அதானியா மோசடி செய்தது.. அதுவும் ரூ.29,000 கோடி ஊழலில் பங்கா.. செக் வைத்த உச்ச நீதிமன்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக திகழும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம், நிலக்கரி இறக்குமதி செய்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

 

இந்த நிலையில் அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதியில் ஊழல் செய்ததாக குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன.

நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்தும் 40 தனியார் நிறுவனங்கள் இந்தோனேசியாவில் இருந்து அதிகளவு நிலக்கரியினை இறக்குமதி செய்கின்றன.

ஈரான், அமெரிக்கா போர் பதற்றம்.. சவுதி அரேபியாவில் என்ன பாதிப்பு?

அதானிக்கு சாதகமான தீர்ப்பு

அதானிக்கு சாதகமான தீர்ப்பு

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் மும்பை உயர் நீதிமன்றம் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதோடு வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அனுப்பிய கடிதங்கள் ரோகேட்டரியையும் ரத்து செய்து, அதோடு 2016 முதல் நடந்து வரும் ஏஜென்சியின் விசாரணைகளையும் நிறுத்தியது.

நிலக்கரியில் மோசடி

நிலக்கரியில் மோசடி

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் மிகைப்படுத்தியதாகக் கூறப்படும், அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் இரண்டு நிறுவனங்கள், இரண்டு எஸ்ஸார் நிறுவனங்கள், ஒரு சில பொதுத்துறை மின் நிறுவனங்கள், உள்பட 40 நிறுவனங்கள் 2011 - 2015க்கு இடைப்பட்ட காலத்தில் 29,000 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதானி தான் அதிகம் இறக்குமதி செய்கிறது
 

அதானி தான் அதிகம் இறக்குமதி செய்கிறது

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மொத்த நிலக்கரியில் சுமார் 90 சதவிகிதம் இந்தோனேசியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. மீதமுள்ளவற்றில் 5 சதவிகிதம் ஆஸ்திரேலியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் சுமார் 70 சதவிகிதம் அதானி நிறுவனம் தான் இறக்குமதி செய்கிறது.

அதானி ஊழல்

அதானி ஊழல்

அதானி நிறுவனம் கடந்த 2011 - 2015 வரையில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இறக்குமதி செய்த நிலக்கரியில் சுமார் 70 சதவிகிதம் கூடுதல் மதிப்பு அடிப்படையில் இறக்குமதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு

இந்த முறைகேடு தொடர்பாக வருவாய் புலனாய்வுத் துறை கடந்த 2016லியே விசாரணையை தொடங்கியது. மேலும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் கிளைகளின் மூலமாக இந்த பண மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் பின் தான் பெரும் மோசடி நடந்திருப்பதை உணர்ந்த டிஆர்ஐ, இதற்கான விளக்கம் கோரி சம்பந்தபட்ட வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதானி வழக்கு

அதானி வழக்கு

எனினும் அதானி நிறுவனம் அதனை எதிர்த்து மும்பை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு பின்பு மும்பை உயர் நீதிமன்றம், அதானிக்கு சாதகமாக டிஆர்ஐ விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தது. ஆனால் இதன் பின்னர் டிஆர்ஐ உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதன் படி இன்று உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதோடு, சம்பந்தபட்ட வங்கிகள் விவரங்களை தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SC stayed investigation against Adani a coal import thousands of crores scam

Sc stays Bombay high court that quashed all LRs sent by DRI to foreign countries in connection with alleged overvaluation of import coal between 2011 – 2015 by Adani group.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X