செபி வளையத்தில் இந்திய பங்குச் சந்தையின் பிதாமகன் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் ஒரு கண்காணிப்பு அமைப்பு தான் செபி (Securities & Exchange Board of India - SEBI).

 

இந்த செபி அமைப்பு இந்திய பங்குச் சந்தையின் பிதாமகரான ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவுக்கே, ஒரு இன்சைடர் டிரேடிங் விவகாரத்தில் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.

ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவோ, இந்திய பங்குச் சந்தையில் எந்த பங்கைத் தொட்டாலும் லாபம் பார்க்கக் கூடிய பெரிய முதலீட்டாளர்.

இன்சைடர் டிரேடிங் என்றால் என்ன?

இன்சைடர் டிரேடிங் என்றால் என்ன?

ரவி, ராம் பிரைவேட் லிமிடெட் என்கிற கம்பெனியில் பெரிய அதிகாரியாகவோ அல்லது வேறு பெரிய பொறுப்பிலோ இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அந்த கம்பெனி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ரவிக்கு, ராம் பிரைவேட் லிமிடெட் கம்பெனி, எதிர்காலத்தில் என்ன செய்ய இருக்கிறது, இதற்கு முன் என்ன பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது போன்ற விவரங்கள் தெரியும்.

இன்சைடர் டிரேடிங் 1

இன்சைடர் டிரேடிங் 1

இந்த விவரங்களை ரவி தன் நண்பர் சக்திக்கு சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது சக்தி, ரவி சொன்ன தகவல்களை வைத்து, ராம் கம்பெனி பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்த்துவிட்டார் என்றால் அதற்குப் பெயர் தான் இன்சைடர் டிரேடிங் (Insider Trading).

ஆப்டெக் கம்பெனி
 

ஆப்டெக் கம்பெனி

இப்போது, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவும் இந்த இன்சைடர் டிரேடிங் பிரச்சனையில் தான் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறார். ஆப்டெக் என்கிற கம்பெனியில் இன்சைடர் டிரேடிங் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறார். அதற்கு தற்போது விளக்கம் கேட்டு செபி அமைப்பு நோட்டிஸ் வழங்கி இருக்கிறது.ஆப்டெக் ஒரு ஐடி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம். இந்த கம்பெனியை ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவும், அவரது குடும்பத்தினர்கள் தான் வைத்திருக்கிறார்கள்.

2016

2016

நான்கு வருடங்களுக்கு முன்பு மே 2016 - அக்டோபர் 2016 வரையான காலத்தில், ஆப்டெக் பங்குகளில் டிரேட் செய்ததற்காக, ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் குடும்பத்தினர்கள், ஆப்டெக் கம்பெனியின் இயக்குநர் குழு உறுப்பினர்கள் என பலரையும், செபி விசாரித்துக் கொண்டு இருக்கிறதாம்.

Portfolio

Portfolio

ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் பங்கு முதலீடு ஃபோர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளில் ஆப்டெக்கும் ஒன்று. அதே போல ராகேஷ் ஜுன் ஜுன் வாலா வைத்திருகும் பங்குகளில், இந்த ஆப்டெக் கம்பெனியில் மட்டும் தான் அவருக்கு நிர்வாக ரீதியில் பலம் இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sebi issued show-cause notice to Rakesh Jhunjhunwala for alleged insider trading

The indian market regulator Sebi issued show-cause notice to stor Rakesh Jhunjhunwala for alleged insider trading in aptech shares.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X