நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தினை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். இந்த வட்டி விகிதமானது கடைசியாக கடந்த செப்டம்பர் 10 அன்று மாற்றப்பட்டது.
வங்கி வைப்பு நிதிக்களுக்கான வட்டி விகிதம் குறைந்தாலும், நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ஒரு கணிசமான வருவாயினைக் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடாக இந்த எஃப்டிக்கள் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு முதலீடும் பாதுகாப்பில்லாததாகத் தான் கருதப்படுகிறது. சில முதலீடுகள் முதலீட்டிற்கே பங்கம் விளைவிக்கும் நிலையில், குறைவான வட்டியானாலும், மக்களுக்கு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஆக இந்த வைப்பு நிதிகள் உங்களின் வருவாயினை உறுதியளிக்கின்றன.
அதோடு மற்ற முதலீடுகளைப் போல் சந்தை ஏற்ற இறக்கங்களால் இது பாதிக்கப்படாது. அதோடு இந்த பிக்ஸட் டெபாசிட்டுகளை எளிதில் புதுபிக்கலாம் என்பதால், இது மக்களுக்கு எளிதான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் மூத்த குடி மக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது. இதனால் இது மூத்த குடிமக்களுக்கு ஏதுவான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
டிசபரில் வங்கிகளுக்கு இவ்வளவு நாள் விடுமுறையா.. முன்னாடியே பணம் எடுத்து வச்சுக்கங்க..!
பொதுமக்களுக்கான வட்டி விகிதம்
- 7 நாட்கள் முதல் - 45 நாட்கள் வரையில் வட்டி விகிதம் - 2.90%
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு - 3.9%
- இதே 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.40%
- 211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.40%
- இதே 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 4.9%
- 2 வருடம் முதல் 3 வருடத்துக்குள் - 5.1%
- 3 வருடம் முதல் 5 வருடத்துக்குள் - 5.3%
- 5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 5.4%
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்
- 7 நாட்கள் முதல் - 45 நாட்கள் வரையில் வட்டி விகிதம் - 3.40%
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு - 4.4%
- 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.90%
- 211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.90%
- 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 5.40%
- 2 வருடம் முதல் 3 வருடத்துக்குள் - 5.6%
- 3 வருடம் முதல் 5 வருடத்துக்குள் - 5.8%
- 5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 6.2%