிறது.

உதவிக்கு
ஹெல்ப்லைன் எண்- (033-40602403 / 40067351 / 40628253 / 40645316 / 40645207 / 40609118) SBI வழங்கியுள்ளது. ஆக இதன் மூலம் உங்களது சந்தேகங்களை தெளிபடுத்திக் கொள்ளலாம். ஏலத்திற்கு வழங்கப்பட்ட பொது அறிவிப்பில் சொத்து, இருப்பிடம், அளவீடுகள் மற்றும் பிற தகவல்களின் ஃப்ரீஹோல்ட் அல்லது குத்தகை பற்றிய தகவல்கள் உள்ளது. ஆக இ-ஏலம் மூலம் நீங்கள் சொத்து வாங்க விரும்பினால், வங்கிக்குச் சென்று செயல்முறை மற்றும் தொடர்புடைய சொத்து பற்றிய எந்த தகவலையும் பெறலாம்.

சொத்து குறிதான தகவல்கள்
வங்கி கிளையில், இந்த சொத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்க ஒரு நபர் நியமிக்கப்படுகிறார். ஆக விருப்பமுள்ளவர்கள் வங்கியினை அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அல்லது எஸ்பிஐயின் இந்த ஆன்லைன் ஏலத்தில் விடும் சொத்துக்களின் முழுமையான தகவல்கள் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.

ஏலத்தில் எப்படி கலந்து கொள்வது?
எஸ்பிஐயின் இந்த மின் ஏலத்தில் கலந்து கொள்ள e-Auction என்ற தளத்தில் சென்று உங்களது மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
இதற்கு பிறகு உங்களது கேஒய்சியை சரியான முறையில் பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் அப்லோட் செய்ய வேண்டும். இதனை வங்கி சரிபார்க்கும். இதற்காக வங்கி இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த மின் ஏலத்தில் கலந்து கொள்ள ஆன்லைன் பேமென்ட் அல்லது ஆஃப் லைன் பேமென்ட் என்றாலும் அதற்கான ரசீதினையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். வங்கிகள் உங்களை ஆவணங்களை சரிபார்த்து உங்களுக்கு தெரியப்படுத்தும்.
இதன் பிறகு ஏலத்தின் போது நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையின் படி ஏலம் நடக்கும் நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும்.

இன்று ஏலம்
இந்த ஏலம் இன்று நடக்கவுள்ள நிலையில், இன்று உங்களால் கலந்து கொள்ள முடியாது. எனினும் இதனை தெரிந்து கொண்டால், அடுத்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். இது போன்ற ஏலங்கள் உங்களுக்கு குறைவான விலையில் சொத்துக்களை வாங்க வாய்ப்பாக அமையும்.