கௌதம் அதானிக்கு அடுத்த ஜாக்பாட்.. செபி சொன்ன ஒற்றை வார்த்தை பதில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய முதலீட்டாளர்களுக்கு இந்த வருடம் அதிக லாபத்தைக் கொடுத்தது சந்தையின் முன்னணி நிறுவனங்களாக இருந்தாலும், ரீடைல் முதலீட்டாளர்கலுக்கு அதிக லாபத்தைக் கொடுத்தது ஐபிஓ தான். 2020ல் ஏற்பட்ட சரிவை சமாளிக்கப் பலருக்கும் இந்த ஐபிஓ பெரும் துணையாக இருந்தது.

 

மனிஷ் மல்ஹோத்ரா ஜி.. 40% கொடுங்க ஜி.. முகேஷ் அம்பானி செம டீலிங்..!

இதனால் பல நிறுவனங்கள் மிகவும் ஆர்வமாக ஐபிஓ வெளியிட்டு அதிகளவிலான முதலீட்டை திரட்டினர். சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தைப் பெரிய அளவில் ஐபிஓ மூலம் குறைக்கப்பட்டு உள்ளது.

அதானி வில்மார்

அதானி வில்மார்

இந்நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த மிக முக்கியமான நிறுவனமான அதானி வில்மார் நிறுவனத்தின் ஐபிஓ-விற்குப் பல தடைகளைத் தாண்டி இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஒப்புதல் அளித்துள்ளது. செபி சொன்ன ஓகே என்ற பதிலால் கௌதம் அதானி மட்டும் அல்லாமல் ரீடைல் பங்கு முதலீட்டாளர்கள் முதல் பெரும் பங்கு முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதானி வில்மார், ஸ்டார் ஹெல்த்

அதானி வில்மார், ஸ்டார் ஹெல்த்

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் அடிப்படையில் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி வில்மார் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் பெரும் தொகையை முதலீடாகப் பெற உள்ளது.

4,500 கோடி ரூபாய் ஐபிஓ
 

4,500 கோடி ரூபாய் ஐபிஓ

இந்த ஐபிஓ ஒப்புதல் மூலம் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் FMCG பிரிவான அதானி வில்மார் பங்குகள் சுமார் 4,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட உள்ளது. அதானி வில்மார் இந்தியாவின் முன்னணி எண்ணெய் விற்பனை பிராண்டான பார்சூன் பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய் உட்படப் பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

2027 இலக்கு

2027 இலக்கு

அதானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் ஆசியாவின் முன்னணி அக்ரி வர்த்தகப் பிரிவான வில்மார் இண்டர்நேஷனல் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணி நிறுவனம் தான் இந்த அதானி வில்மார். 2027க்குள் இந்தியாவின் மிகப்பெரிய உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்பதை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளது.

7வது நிறுவனம்

7வது நிறுவனம்

மேலும் அதானி குழுமத்தில் ஏற்கனவே 6 நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள வேளையில், 7வது நிறுவனமாக அதானி வில்மார் பட்டியலிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்

மேலும் செபி ஒப்புதல் அளித்துள்ள ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் இந்த ஐபிஓ மூலம் சுமார் 5,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SEBI approved IPO of Adani Wilmar, Star Health Insurance

SEBI approved IPO of Adani Wilmar, Star Health Insurance
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X